Yarl Forum
பிரிட்டிஷ் விமானப்படைக்கு விமானம் வாங்கிக்கொடுத்த ஈழத்தவர். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரிட்டிஷ் விமானப்படைக்கு விமானம் வாங்கிக்கொடுத்த ஈழத்தவர். (/showthread.php?tid=4297)



பிரிட்டிஷ் விமானப்படைக்கு விமானம் வாங்கிக்கொடுத்த ஈழத்தவர். - ஊமை - 05-11-2005

11 மே 2005 தி.தவபாலன்

இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் றோயல் விமானப் படைக்கு ஈழத்தமிழன் வாங்கிக்கொடுத்த தாக்குதல் விமானம். இது உங்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கலாம். அந்த விமானம் இன்றும் அரும்பொருட் காட்சியகத்தில் இருக்கிறது. விமானத்தின் பெயர் என்ன தெரியுமா? 'யாழ்ப்பாணம்" ஆங்கிலத்தில் ஜப்னா என்ற பெயரைக்கொண்டதாக அது பயன்படுத்தப்பட்டது. விமானங்களுக்கு குறியீட்டுப்பெயர்தான் அந்த விமானத்துக்கு 'துயககயெ' விமானம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. 1950 களுக்குப்பின்ää என்றால் அதிர்ச்சி தரும் தகவல்தான். ஆனால் இது நடந்தது 1915இல்ää முதல் உலகப்போர்க் காலத்தில்ää முதல் விமானம் ரைட் சகோதர்களால் தயாரித்து பறக்கவிடப்பட்ட 14 ஆண்டுகளில் ஈழத்தமிழன் ஒரு விமானத்தை இராணுவ தேவைக்காக வாங்கிக் கொடுக்கும் வல்லமையுடன் இருந்தான் என்பது இங்கு முக்கிய செய்தியாக உள்ளது. முதலாம் உலகப்போர் காலத்தில் தம்மைக் காத்துக் கொள்வதற்காக தமிழன் இந்த விமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறான். அந்த விமானம் வாங்கிக் கொடுக்கப்பட்ட கதையைப்பார்ப்பம்.


இந்த விமானத்தை வாங்கிக் கொடுத்தவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்பது உங்களுக்கு அடுத்த அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது. ஈழத்தமிழர்களின் முதல் புலப்பெயர்வு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கானது. அதற்கான புலப்பெயர்வு சிங்கப்பூரை உள்ளடக்கிய மலேசியாவிற்கு 1980களின் பிற்பகுதியில் நடந்தது. ஏராளமான ஈழத்தமிழர்கள் குறிப்பாக படித்தவர்களாக இலங்கையில் இருந்த யாழ்ப்பாணத்தவர்கள் பொருளாதாரத்துக்காக இந்தப்புலப் பெயர்வை மேற்கொண்டவர். 1867இல் யாழ்ப்பாணத்தமிழர்கள் மலேசியா நோக்கிய புலப்பெயர்வை மேற்கொண்டனர். மலேசியாவில் தேயிலை இறப்பர் தோட்டங்களில் மேலதிகாரிகளாக இவர்களின் பணி ஆரம்பமானது. மலாயன் பென்சனியர் என்ற பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்தர்களை அறியலாம். இந்த புலப்பெயர்வு காலத்தில் இலங்கையை ஆண்டது பிரிட்டிஷ் அரசு. அதனுடைய றோயல் ஆமிää றோயல்நேவிää றோயல் எயார்போர்ஸ் என்ற பெயரில்தான் இலங்கையில் படைகள் இருந்தன.

