Yarl Forum
கண்காணிப்பு குழுவின் தற்போதைய நடவடிக்கைகள்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கண்காணிப்பு குழுவின் தற்போதைய நடவடிக்கைகள்.. (/showthread.php?tid=41)



கண்காணிப்பு குழுவின் தற்போதைய நடவடிக்கைகள்.. - Danklas - 04-27-2006

கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா?

எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது.

புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)முடிவுக்கு வந்ததாக அறிவித்து இருக்கிறார்கள், அதிலும் யுத்த நிறுத்த நடைமுறையில் உள்ளபொழுது, இலங்கை அரசாங்கம் யாரை ஏமாத்துகின்றது? விடுதலைபுலிகளையா? அல்லது தமிழ் மக்களையா? அல்லது உலக நாடுகளையா? அண்மை நாட்களாக நாளுக்கு 3 என்ற ரிதியில் தமிழ் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள், கண்கானிப்புகுழு இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் புசத்திக்கொண்டு இருக்கிறார்,

எனது தனிப்பட்ட பார்வையில் உலக நாடுகளின் அனுதாப பார்வை எனியும் எம்மீது இருக்கப்போவதில்லை, தமிழ்மக்களின் அழிவை இப்படியே பார்த்துக்கொண்டு இருந்தால் இறுதியில் தென்னிலங்கை சிங்களமக்கள் தான் இலங்கையில் வாழ்வார்கள்.


- Danklas - 04-27-2006

இந்த நேரத்தில் என்னொமொன்றை நியாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது அண்மையில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 3 அல்கைதா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள், மேலும் 7 பேர் இலங்கை நாட்டிற்குள் ஊடுவியுள்ளார்கள் என்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை அமெரிக்க சிபிஐ தெரிவித்து இருந்தது, குறிக்கோளே இல்லாமல் தங்களை தாங்களே அழித்துக்கொள்ளும் அல்கைதா உறுப்பினர்களின் நடவடிக்கையாக கூட இருக்கலாம். காரணத்தை பார்த்தீர்கள் என்றால்...

1.அண்மையில் கைது செய்யப்பட்ட உறுப்பினர்களை விடுதலை செய்யவேண்டுமெண்டு ஒரு அழுத்தத்தை இலங்கக அரசாங்கத்துக்கு குடுக்க நடாத்தப்பட்டிருக்கலாம், (பெரிய தலைகள் கைது செய்யப்பட்டு இருப்பின்)

2.இலங்கையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள (ஊசலாடிக்கொண்டு இருக்கின்ற) யுத்த நிறுத்தத்தை புலிகள் ஊடக நிறுத்தி அவர்கள் மீது பழி சுமத்தி அவர்களே அதை ஆரம்பித்தார்கள் என்று உலகத்திற்கு பூச்சாண்டி காட்டுவதற்காக முஸ்லீம் அரசியல் வாதிகள் (???) அல்ஹைதா உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அதில் குளிர் காய முற்பட்டிருக்கலாம்.

ஒன்றில் இத்தாக்குதல் குண்டுவெடிப்பாக இருந்திருக்கலாம், அந்த வீதியினால் சென்றுகொண்டு இருந்த அப்பாவி யுவதி இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிருந்திருக்கலாம்.

அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கலாம்..

அல்லது அல்ஹைதா உறுப்பினர்களீன் தாக்குதலாக இருக்கலாம்.

அல்லது போர் நிறுத்த உடன்பாட்டை எப்படியாவது இல்லாமல் ஆக்குவது அல்லது குழப்புவது என்ற நிலைப்பாட்டில் 100% உறுதியாக இருக்கும் ஜேவிபியின் செயற்பாடாக இருக்கலாம். (ஜேவிபி தலைவரின் கொள்கைகளும் அல்ஹைதா தலைவரி ஒசமாமவின் கொள்கைகளும் 100% ஒத்துப்போகின்றவையே)

அல்லது தனக்கு சார்ப்பானவர்களை தகுதியான பதவியில் அமர்த்தி மற்றவர்களை காணாமல் விட்டுவிட்ட சரத் பொன்சேகா மீது உள்ள ஆத்திரத்தினால் உள்வீட்டு சதியாக இருக்கலாம்.

