Yarl Forum
மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மறவர் கனவுகளை இறவாது செய்வோம் (/showthread.php?tid=434)



மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - eezhanation - 03-26-2006

<span style='font-size:25pt;line-height:100%'>இன்னுயிர்தன்னை
நெய்யெனச்சொரிந்து
இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள்
புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி
மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம்.

விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள்
விதைகுழிகளில் வேர்பாய்ச்சி
வான்வெளி எங்கும் கிளைபரப்பி
விழுதெறிந்து வளர்வோம்
இனியென்றும் வீழ மாட்டோம்

காலக்கிண்ணமதில்-இனியும்
கனவுகளையா குடிப்போம்
இல்லை...இல்லை...
தலைவனின் தடங்களில்-விடுதலை
தேரிற்கு வடம் பிடிப்போம்.

நாமாண்ட மண்ணும்
எமையாண்ட தமிழும்
இனியொன்றும் மாழாது-எம்
உறவுகளைக்கொன்றபகை
இனியென்றும் வாழாது.

இது.....,
தமிழ்த்தென்றலின் வீடு
புலிப்புயல்கள் உலவும்காடு
பகையே....நீ...,
புறமுதுகுகாட்டி ஓடு
இலையேல்....,-இதுவே
உனக்குச்சுடுகாடு.

தானைத்தலைவனின்
விழிகளின் ஒளிதனில்
சுதந்திரப்பாதை ஜொலிக்கும்-அதில்
வேங்கைகள் தடம் பதிக்கும்
அடிமைத்தடைகளெலாம் தெறிக்கும்.

நாளைய விடியலில்
நமக்கெனச்சூரியன் உதிக்கும்
மாண்டவர் கனவுகள் பலிக்கும்
சுதந்திர ஒளியினில்
நமது தேசம் குளிக்கும்.

அப்போது...,
இன்னுயிர்தன்னை
நெய்யெனச்சொரிந்து
இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள்
புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி
மலர்களைத்தூவி நாம் வணங்கிடுவோம்.
</span>


Re: மறவர் கனவுகளை இறவாது செய்வோம் - Mathuran - 03-26-2006

[quote=eezhanation][size=18]இன்னுயிர்தன்னை

நாமாண்ட மண்ணும்
எமையாண்ட தமிழும்
இனியொன்றும் மாழாது-எம்
உறவுகளைக்கொன்றபகை
இனியென்றும் வாழாது.

உங்கள் கவித உணர்வோட்டத்தை மேலும் கூட்டி செல்கின்றது. என்னால் கவி நடைபற்றி பேசிட தெரியாது ஆனால் உட் கரு மிகவும் ஆழமானது. தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.


- Sujeenthan - 03-26-2006

நல்ல கவிதை. இது போன்ற கவிதைகளை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம். இந்த வரிகள் மிகவும் நன்றாக உள்ளது.
Quote:இது.....,
தமிழ்த்தென்றலின் வீடு
புலிப்புயல்கள் உலவும்காடு
பகையே....நீ...,
புறமுதுகுகாட்டி ஓடு
இலையேல்....,-இதுவே
உனக்குச்சுடுகாடு.



- eezhanation - 03-27-2006

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. சுஜீந்தன்,மதூரன். உங்கள் பாராட்டுக்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதுவேன்.


- Rasikai - 03-27-2006

ஈழநேசன் உங்கள் உணர்வுபூர்வமான கவிதை அருமை. தொடர்ந்து எழுதுங்க:ள்:


- வர்ணன் - 03-27-2006

நல்லதொரு கவிதை ஈழநேசன் -
நீண்டதொரு அர்த்தமற்ற அமைதியால் படிப்படியாக -எம்முள் சிலருக்கு படிப்படியாக மறந்து போகின்ற - அல்லது மறக்கவைக்க நடந்துகொண்டிருக்கின்ற சூழ்ச்சிகளிலிருந்து-தெளிவுற - இதுபோன்ற கவிதைகளை தொடர்ந்து தாருங்கள்! 8)


- eezhanation - 03-28-2006

நன்றி...ரசிகை.,மற்றும், வர்ணன். உங்களின் பாராட்டுக்கள் உற்சாகமளிப்பனவாய் இருக்கின்றன. தொடர்ந்தும் எழுதுவேன்.


- தூயவன் - 03-28-2006

வசனங்களை அணிநடையாக எழுதியிருப்பது சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் சோதரா!!


- RaMa - 03-29-2006

இது.....
தமிழ்த்தென்றலின் வீடு
புலிப்புயல்கள் உலவும்காடு
பகையே....நீ...இ
புறமுதுகுகாட்டி ஓடு
இலையேல்....இ-இதுவே
உனக்குச்சுடுகாடு.

அழகான வரிகள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.


- eezhanation - 03-29-2006

மிக்க நன்றி, தூயவன்...யார் என்ன ஆக்கம் எழுதினாலும் உடனே ஆஜராகி பாராட்டி விடுகிறீர்கள், ரமா, இந்தப்பெருந்தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. மிக்க நன்றி.