முதலாம் உலப்போர் தொடங்கிய காலத்தில் பிரிட்டிஷ் நாடுகள் மீதான தாக்குதல் அபாயம் அதிகமாக இருந்தது. அந்தவேளையில் பிரிட்டிஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பிரிட்டிஷ் படைகளை பலப்படுத்தின. அப்போது மலேசியாவிலிருந்து பணக்காரர்கள் பிரிட்டிஷ்படைக்கு விமானங்களை வாங்கிக் கொடுத்த வண்ணமிருந்தனர். இதன் ஒருகட்டமாக அங்கிருந்த ஈழத்தமிழர்கள் பிரிட்டிஷ் படைகளுக்கு தம்மாலான முழு ஒத்துழைப்புகளையும் கொடுத்தனர். பிரிட்டிஷ் வான் படைக்கு மலேசியர்கள் விமானங்களை வாங்கிக் கொடுக்க தமிழருக்கும் அந்த யோசனை நல்லதாகப் பட்டது. அவுஸ்திரேலியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகளுக்கு 94 போர் விமானங்கள் தேவை என கோரல் விடப்பட்டபோது அதில் 53 விமானங்கள் மலேசியர்களால் வாங்கிக் கொடுக்கப்பட்டன. 7 விமானங்கள் மலேசியாவின் பணக்காரர்களான ஜோகூர் சுல்தான்ää கெதா சுல்தான் ஆகியோரால் வாங்கிக் கொடுக்கப்பட்டன. இதனைப்பார்த்த தமிழர்கள் தாமும் முயன்றனர். இது கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் ஆட்டம் கானக் கருதிவிட வேண்டாம்.

மலேசியாவின் யாழ்ப்பாணத் தமிழர்களின் முக்கியமானவர்களில் ஒருவரான மல்லாகத்தை சேர்ந்த எம்.சுப்பிரமணியம் என்பவர் விமானக்கொள்வனவிற்கான ஏற்பாட்டில் முன்னோடியாக செயற்படத் தொடங்கினார். இவர் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றியவர். யாழ்ப்பாணத் தமிழர்களால் தாக்குதல் விமானம் வாங்கிக் கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். இவரின் முயற்சிக்கு மலேசியா பினாங்கில் வாழ்ந்த மற்றொரு யாழ்ப்பாணத்தவரான பிரௌன்.எம்.சித்திரவேலு என்பவர் ஊக்கமளித்தார். இவர்களின் பிரசாரத்தால் இவர்களின் அணி பலமடையத்தொடங்கியது. ஆர்.தம்பிப்பிள்ளை டொக்டர் ஈ.ரி.மக்.இன்ரையர்ää எம்.சுப்பிரமணியம்ää டபிள்யு.எவ். விஜயரட்ணம் செல்லப்பாää வி.எம்.கனகரட்ணம்ää சுப்பிரமணியம்ää சண்முகம்ää மற்றும் பல யாழ்ப்பாணத்தமிழர்கள் 1915 யூலை 19இல் விமானக் கொள்வனவிற்காக விக்டோரியா நிறுவன மண்டபத்தில் ஒன்று திரண்டனர். அது முதல் கூட்டம். பைற்றர் பிளேன் பன்ட் என்று பெயரிடப்பட்டு நிதி திரட்ட அதில் முடிவானது. சகல யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் முழுமையாக பிரசாரம் செய்து நிதியை திரட்ட முடிவானது.

அதன்பின் பினாங்க்கில் நகர மண்டபத்தில் மண்டபம் நிறைந்த தமிழர்கள் திரள நிதி திரட்டல் கூட்டம் நடைபெற்றது. இது டொக்ரர் ஜசக் தம்பிஜயா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரௌன்.எம்.சித்திவேலு ஆயிரம் மலேசிய டொர்களை விமானக்கொள்வனவு நிதிக்கு வழங்கினார். தொடர்ந்து நிதி குவிந்தது. அன்று 14500 டொலர்கள் வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் போர் அலுவலகத்தில் முதல் கட்டுத்தொகையாக வழங்கப்பட்டது. மிகுதி 4800 டொலர்கள் அடுத்த கட்டமாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டது. அந்த நிதியில் அப்போது 2250 பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுணில் தாக்குதல் விமானம் 1915 டிசம்பர் 22இல் கொள்வனவானது. அதற்கு துயுகுகுNயு (யாழ்ப்பாணம்) எனப் பெயரிடப்பட்டு றோயல் விமானப்படையில் இணைக்கப்பட்டது.

