Yarl Forum
கரும்புலிகள் தினம்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: கரும்புலிகள் தினம்.. (/showthread.php?tid=4002)

Pages: 1 2


கரும்புலிகள் தினம்.. - Thala - 07-01-2005

தம் உயிர்களை ஆகுதியாக்கி உயிரராயுதம் ஏந்திய வீரர்களின் நினைவுநாள் அல்ல,அவர்கள் சுமந்த கனவுகள் இலச்சியம் தாயகவேட்கை என்பதை தம் உயிரினும் மேல் என்று உலகிற்கு உரத்து சொன்ன ஆண்டுகளின் நிறைவுநாள். என்றுமே நினைவில் நிற்கும் இவகள் தான் சிறிலங்கா அரசின் சமாதானக்கதவுகளின் பூட்டை கட்டுநாயகாவில் உடைத்துதெறிந்தவர்கள், நிழலாகிப்போனவர்..."வாய் விட்டு பேர் சொல்லி அழமுடியாது"



கரும்புலிகளின் முதற்படி..
<img src='http://eelam.tamilpower.com/maaveerar_miller.jpg' border='0' alt='user posted image'>
<b>கப்ரன் மில்லர்</b>

[b]கரும்புலி கப்டன் மில்லர் குறித்து அவரது தாயார் பின்வருமாறு கூறுகிறார்"

'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் ப+ட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

";மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும் போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கி விட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.

இப்படித்தான் இன்னும் ஒரு நாள்.......
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் "ராங்கிற்குள்" குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை. காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்பு போல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்று போனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். 'அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டிசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."


அம்மாவுக்கு உள்ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள். அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுவாள். இது வழமையாகிப் போனது.
"இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள். 'அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது. பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.

அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக் குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.." ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்....... 'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"


- hari - 07-01-2005

நன்றி தலை


- Nitharsan - 07-01-2005

கரும்புலி மில்லரின் காவிய நிகழ்வினை கருத்துக்கள்தில் பகிர்ந்திட்ட தலைக்கு நன்றி


- Thala - 07-02-2005

<b>தாயகத்தில் நிகழ்ந்த இன்னொரு தாக்குதலில்</b>

<img src='http://img205.imageshack.us/img205/3963/maaveerarltcolpork7jo.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:25pt;line-height:100%'>போர்க்</b></span>

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. "நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

அந்தக் குரலில் உறுதி தெரிந்தது"போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்". தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் "1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, "நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது" என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்"முகாம் கைப்பற்றப்பட்டது" என்றார்.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.

அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

"தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?" 'ஏன் சாகப் போறியளோ' பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி "தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன"

அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். "அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை" போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.

அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, "அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு" என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

சிறிது நேரத்தின் பின்

தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை" என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.

பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். "தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது பொட்டு வைக்கச் சொன்னது உடுப்புகளை விட்டிட்டுப் போனது ஏனெண்டு விளங்குது" போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழு தழுத்தது.


- Thala - 07-02-2005

ஹரி நீங்கள்தானே வரலறுகளை தேடிதருவதில் <b>மன்னன்</b>...

உற்சாகப்படுதியமைக்காய் நன்றி ஹரி, நிதர்சன்.


- hari - 07-02-2005

<b>கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம். </b>

கரும்புலி
சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்.
கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம்.
வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம்.
உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்.
அடிமுடியை அறியமுடியாத அற்புதம்
தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை.
இவர்களை எழுதத் தொடங்கினால்...
எந்தமொழியும் தோற்றுப்போகும்.
வார்த்தைகள் வறுமை அடையும்
உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும்
வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்.
கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால்
அற்புதம் என்பார்கள்
அடுத்தவார்த்தை வராது.
சித்திரக்காரர்களும்
தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்.
பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட
குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும்.
ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது.
சமுத்திர நீரை
அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா?
ஓடும் முகிலை
ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா?
எதிரியின் எந்தவலுவும்
இறுதியில் இவர்களிடம் சரணடையும்.
கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.
மறுநாள்
வெடித்த செய்தி வெளிவரும்போது
ஜாதகமும் சோதிடமும்
தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும்
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக் கொண்டு
எல்லோரையும் போலவேதான் இவர்களும்.
உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்
வேறுபட்டது.
உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து
விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள்.
கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட
தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர்.
முதுகில் வேர்க்குரு போட்டாலே..
முந்நூறு மருந்துகள் தேடும் உலகில்
சாவைத் தம் தோள்களில் சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள்
காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது
காற்றுக்கு வேர்க்கும்.
நீர் நெருப்பாகிவிடும்.
இவர்களுக்கு;
சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.
பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
கரும்புலிகள்;
தலைவன் தலைவாரிவிடும் புயல்கள்.
தாயை நேசிக்கும் அளவுக்கு
தலைவனையும் நேசிப்பவர்கள்.
தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள்.
ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம்
இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை.
யுலை 5.1987
கருமைக்கும் பெருமை வந்த நாள்.
புலியொன்று முதல் கரும்புலியான தினம்
நெல்லியடியில்
"மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள்.
"எல்லாம் சரி
வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்"
கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின்
வாய் மூட முன்னர்
செவிப்பறைகள் கிழிந்தன.
சாவு நேரே ஓடிவந்து
முகத்தில் சந்திக்குமென்று
எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.
"உயிராயுதம்" வலுவானது.
கரும்புலிகள்
தேவை அறிந்து செல்பவர்களே அன்றி
சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல..
இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ
முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல.
இதயம் இரும்பாலானவர்களும் அல்ல.
பனியாய் உருகும் நெஞ்சுக்கும்
பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும்
உரிமையாளர்கள்.
வெடித்த பின்னரும்
இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை.
சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான்.
"நடுகல் நாயகர்கள் " ஆகும் வாய்ப்பும்
எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை.
கல்லறை கூட இல்லாத காவியமாய்
வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல்
சிலருக்கு வெளியே தெரியாத
வேரின் வாழ்வு.
பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு
கரும்புலிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்
கால நதியில்
இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு
இனி என்ன செய்வதுதென்று
தலைவெடிக்கும் போதுதான்
இந்த சுகந்த ஊதுபத்திகள்
உடல்வெடித்துப் போகிறார்கள்.
<b>"ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்" </b>
பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல
வந்தவரிகளில் வென்றவரிகள் இவை.
கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கல்லறையா?
இல்லை.
எதுவுமே இல்லை
நெஞ்சின் நினைவே
நெடிய கோபுரம்.
கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம்!

