Yarl Forum
அன்பின் மொழி...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அன்பின் மொழி...! (/showthread.php?tid=4138)



அன்பின் மொழி...! - kuruvikal - 06-07-2005

<img src='http://img235.echo.cx/img235/361/kuruvi18ow.jpg' border='0' alt='user posted image'>

<b>அகர வரிசை
அடுக்காக்கி
அன்பே
அமுதே
அழகே என்று
அடுக்கு மொழி பேசிலேன்
அன்னைக்கு அடுத்ததாய்
அகத்திலொரு
அணியாய் கொண்டேன்
அருகிருந்து நீ
அன்பு வளர்க்க - இன்று
அவதிப்படுகிறேன்..!
அழகிய மலராய்
அகிலம் வந்தாய்
அகத்திலும் வந்தாய்
அருகிருக்க மட்டும்
அனுமதி மறுக்கிறாய்
அன்பான உறவுக்கு
அவசரம் ஏனோ
அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...!
அவலம் இவன்
அன்பு தாழ் திறக்க
அவதிப்படுவது அறியாயோ
அருமலரே....!
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
அன்று அரிவரியில்
அவசரமாய் உச்சரித்தது
அர்த்தமாய் இன்று
அதிர்கிறது மனத்திடலெங்கும்..!
அது கேட்டு
அரங்கேறத் துடிக்கிறது
அன்பான குருவியதன்
அருங்கவி..!
அது ஒரு ஜீவகவி
அர்த்தமில்லா ஆயுளதை
அர்த்தமாக்க
அன்பே நீ தந்த
அன்பின் அரிச்சுவடி
அணைத்தெடுக்க
அகத்தோடு அரும்பிய
அருமலர் - நீ
அறியாமல் அலம்பிய
அரும் வரிகள்
அருமையாய்க் கோர்த்தெடுக்க
அரும்பியது
அந்தக் கவி
அகிலத்தில் அது
அடங்காது ஆயுள் வரை..!
அன்பே உன்னைப் பிரியாது
அற்புதன் இவன்
அன்புக் கவி..!
அதுவே தாங்கும்
அற்புத ஆயுள் வரி
அது தரும் என்றும் - இவன்
அன்பின் மொழி...!</b>


- வெண்ணிலா - 06-07-2005

அன்பின் மொழி நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-07-2005

அன்பின் மொழியா.. அலம்பல் சே புலம்பல் போல கிடக்கு.. :wink: :mrgreen: நல்லாய் இருக்கு :wink:


- kuruvikal - 06-07-2005

வாழ்த்துக்கு நன்றிகள் வெண்ணிலாத் தங்கையே,,, மற்றும் தமிழியே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 06-07-2005

எங்க மலர் சத்தத்தை காணவில்லையே என நினைத்தேன்...வந்திட்டுது...வாழ்த்துக்கள் குருவி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 06-07-2005

குருவிகள் தொடருங்க வாழ்த்துக்கள்.........இப்ப தான் அதிகமாக உங்களை உலகம் கண்டுக்க தொடங்கியிருக்கு போல........வாழ்த்துக்கள்.


- Mathan - 06-07-2005

ஏதோ உட்பொருள் வைத்து பேசுற மாதிரி இருக்கு குளம்


- shanmuhi - 06-07-2005

அன்பின் மொழியாக அற்புதக் கவி படைத்திட்ட குருவிகளுக்கு வாழ்த்துக்கள்...


- Niththila - 06-07-2005

வாழ்த்துக்கள் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 06-08-2005

[quote=KULAKADDAN]குருவிகள் தொடருங்க வாழ்த்துக்கள்.........இப்ப தான் அதிகமாக உங்களை உலகம் கண்டுக்க தொடங்கியிருக்கு போல

அப்ப அவதானமாக இருக்க வேண்டும்...இந்த உலகில் நன்மைக்குப் பதில் தீமைதான் அதிகம்...அதன் பார்வை பட்டாலே தீமைகள் சூழப்போகின்றன என்பதுதான் அர்த்தம்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வாழ்த்துக்கு நன்றிகள்.. மழலைத் தங்கையே...குளக்காட்டான்... மதன் நண்பர்களே...சண்முகி அக்காவே... நித்திலாத் தங்கையே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->