![]() |
|
இவனுடைய கதையையும் கேளுங்கோவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இவனுடைய கதையையும் கேளுங்கோவன் (/showthread.php?tid=433) |
இவனுடைய கதையையும் கேளுங்கோவன் - தூயவன் - 03-26-2006 விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் 2005 ஆம் ஆண்டு விசா இந்தியாவிற்குத் தப்பியோடிருந்தார் என்று இன்றைய கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: கருணாவின் சகாக்களால் பயண முகவர் நிலையம் ஒன்றினூடாகவே இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. வழமையான பயணிகளைப் போன்று கருணா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தினூடாகவே இந்தியாவிற்குச் சென்றிருந்தார். கருணா இந்தியாவிற்குச் சென்று மூன்று தினங்களின் பின்னர் அவரது மனைவி இந்தியாவிற்குச் செல்வதற்கு தனியாக விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். எனினும் அவரின் விசா விண்ணப்பத்தை தடுத்து வைத்த அதிகாரிகள் அவரதது விசா விண்ணப்பத்தை நிராகரித்திருந்தனர். அவரது விசா நிராகரிக்கப்பட்டதையடுத்து கருணா இந்தியாவிற்குச் செல்ல அவருக்கு விசா வழங்கியது தொடர்பாகஇ கருணாவின் சகாக்களுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என விசாரணைகளும் நடைபெற்றன. கருணா இந்திய விசா பெற்று இந்தியாவிற்குச் சென்றுள்ளாரென்றும் இது தொடர்பாக தூதரக மட்டத்தில் உள்ளக விசாரணைகள் நடைபெற்றதென்றும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குச் சென்ற கருணா அங்கிருந்து சிங்கப்பூரிற்கு சென்று தனது மனைவியுடன் இணைந்து கொண்டுள்ளாரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரச தலைவர் கருணா இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற சமயம் பிரதமராக இருந்தார். எனினும் கருணா எங்கிருக்கிறார் என்பது பற்றி அவருக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன தகவல்: புதினம் |