இந்த விமானக் கையளிப்பு தொடர்பில் பிரிட்டிஷின் கொலனிகளின் செயலாளர் அன்ட்ரு போனர் லோவிற்கு விமான அதிகாரி எப்.ஜி.ஏ.பட்லர் அனுப்பிய கடிதத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களின் தாய்மண் பற்றின் வெளிப்படையாக இந்த விமானக்கொள்வனவு அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழரை அடிமை கொண்ட பிரிட்டிஷ் படைகளுக்கு விமானம் வாங்கிக் கொடுத்தது சரியா என்ற வாதம் எழலாம்.... இங்கு பிரிட்டிஷை விட பலமான எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் இது மேற்கொள்ளப்படுகிறது. இது அன்றைய நிலைமை. இங்கு எமக்கு முக்கியமானதாக தெரிவது விமானம் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆண்டுகளில் ஒரு தாக்குதல் விமானத்தை வாங்கிக் கொடுக்கும் பலம் ஈழத்தமிழனிடம் இருந்தது என்பதை இன்று சொல்வதாகும். அன்றை விட ஈழத்தமிழனின் புலம்பெயர்பலம் மிக அதிகம். இன்று வலுவான அதே தேவை தமிழனுக்கு இருக்கிறது. மலேசியாவில் உள்ள சிங்களவர் தமிழர் விமானம் வாங்கிக் கொடுத்ததைப் பார்த்து தாமும் விமானம் வாங்க முயன்றும் தோற்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பிரசுரிப்பு: நிதர்சனம் இணையம் www.nitharsanam.com


- Nilavan - 05-11-2005

வணக்கம்


- Danklas - 05-11-2005

Nilavan Wrote:வணக்கம்
நிதர்சனத்தின் தேடல்களற்ற ஒரு செய்தியே இது கடந்த பரபரப்பு எனப்படும் ரிசியில் பாத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை அப்படியே பிரதி செய்து போட்டு விட்டு ஏதோ தாமே கண்டு பிடித்தமாதிரி நிதர்சனம் போட்டிருக்கு...ஒரு நன்றி சொல்லவேண்டாம் பரபரப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்றாவது போட்டிருக்கலாம்....
நிலவன்

இதபாருங்கப்பா.. நிலவனுடைய லொள்ளை...??

இதையெல்லாம் போய் பெரிசா எடுத்தால் எப்படி நிலவன்.. இப்ப ரிசியின் பத்திரிகையில் வந்ததை ஜரோப்பாவில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ளவர்களால் வாசிக்க முடியாது, அதை நிதர்சனம் சுட்டு போட்டு எல்லோரும் பார்க்க கூடியாதக உதவி செய்திருக்கு.. இதை என்னொமொரு வகையில் பார்க்கபோனால் நிதர்சனம் அந்தபத்திரிகையின் பிரதி ஒன்றை விலைக்குவாங்கி அதை தனது இனையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றது... இதற்க்கு நீங்கள் நினைப்பதுபோல் கட்டயம் நன்றி என்ற வார்த்தையை நிதர்சனம் உபயோகப்படுத்ததேவையில்லை... Idea :roll: ...


- ottan - 05-11-2005

ஓஓஓஓஓஓஓஓஓஓஓ அதுதான் இங்கிலாந்துக்காரர் இப்ப சிங்களவருக்கு உதவுகினம்போலை நன்றி கெட்ட வெள்ளைக்காரர் :oops: :oops: :oops:


- Danklas - 05-11-2005

நல்ல காலம் அதை அந்த காலத்து தமிழருடைய கையில சேரல்லை..

அப்படி அவர்களின் கையில தந்திருந்தால் அந்த பிளைட்ட மாட்டுவண்டி மாதிரி ஆக்கியிருப்பார்கள்.. :evil: நல்ல காலம் அவங்களிட்ட குடுத்த படியால் இப்பவும் "யாழ்ப்பாணம்" எண்ட பெயரில மியுசியத்தில நிக்குது.. Idea

சப்போஸ் அதை அப்போதைய தமிழரிண்ட கையில குடுக்கோனும் எண்டா இப்ப இருக்கிற தலைமைத்துவம் மாதிரி அப்ப இருந்திருக்கோனும்ம்.. Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- anpagam - 05-11-2005

Danklas Wrote:இதபாருங்கப்பா.. நிலவனுடைய லொள்ளை...??