புதுவை இரத்தினதுரை

ஆனி,ஆடி 1994


- hari - 07-02-2005

<b>அழியாத வரம்பெற்ற ஆதவன்கள் </b>

-------------------------------
விடுதலை நெருப்புக்கு
நெய்சேர்த்து சென்றுவிட்டது
ஒரு
நெருப்புக்குழந்தை...!
ஈழத்தின் ஒவ்வொரு
ழூலை முடுக்கிலும்
விடுதலை நெருப்பை
விதைத்துவிட்டு மெல்ல
அணைந்துவிட்டது அந்த
நெருப்பு...!

இந்த நெருப்புப்பந்தின்
வெளிச்சம் மெல்ல அணைந்தாலும்
வெப்பம் இன்னும்
அடங்கவில்லை...!
தமிழீழத்தில் புறப்பெடுக்கும்
கடைசிக்குழந்தையின்
காலம்வரை கட்டாயம்
அடங்காமல் இருக்கும்
இந்த வெப்பம்...!

ஒரு வழிகாட்டி
புறக்கப்போகும் பிஞ்சுக்கும்
பாடமாகிவிடுகிறான்...!

மானிடகுலத்தின்
கடைசிக்காலம்வரை செல்லும்
வாழ்க்கைப்பயணத்தில்
எதிர்பாராமல் இடைக்கிடையே
இனம்தெரியாத இடிமின்னலுடன்
கூடிய இருட்டில் அகப்பட்டு
தவிக்கும்போதெல்லாம்-ஒரு
வழிகாட்டி வந்துதான்
உயிருக்கு ஒளி ஊட்டிவைக்கின்றான்...!

உயிராயிதமாய் உருவெடுத்து
பகைவரது உயிர்குடித்த
கரும்புலி மில்லறே...!
நெருப்பின் குழந்தையே...!
நீ தீச்சுவாலை அல்ல
தீப்பொறிகள்...!

உன்னில் இருந்து
எழுந்த தீப்பொறிகள்
பல நூற்றாண்டுவரை
பயணிக்க தொடங்கிவிட்டன...!

கிளியை குரங்காகவும்
குரங்கைக்கிளியாகவும்
ஆக்கிக்கொண்டே
ஆராட்சிசெய்துகொண்டிருக்கம்
ஆராட்சியாழர்களே...!

என்றைக்கோ இறந்துபோன
உடலுக்கு
இன்றைக்கும் வேர்க்கக்கூடாதென
சாமரம் வீசிக்கொண்டிருக்கும்
வல்லரசுகளே...!

அழிவைமட்டும் தரக்கூடிய
அணுகுண்டுகளை
தயாரித்துக் கொண்டிருக்கும்
விஞ்ஞானிகளே...!

எங்கள் மனிதவெடிகுண்டை
பாருங்கள்...!

இந்த உயிராயிதங்களில்
உருவாகும் சத்தங்களில்
முடிந்தால் சில சாதனைகளை
உருவாக்கிக் கொள்ளுங்கள்...!

மாவீரன் மில்லறே...!
கொள்கைத்தலைவனின்
கொட்டுமுரசே...!

அடுத்த
தமிழ்மகனின் தேவை
ஆயுதங்கள் அதிகம் நிறைந்த
நாடு அல்ல
அன்பு அதிகம் மலரும்
மலர்காடு என்பதற்க்காய்
உயிராயிதமானாயோ...???

