Yarl Forum
சிவராம் படுகொலை தொடர்பாக புளொட்டின் 2 முக்கிய உறுப்பினர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிவராம் படுகொலை தொடர்பாக புளொட்டின் 2 முக்கிய உறுப்பினர்கள் (/showthread.php?tid=4102)



சிவராம் படுகொலை தொடர்பாக புளொட்டின் 2 முக்கிய உறுப்பினர்கள் - narathar - 06-11-2005

சிவராம் படுகொலை தொடர்பாக புளொட்டின் 2 முக்கிய உறுப்பினர்கள் கொழும்பில் கைது

பிரபல ஊடகவியலாளர் ரி. சிவராமின் படுகொலை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) சேர்ந்த இரு முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள அதேநேரம், இந்தக் கொலை தொடர்பாக புளொட் தலைவர் த. சித்தார்த்தனை விசாரணைக்குட்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இரவு கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து இனந்தெரியாத குழுவினால் கடத்தப்பட்ட சிவராம் பின்னர் பாராளுமன்றத்திற்கு அருகே, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது கொலையுடன் புளொட்டுக்கு தொடர்பிருப்பதாகக் கூறும் பொலிஸார், இது தொடர்பாக சித்தார்த்தனின் செயலாளரும் புளொட்டின் முக்கிய உறுப்பினருமான பீற்றரையும் (அ. சிறீஸ்கந்தராஜா) மற்றுமொருவரையும் கடந்த வாரம் கைதுசெய்து தீவிர விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

சிவராமைப் புளொட்டே கொலை செய்ததாகவும் இந்தக் கொலைக்கான நோக்கம் மற்றும் வேறு விடயங்கள் குறித்து சித்தார்த்தனை விசாரணைக்குட்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இதேநேரம், இந்தக் கொலை தொடர்பாக சித்தார்த்தனின் பிரத்தியேக செயலாளர் `ஆர்.ஆர்.' என்பவரை தாங்கள் தேடி வருவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் புளொட் தலைமைப்பீடத்திடம் வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலையுடன் கருணா குழுவிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதால் சக்திமிக்க தரப்பொன்றின் ஆதரவுடன் கருணா குழு, ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) மற்றும் புளொட் அமைப்புகள் இணைந்து இதனை மேற்கொண்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

இதேவேளை, இந்தக் கொலையுடன், அமைச்சர் ஒருவர் தலைமையிலான கட்சியொன்றுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கடந்த வாரம் பொலிஸார் கூறியிருந்தனர்.

புளொட் அமைப்பின் முன்னாள் நீண்டகால உறுப்பினரான சிவராம் அந்த அமைப்பின் அரசியல் பிரிவின் செயலாளராகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி தினக்குரல்

இதுதான் இந்தியா முன்வைக்கும் பல்னிலைத்தன்மை கூட்டின் செயல் வடிவம்