இதையெல்லாம் போய் பெரிசா எடுத்தால் எப்படி நிலவன்.. இப்ப ரிசியின் பத்திரிகையில் வந்ததை ஜரோப்பாவில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ளவர்களால் வாசிக்க முடியாது, அதை நிதர்சனம் சுட்டு போட்டு எல்லோரும் பார்க்க கூடியாதக உதவி செய்திருக்கு.. இதை என்னொமொரு வகையில் பார்க்கபோனால் நிதர்சனம் அந்தபத்திரிகையின் பிரதி ஒன்றை விலைக்குவாங்கி அதை தனது இனையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றது... இதற்க்கு நீங்கள் நினைப்பதுபோல் கட்டயம் நன்றி என்ற வார்த்தையை நிதர்சனம் உபயோகப்படுத்ததேவையில்லை... Idea :roll: ...

யாழ் இணைய அங்கத்தவர்களுக்கும்... யாழுக்கும் இதுசாதாரணம்... :roll: :|
ஆனால்... நியாயம்... யதார்த்தம் அதுஅல்ல.... டக்ளஸ் Idea :wink:
நாம் படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :wink: Idea


- vasisutha - 05-11-2005

anpagam Wrote:
Danklas Wrote:இதையெல்லாம் போய் பெரிசா எடுத்தால் எப்படி நிலவன்.. இப்ப ரிசியின் பத்திரிகையில் வந்ததை ஜரோப்பாவில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ளவர்களால் வாசிக்க முடியாது, அதை நிதர்சனம் சுட்டு போட்டு எல்லோரும் பார்க்க கூடியாதக உதவி செய்திருக்கு.. இதை என்னொமொரு வகையில் பார்க்கபோனால் நிதர்சனம் அந்தபத்திரிகையின் பிரதி ஒன்றை விலைக்குவாங்கி அதை தனது இனையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றது... இதற்க்கு நீங்கள் நினைப்பதுபோல் கட்டயம் நன்றி என்ற வார்த்தையை நிதர்சனம் உபயோகப்படுத்ததேவையில்லை... Idea :roll: ...

[b]<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணைய அங்கத்தவர்களுக்கும்... யாழுக்கும் இதுசாதாரணம்... </span> :roll: :|
ஆனால்... நியாயம்... யதார்த்தம் அதுஅல்ல.... டக்ளஸ் Idea :wink:
நாம் படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்...


அன்பகம் என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் சொல்வதை பார்த்தால்
யாழ் கள உறுப்பினர்கள் ஏதோ மற்றவர் படைப்புகளை திருடி எழுதுகிறார்கள்
என்று சொல்வது போல உள்ளது.
என்னைப் பொறுத்தவரை எங்கு சுட்டாலும் மறக்காமல் அந்த தளத்தின்
பெயரை நன்றி சொல்லி போட்டுவிடுவேன். (சிலவேளை மறதியினால் ஒன்றிரண்டு
தவறியிருக்கலாம்.)
அப்படித்தான் கள உறுப்பினர்களும்.
உங்கள் இந்த வார்த்தையை நான் வருத்தமாக நோக்குகிறேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- anpagam - 05-11-2005

ம்ம் மன்னிக்கவும்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எழுதமுன்னமே எனக்கும் அந்தவார்த்தை வருத்தமாகத்தான் இருந்தது...
ஆனால் எமுதவேண்டும் போல் இருந்தது அந்தகருத்தை எழுதிவிட்டேன்...
அக்கருத்து நம்மையும் யாழையும் மட்டுமே புண்பட வைக்க எழுதவில்லை... :| <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea
நன்றியோடு விசயம்... தேவையானகளங்களுக்கும்...நமக்குமொழிகிறது...
ஆனால்.. நாம் இணையபடைப்பாளிகள்... படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்... Idea :|