![]() |
|
விலாசம் குறும்படம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: விலாசம் குறும்படம் (/showthread.php?tid=4409) |
விலாசம் குறும்படம் - Mathan - 04-23-2005 விலாசம் குறும்படம் <img src='http://www.appaal-tamil.com/images/stories/salanam/vilasam.jpg' border='0' alt='user posted image'> <span style='color:blue'><b>குறும்படம் பார்க்க இங்கே அழுத்துங்கள் http://www.appaal-tamil.com/index.php?opti...=11[/b][/color] அப்பால் தமிழ் இணையத்தளத்தில் "விலாசம்" என்கிற குறும்படம் இணைக்கப்பட்டுள்ளது. அக்குறும்படத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் அங்கு பதியுங்கள். அது அதனைப் படைத்த இளம் படைப்பாளிகளை மேலும் மேலும் ஊக்குவிக்கும். 17 நிமிடங்களில் கதைசொல்லும் இக்குறும்படம் பிரான்சில் உள்ள நல்லுர் ஸ்தான் கழக கலைப்பிரிவால் 2004ல் தயாரிக்கப்பட்டது. இலண்டனில் "விம்பத்தால்" நடத்தப்பட்ட குறும்படப்போட்டியில் ஒளிப்பதிவிற்கான விருதினைப் பெற்றது. ஆக்கியவர்:- வதனன் ஆதரவு: நல்லூர் ஸ்தான் ஒளிப்பதிவு: சுகந்தன், சுகிர், குணா நாடு:- பிரான்ஸ் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்களின் அவலநிலை - வன்முறைகளில் ஈடுபடும் அவர்களின் வாழ்நிலை - அவர்களைத் வழிநடத்தவேண்டிய சமூகம் தொட்டதற்கெல்லாம் குறைகூறும் இழிநிலை - சாதாரண விடயத்தைப் பெரிதுபடுத்தி வதந்தி பரப்பும் கீழ்நிலை --> இதுதான் கதைக்கரு! நண்பனின் உதவியுடன் பிரான்சிற்கு அகதியாக வருகின்ற ஒரு இளைஞன் காலத்தின் சுழற்சியில் நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் வன்முறையில் ஈடுபட்டு கடைசியில் உயிராய் மாய்க்கும் பரிதாபத்தை அழகாக படமாக்கியிருக்கிறார்கள் பிரான்சில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள். அதிகமான "விசுவல் எஃபெக்ட்ஸ்" இல்லாமால், கதையில் இன்னும் கொஞ்சம் சீரான ஒழுங்கமைப்பையும் கையாண்டிருந்தால் இக்குறும்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் இந்த இளைஞர்களை பாராட்டி ஊக்குவிக்கும் கடமை எமக்குண்டு. இவர்கள் இன்னும் இன்னும் வளர்வார்கள். சமுதாயச் சீர்கேடுகளைக் கோடிட்டுக் காட்டுவார்கள்.</span> தகவல் நன்றி - இளைஞன் மற்றும் அப்பால் தமிழ் - இளைஞன் - 04-24-2005 நன்றி மதன். நானே நேற்று இணைக்க வேண்டுமென்றிருந்தேன். எனது வேலையை சுலபமாகக்கிவிட்டீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இக்குறும்படத்தைப் பார்த்தீர்களா? எப்படியுள்ளது? உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். - Mathan - 04-26-2005 முதலில் குறும்படத்தை தந்த இளைஞர்களுக்கு அவர்களுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள். தனியாக புலம் பெயரும் இளைஞனின் வாழ்க்கையை கதை கருவாக எடுத்திருக்கின்றார்கள். அவ்ர்கள் நிறைய விடயங்கள் சொல்ல வருகின்றார்கள், ஆனால் படமாக்கப்பட்ட விதத்தில் உள்ள் சில குறைபடுகள் காரணமாக அவை முழுமையாக பார்வையாளரை போய் சேரவில்லை என்று எண்ணுகின்றேன். ஒளிப்பதிவு தெளிவில்லாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருகின்றது. இளைஞன் குறிப்பிட்டது போல் தேவையற்ற விஷவல் எபட்க்ஷை தவிர்க்கலாம். வசன உச்சரிப்புகள் உரையாடல்கள் இசையுடன் சேர்த்து அமுங்கி போகின்றது, அவற்றை முழுமையாக புரிந்து கொள்ள சிரமமாக இருக்கின்றது. ஒரு குறுப்படத்திற்கு சொல்லவந்த செய்திதான் முக்கியம் அதனை முன்னிலைப்படுத்தி தெளிந்த நீரோடை போன்ற ஒளிப்பதிவுடன் சீரான உரையாடலையும் இணைத்து தந்தார்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த குறைகளை களைந்து அடுத்து குறும்படத்தை இன்னும் சிறப்பாக பலரை சென்றடையும் வகையில் தருவார்கள் என நம்புகின்றேன், மீண்டும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். - shanmuhi - 04-26-2005 குறும்படத்தை தந்த இளைஞர்களுக்கு அவர்களுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- இளைஞன் - 05-02-2005 இதே இளைஞர்களின் இன்னொரு குறும்படமும் அண்மையில் வெளியாகியுள்ளதாய் அறிகிறேன். நேரடியான திரைப்பட முயற்சிகளைவிட, குறும்படங்கள் ஊடான திரைப்பட வளர்ச்சியே மக்கள் வாழ்வியலைப் பேசும் சினிமாவாக வளரும். - vasisutha - 05-04-2005 படத்தின் கதை நன்றாக உள்ளது. இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் தடவை பார்க்கும் போதுதான் விளங்கியது. |