Yarl Forum
வன்னி ரெக்கிற்கு உதவுங்கள். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: வன்னி ரெக்கிற்கு உதவுங்கள். (/showthread.php?tid=4063)



வன்னி ரெக்கிற்கு உதவுங்கள். - narathar - 06-26-2005

வன்னி ரெக்கிற்கு உதவுங்கள்.
ஜய் குமாரசூரியரினலும் பல புலம் பெயர்ந்த தமிழ் தொழில்னுட்பவியலாளரின் அயராத முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட வன்னி ரெக் இன்று மூன்றாவது மாணவர் தொகுதியை உள்வாங்க உள்ளது.
இவ் வாண்டிற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடம் இக் கோரிக்கையை ஜய் குமாரசூரியர் முன் வைத்துள்ளார்.
எமது பொருளாதரத்தை கட்டி எழுப்பவும்,எமது தேசிய நிறுவனங்களின் தொழில்னுட்ப ஆளுமயை வளர்ப்பதிலும் வன்னி ரெக்கின் வளர்ச்சி காத்திரமான பங்களிப்பைச் செய்யும்.
இது சம்பத்தமான மேலதிக தகவல்களை அறிய கீள் உள்ள தளங்களைத் திறக்கவும்.
www.ittpo.org
www.vanni.org

USD 500.00 மேல் உதவியளிப்போர் வன்னி ரெக்கின் புரவலர்குளாதிற்கு அங்கத்துவம் உடையோராகவும், USD 2,000.00 மேல் அழிப்போர் தாங்கள் விரும்பும் பெயரை உடைய புலைமைப் பரிசில் ஒன்றை அமைக்கும் சந்தர்ப்பத்தையும் பெறுவர்.

எமது நாளைய வெற்றி எமது பலத்திலேயே தங்கி உள்ளது.
எமது பலம் எமது திறனிலேயே தங்கி உள்ளது.எமது திறனையும் ,ஆளுமையையும் வளர்க்க எமது பங்களிப்பை காத்திரமான வழிகளில் வழங்கிடுவோம்.இத் தகவலை உங்கள் உறவுகளிடமும் , நண்பர்களிடமும் தெரிவியுங்கள்.

உதவ விரும்புவோர் treaurer@ittpo.org or directors@ittpo.org என்னும் மின்னச்சலுக்கு அறியத்தரவும்,சிறிய தொகையாகினும் உங்கள் உதவிக்கு நன்றி.