நீ தமிழரெல்லாம்
உன்சொந்தம் என்றாய்
தமிழனுக்குத்தான்
தமிழீழம் என்றாய்-ஆனால்
தமிழீழம் என்றென்று உண்டோ
என்கிறார்கள்...???

ஏய்...!
குனிந்த தமிழினமே
எழுந்திருங்கள்
வீரத்தாய்க்குலமே விடைகொடுங்கள்
எங்கள் புனித தேசத்தை
கருபுலிப்புயல்கள் வலம்வரட்டும்

புல்லென்று நினைத்த
புழுவையும்
கல்லெடுத்தெறிந்த
கயவரையும் கரும்புலி
கொன்றுகுவித்து
திரும்பட்டும்...!

அன்பான தமிழீழ மக்களே
நீங்கள் வெற்றியுடன்
திரும்பும் புயல்களை
வரவேற்க்க ?மாலை
கொண்டு வரவேண்டாம்...!
பதிலாக வாடாத பாமாலை
கொண்டுவாருங்கள்
கானத்தில் கரும்புலிக்கு
கவிவரைவோம்...!

இனிவருகின்ற
வருடமெல்லாம்
கரும்புலிகள் நினைவுநாள்
ஆகிவிடக் கூடாது...!
மண்ணில் மறுபடி மறுபடி
மலரும் மறவருக்கு
நினைவுநாள் எதற்க்கு...!

கரும்புலிகள்
மரணிப்பதில்லை

கத்தும் காற்றும்
கரிக்கும் கடலும்
எரிக்கும் கதிரவனும்
வெடிக்கும் கரும்புரியும்
மரணித்ததாய் சரித்திரம்
ஏதுமில்லை...!

த.சரீஷ்


- hari - 07-02-2005

<b>கரும்புலிகள் தினத்தை எழுச்சியுடன் கடைப்பிடிக்க தாயகம் எங்கும் சிறப்பு ஏற்பாடுகள் </b>


கரும்புலிகள் நாளை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிப்பதற்காக தமிழீழ தாயகமெங்கும்; பல்வேறு ஏற்பாடுகளில் பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் என்பன ஈடுபட்டுவருவதாக எமது தாயகச் செய்தியாளர்கள் அறிவிக்கின்றனர்.

தமிழர் தாயகத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் வீதிகள், பொது இடங்கள் தூய்மைப் படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

வீதிகளில் பிரமாண்டமான வளைவுகள், வீதி அலங்காரங்கள், கரும்புலிகளின் திருவுருப் படங்களை கொண்ட நினைவு மண்டபம் அமைத்தல், போன்ற ஏற்பாடுகள் ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளன.

இதனடிப்படையில் வன்னியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்பாடுகள் பற்றிய படங்கள்
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/b4_black_tigers_day.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/b4_black_tigers_day1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/b4_black_tigers_day2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/b4_black_tigers_day3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/b4_black_tigers_day5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/b4_black_tigers_day7.jpg' border='0' alt='user posted image'>


- Thala - 07-02-2005

<b>முதல் பெண் கடற்கரும்புலி</b>
<img src='http://img135.imageshack.us/img135/6310/maaveerarangayatkanni3jk.jpg' border='0' alt='user posted image'>

[b]கடலன்னையின் பெண் குழந்தை


கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

"இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்" அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.

தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். 'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை'

என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.

எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன். என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.

தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். 'ரைட், கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது.

அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.


- kavithan - 07-02-2005

அனைவருக்கும் நன்றி


- Niththila - 07-03-2005

நன்றி ஹரி அண்ணா மற்றும் தலை


கரும்புலிகளின் படங்கள் - SUNDHAL - 07-05-2005

www.aruchuna.com இங்கே செல்லவும்


- hari - 07-05-2005

<img src='http://www.battieelanatham.com/news/07/black_logo.jpg' border='0' alt='user posted image'>


- hari - 07-05-2005

கரும்புலிகள் நாள் சிறப்பு நேரடி ஒலிபரப்பினை புலிகளின் குரல் இணையத்தளம் ஊடாக கேட்கலாம்!

கரும்புலிகள் நாளையொட்டி தமிழின உணர்வுக் ;கவிஞர் வழங்கிய கவிதை
நன்றி: கனடா தமிழ்ச்சோலை

கரும்புலிகள் நாளையொட்டி போராளிக் கவிஞர் மலைமகள் ஆற்றிய விசேட உரை
நன்றி: தமிழ் நாதம்


- வெண்ணிலா - 07-05-2005

தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றி


- Nitharsan - 07-05-2005

நன்றி ஹரி மற்றும் ...தலை..


- SUNDHAL - 07-05-2005

http://www.aruchuna.com/martyr/karumpulli/


- Thala - 07-05-2005

கரும்புலிகள் இசைப்பேளை பாடல்களைக் கேட்பதற்கு (பழயது)

<b>http://www.eelatamil.com/index.php?option=...w&id=48&Itemid=</b>


- ஊமை - 07-05-2005

கரும்புலிகள் நேரடி ஒலிபரப்பை கேட்க


- Niththila - 07-05-2005

தகவல்கள் தந்த எல்லோருக்கும் நன்றி