![]() |
|
இது கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இது கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..! (/showthread.php?tid=3998) |
இது கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..! - kuruvikal - 07-02-2005 <img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'> <b>கருவினில் அவன் பிறப்பு கரும்புலியல்ல... கனி தமிழ்ச் செல்வன்...! கடும் பகைவர் கொடுமை கண்டு கடும் சினம் தான் கொண்டு கரிகாலன் படைதனில் கரும்புலியாகி கடல் தனில் கரை தனில் கடுஞ்சமர் நடுவினில் கருவிழி துருவி - எதிரி கதை முடிக்க கரும்புகையாகி கலக்கின்றான் காற்றோடு..! கரும்புகை நடுவினில் கரும்புலி கண்டு கலங்கும் சிங்களம் கடுப்பாகி கத்திட கண்ட நரிகள் கண்டம் நடுங்கிட கதைக்கின்றார் சர்வதேச பயங்கரவாதம்..! கரும்புலியவன் சாதனை கடுங்குற்றமல்ல களந்தனில் கூடிடும் கடும் பகை முடிக்க கருவியாகித் தருகிறான் தன்னுயிர் கடுந்துயர் காணும் தமிழர் கடுந்தாகமாம் தமிழீழத் தாயகத்திற்காய்...! கடும் பகை வளர்க்க கனரக கருவி தரும் கனவான்களே கண்டு கொள்ளும் சங்கதி கரும்புலியவன் கடும் கொள்கை கருவினில் தவழும் தமிழ் சிசுவும் கற்றுக் கொள்ளும்..! கறுவி நீர் பயனில்லை கலங்காமல் முடித்து வையும் கடும் பகை - இது வீணே கதை பேசும் காலமல்ல கரிகாலன் காலம் கணத்தோடு காரியம் முடிக்கும் காலம் கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..!</b> - SUNDHAL - 07-02-2005 கவிதை அருமை குருவி - வெண்ணிலா - 07-02-2005 Quote:கதை பேசும் காலமல்ல கவிதை நன்று. வாழ்த்துக்கள் அண்ணா - hari - 07-02-2005 கவிதை அருமை குருவி வாழ்த்துக்கள்! - kavithan - 07-02-2005 நன்றாக இருக்கு கவிதை வாழ்த்துக்கள் குருவிகளே - kuruvikal - 07-02-2005 வாழ்த்துக்களுக்கு நன்றி.. உங்களுக்காக எங்களுக்காக எதிர்கால சந்ததிக்காக...தம்முயிர் தந்த தற்கொடையாளர்களுக்காய் நீங்களும் படையுங்களன்..கவி கொண்டு ஒரு புகழ்மாலை.. நினைவதில் தாங்கிட என்றும்..! - KULAKADDAN - 07-02-2005 நன்றி குருவிகளே - Thala - 07-02-2005 அருமை.. வாழ்த்துக்கள் குருவீஸ்.. இன்னும் பல கவிக்காய் காத்திருக்கிறேன் |