Yarl Forum
அதிகரித்த உடல் நிறையை எவ்வாறு தீர்மானிப்பது (Obesity) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: அதிகரித்த உடல் நிறையை எவ்வாறு தீர்மானிப்பது (Obesity) (/showthread.php?tid=4062)



அதிகரித்த உடல் நிறையை எவ்வாறு தீர்மானிப்பது (Obesity) - KULAKADDAN - 06-26-2005

அதிகரித்த உடல் நிறை இன்று எமது மக்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதை எவ்வாறு அறிவது என பாருங்கள்.



<b>உடல் திணிவு சுட்டி = உடல் நிறை/ (உயரம்)^2</b>

<img src='http://img247.echo.cx/img247/560/untitled8zu.jpg' border='0' alt='user posted image'>

அதிகரித்த உடல் நிறை உடனடியாக பெரிய பிரச்சனையை கொடுக்காவிட்டாலும் காலப்போக்கில் அது பிரச்சனைக்குரியதாக மாறலாம்.
நீரிழிவு
உயர் குருதியழுத்தம் போன்றவை பிற்காலத்தில் ஏற்படலாம்

எனவெ உங்கள் உயரத்துடன் ஒப்பிட்டு உங்கள் நிறை எவ்வாறு இருப்பது விரும்பத்தக்கது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உதாரணமாக ஒருவருடத்தில் 1000, 000 கிலோகலோரி உணவு உள்ளெடுகிறீர்கள் என வைத்தல். அதில் 1% மான சக்தி உங்கள் உடலில் சேமிக்கப்பட்டால் உங்கள் வருடந்திர நிறை அதிகரிப்பு 1.2-1.7 கிலோகிராம் ஆக இருக்கும். இதேவேகத்தில் போனால் 10 வருடத்தில் 17 கிலோகிராம் நிறைஅதிகரிப்பு உங்கள் உடல் நலனை சீர் குலைக்க போதுமானதாக இருக்கும்.

இத்தரவு உங்கள் உடல் நிறை எங்கிருக்கிறது என அறிய உதவும் என் நினைக்கிறேன்.
இதை பற்றி மேலும் தர முயற்சிக்கிறேன்.
தொடரும்.............


- Niththila - 06-27-2005

தகவலுக்கு நன்றி குளம் அண்ணா


- Mathan - 06-27-2005

நன்றி குளம்.

<img src='http://www.bbc.co.uk/health/images/300/feet_on_scales.jpg' border='0' alt='user posted image'>

உடல் திணிவு சுட்டி என்று சொல்லப்படும் Body Mass Index (BMI) ஐ கீழே உள்ள இணைப்பில் இலகுவாக கணிக்கலாம்.

http://www.healthyliving.gov.uk/howhealthy...?contentid=1385


- KULAKADDAN - 06-27-2005

Mathan Wrote:நன்றி குளம்.

<img src='http://www.bbc.co.uk/health/images/300/feet_on_scales.jpg' border='0' alt='user posted image'>

உடல் திணிவு சுட்டி என்று சொல்லப்படும் Body Mass Index (BMI) ஐ கீழே உள்ள இணைப்பில் இலகுவாக கணிக்கலாம்.
http://www.healthyliving.gov.uk/howhealthy/index.cfm?contentid=1385

நன்றி............ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 06-27-2005

நன்றி மதன் அண்ணா & குளம் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 06-27-2005

நன்றி தகவலுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Nitharsan - 06-27-2005

தகவலுக்கு நன்றி...


- kavithan - 06-28-2005

நன்றி நிதர்சன் .. மிக உபயோகமான தகவல்.. எனக்கில்லை.. எல்லோருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 06-29-2005

உடல் நலன் சார் எச்சரிக்கை. (Diat)

குழைக்காட்டான் வலைப்பதிவாளர்களுக்கு உடல் நலன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டயற் சம்பந்தமாக பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும் சொல்லிய விடயங்களை இளங்காற்றுக்காக எழுதினேன். இந்த வழியையும் ஒருதரம் பின்பற்றித்தான் பாருங்களேன். முழுமையாக உதவாவிட்டாலும் கொஞ்சமாவது உதவலாம். கூடவே ஷண்முகி சொல்வது போல போதுமான அளவு உடற்பயிற்சியும் செய்யுங்கள்.

உண்ணும் உணவில் கலோரிகள் அதிகம் இருப்பினும் அதைப்பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நீங்கள் விரும்பியதை உங்கள் எண்ணம் போல உண்ணலாம். உங்கள் உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்க வழியுண்டு. இப்படி அடித்துக் கூறுகிறார்கள், அமெரிக்க விஞ்ஞானிகளான பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும்.

வயிறு நிறைவது போல் தோன்றுவது, உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்ததல்ல, அது மனதைப் பொறுத்தது. உணவை ரசித்துச் சுவைக்காமல், கோப்பையில் உள்ளதை அடித்துப் பதைத்துக் காலி செய்வதையே எமது வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இங்கே கோப்பை காலியானவுடன் அங்கே வயிறு நிரம்பி சாப்பிட்டு முடிந்து விட்டது என்ற பிரமை எற்படும். இத்தன்மையே பலருக்கு உடல் பருமனாவதற்குக் காரணமாயிருக்கிறது.