இத்தனை சந்தேகங்கள் இருக்கும் பொழுது புலிகள் தான் இதை நடாத்தினார்கள், அவர்களுக்கு மட்டும்தான் இப்படியான தாக்குதல்கள் நடத்த தெரியும் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறிவிட்டு, (அதிலும் தாக்குதல் நடைபெற்று ஒரு மணித்தியாலத்திற்குள்ளேயே புலிகள் தான் அதை செய்தார்கள் என்று அறிக்கைவிட்டதும் இல்லாமல் தாக்குதல் நடைபெற்று சில மணி நேரங்களில் கிழக்கில் மிலேச்சத்தனமான தாக்குதலை அதுவும் கிபிர் யுத்தவிமானம் மூலம், (கிபிர் யுத்தவிமானம் யுத்த நிறுத்த காலத்தில் எல்லாம் தயாராகத்தான் நின்றிருக்கின்றது போல) அதற்காக மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக கூறிவிட்டு அது நிறுத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு பகிரங்கமாக கூற அதை கேட்டுக்கொண்டு அதை சாதரணமாக கூறும் கண்காணிப்புகுழுவின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நீங்களே சற்று சிந்தியுங்கள்... :evil: :evil:

அமெரிக்காவிலேயே தாக்குதல் நடாத்தும் அல்ஹைதாவுக்கு இலங்கை அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியில் உள்ளவரையும் தாக்கி அழிக்கும் வல்லமை இல்லை என்று நினைப்பது முட்டாள் தனம், Idea


- kurukaalapoovan - 04-27-2006

ஜெனிவா-1 இற்கு முன்னர் கேட்டிருந்தால் "இயன்றவரை போராடுகிறார்கள்". அவர்களது பணி மிகவும் இக்கட்டானது, சிறீலங்கா அரசாங்கத்தின் அதிகாரப் போக்கையும் சிங்கள இனவாதிகளின் கீழ்த்தரமான விமர்சனங்களிற்கு மத்தியிலும் தமது கடமையை முடிந்தவரை முயற்சிக்கிறார்கள் என்ற ஒரு மரியாதையும் நன்றியுடமையும் தமிழர் தரப்பிடம் இருந்தது.

ஜெனிவா-1 இற்கு பின்னர் தமிழர் தரப்பின் மீது கட்டவிள்த்துவிடப்பட்ட வன்முறைகள் இனஅழிப்புகளை கண்காணிப்புக் குழு கண்மூடி மொளனம் காக்கும் பாவனை "பக்கச்சார்பாக நடக்கிறார்கள்" என்ற முடிவைத்தான் தருகிறது.

தமிழர் தரப்பு கண்காணிப்புக்குழு மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.


- angali - 04-27-2006

டண் அண்ணா இன்னொன்றையும் வாக்கெடுப்பிலை சேர்த்திருக்கலாம் அதாவது அமெரிக்கா சொல்லுறதற்கெல்லாம் தலையாட்டுகிறார்களா? என்று


- Danklas - 04-27-2006

angali Wrote:டண் அண்ணா இன்னொன்றையும் வாக்கெடுப்பிலை சேர்த்திருக்கலாம் அதாவது அமெரிக்கா சொல்லுறதற்கெல்லாம் தலையாட்டுகிறார்களா? என்று

ஆமா இப்ப நீர் வந்து அமெரிக்கா எண்டுவீர், சின்னப்பு மப்பில வந்து கள்ளுக்கொட்**லுக்க இருந்தவையள் எண்டுவார், பிறகு சாட்றீ வந்து இல்லை இல்லை அதை டென்மார்க் அம்மா............. எண்டு சொல்ல அதை நான் மாத்தோனுமோ?? ஆ? :evil: :evil:

அது இருக்கட்டும், நீர்தானே கண்காணிப்பு குழுவின் செயற்பாடு திருப்தியாக உள்ளது என்றதற்கு வாக்கு அளிச்சு இருக்கிறீர் பிறகு எதற்கு? :wink: :evil: :evil:


- Mathuran - 04-27-2006

தமிழனை அடித்தால் கேட்க ஆளில்லை என நினைக்கின்றார்கள் போல. அரைக்கிற மிளகாயை எல்லாரும் சேர்ந்து அரைக்கிறாங்களோ?