Yarl Forum
ஸ்கந்தா மகாஜனா துடுப்பாட்டம் நேற்று விறுவிறுப்பாக ஆரம்பம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: ஸ்கந்தா மகாஜனா துடுப்பாட்டம் நேற்று விறுவிறுப்பாக ஆரம்பம்! (/showthread.php?tid=443)



ஸ்கந்தா மகாஜனா துடுப்பாட்டம் நேற்று விறுவிறுப்பாக ஆரம்பம்! - SUNDHAL - 03-25-2006

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக் கும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக் கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் "நாயகர்களின் போர்' (ஆச்ttடூஞு ணிஞூ tடஞு ஏஞுணூணிண் ஞுண்)துடுப்பாட்டப் போட்டி ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி யது.
நண்பகல் ஒரு மணிக்கு அணிகள் களம் இறங்கின. பூவா தலையா போட்டு வெற்றி யீட்டிய ஸ்கந்தா அணி மகாஜனா அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
மகாஜனாக் கல்லூரி அணி நேற்றைய தினம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
மகாஜனாக் கல்லூரியின் சார்பில் பிரக லாதன் 50 ஓட்டங்களையும் மயூரன் 26 ஓட் டங்களையும் ஆகக் கூடிய ஓட்டங்களாகப் பெற்றுக் கொடுத்தனர்.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்து வீசிய நிரோஜன் 46 ஒட்டங்களுக்கு 3 விக் கெட்டுக்களையும் நிசாகரன் 32 ஓட்டங் களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி னார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந் தவரோதயக் கல்லூரி ஆட்டநேர முடிவில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதேநேரம் ஆட்டமிழக்காமல் நிசா கரன் 14 ஒட்டங்களுடனும் ஜெயன் 02 ஓட் டங்களுடனும் இருக்கின்றார்கள்.
இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் மீண் டும் ஆரம்பமாகும்.
"உதயன் சுடர் ஒளி' நிறுவனங்கள் மற் றும் செலான் வங்கி என்பவற்றின் அனு சரனையுடன் இந்தத் துடுப்பாட்டப் போட்டி நடைபெறுகிறது.
Thanks:uthayan...