ஆனால் உணவை ரசித்து உண்ணும் போது, சிறிதளவு உணவை உட்கொண்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னலை மனது தந்து விடுகிறது. உணவை எப்படி உண்ணவேண்டும் என்ற பயிற்சிகளை இந்த இரண்டு விஞ்ஞானிகளும் அறிவித்திருக்கிறார்கள். அந்தப் பயிற்சிகளுக்குத் தேவையான நேரம், வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே.

(1) உண்பதற்கு ஆயத்தமாகுதல்.
உணவை உட்கொள்ளுமுன் இரண்டு நிமிடங்களை உங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள். முதலாவது நிமிடத்தில் உங்கள் மனதை ஒருநிலைப் படுத்துங்கள். இரண்டாவது நிமிடத்தில் அமைதியாக இருந்த படியே காற்றை ஒரு சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் உள்ளிழுத்து, வெளிவிடுங்கள். இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் முன்னால் உள்ள உணவின் மீது செல்கிறது. சமையலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தை நினைத்துப் பாருங்கள். மேசை விரிப்பிற்குச் செலவிட்ட நேரத்தைக் கவனத்தில் எடுங்கள்.
இந்த நிலையே உணவை உணர்ந்து ரசித்து உண்ணும் தன்மையை உங்களுக்குத் தருகிறது. இங்கேதான் தொடர்ந்து உண்ணவேண்டும் என்ற மனதின் உந்துதல் இல்லாமல் போகின்றது.

(2) சுவை நரம்புகளுக்கான ஓய்வு நேரம்.

உணவுத்தட்டில் இருந்த உணவின் பாதியை உண்டவுடன், உண்ணுவதை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது முன்னர் போலவே சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் காற்றை உள்ளிழுத்து வெளி விடுங்கள். இந்தக் கட்டத்தில், நீங்கள் எவ்வளவு உணவை உட்கொண்டிருக்கிறீர்கள் என்ற விடயம் உங்கள் மூளைக்கு அறிவிக்கப்படுகிறது. அதே நேரம் உணவின் ருசியை ரசிக்காமல் உண்ணும் உங்களது செயல் இல்லாமல் போகின்றது. இச்சிறிய இடைவெளியின் பின் உணவை உட்கொள்ளத் தொடங்குங்கள். இப்பொழுது உணவின் சுவை, ஆரம்பத்தில் இருந்தது போன்றே உங்களுக்கு இருக்கும். இது உங்கள் வயிறு நிரம்பி விட்டது போன்ற எண்ணத்தையும் கொண்டு வரும்.

(3) வயிறு நிறைந்து விட்டது என்று மூளைக்கு அறிவிக்கும் தன்மை.

உணவை உட்கொண்டு பத்து நிமிடங்களின் பின் மனதை ஒரு நிலைப் படுத்தி ஆறுதல் எடுக்க வேண்டிய நேரம். வயிறு நிறைந்து விட்டது என்ற உணர்வு கூடுதலாக ஏற்படும் நேரமும் இதுவே. எனவே மீண்டும் ஒரு தடவை மனதை ஒரு நிலைப்படுத்தி ஐந்து அல்லது ஆறு தடவைகள் மீண்டும் காற்றினை உள்வாங்கி, வெளிவிடுங்கள். இந்த நிலையில் நீங்கள் உட்கொண்ட உணவு உங்கள் உடலுக்கு என்ன பயன் தருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களது இந்த எண்ணம் உங்கள் மூளையில் பதிவாகிவிடும்.

இப்படி உங்களை ஒருநிலைப் படுத்தி மேற்சொன்ன முறையில் உணவினை உட்கொண்டால் உடல் பருமனாவதற்கு வாய்ப்பேயில்லை, என்று சொல்லும் இவ் விஞ்ஞானிகள் சுலபமான சில வழிகளையும் தருகிறார்கள்.
1 - உண்பதற்குச் சிறிய கோப்பைகளைப் பாவியுங்கள்.
2 - கொஞ்ச உணவுடன் சாப்பாட்டுத்தட்டு நிரம்பி விடுவதால் அதிகமாகச்
சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
3 - மேசையை அழகுபடுத்தி, மெழுகுதிரியை எரியவிட்டுச் சாப்பிடுங்கள். அந்த
ரம்மியமான சூழ்நிலை குறைவாகச் சாப்பிடும் எண்ணங்களைத்
தோற்றுவிக்கும்.
4 - உங்கள் வீட்டை வெளிச்சமாக வைத்திருங்கள்.
ஏனெனில் இருண்ட நேரங்களில்தான் சொக்கிலேற் போன்ற இனிப்பு வகைகளை உண்ணுவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும்.

நன்றி - சந்திரவதனா


- அனிதா - 06-29-2005

தகவலுக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 09-06-2005

நன்றி தகவலுக்கு


- RaMa - 09-07-2005

நன்றி