Yarl Forum
என்ன நினைக்கின்றீர்கள்? சரியா? தப்பா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: என்ன நினைக்கின்றீர்கள்? சரியா? தப்பா? (/showthread.php?tid=3997)

Pages: 1 2


என்ன நினைக்கின்றீர்கள்? சரியா? தப்பா? - SUNDHAL - 07-02-2005

டெல்லியைச் சேர்ந்த போலீஸ்காரர் அனு}ப் சிங் திடீரென இறந்து விட்டார். அப்போது அவரது மனைவி மம்தா வயிற்றில் 19 வார கரு உருவாகி இருந்தது. கணவன் மரணத்துக்குப் பிறகு அதை மம்தா கலைத்து விட்டார். என் மகனின் ஒரே வாhpசை என் சம்மதமின்றி மருமகள் கலைத்து விட்டார். தந்தையின் தூண்டுதலி;ன் போpலும், மறுமணம் செய்யும் ஆசையிலும் மம்தா இப்படி செய்ததாக அனு}ப்சிங் தாயார் லட்சுமிதேவி குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். இப்போது மம்தா, அவரது பெற்n;றhர், சகோதரர், கரு கலைத்த டாக்டர் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளனர்.

கணவன் இறந்த பிறகு அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டியது கஷ்டமாக இருக்குமே என்று மம்தா கலைத்து விட்டாh


- SUNDHAL - 07-02-2005

இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கணவர் இளம் வயதிலையே இறக்கின்ற பட்சத்தில் அவனுடைய கருவை களைக்கின்ற அதிகாரம் பெண்னிற்கு இருக்கிறதா?
கணவன் அந்த குடும்பத்தின் ஒரேவாரிசாக இருக்கின்ற பொழுது அந்த குழந்தையை பெற்று கொடுத்து இருக்க வேண்டும் என்று பெண்னினுடைய மாமியார் எதிர் பார்த்தது தவரா?


- hari - 07-02-2005

:roll: :roll:


- அருவி - 07-02-2005

சுண்டல்
அது அந்தப் பெண்ணின் விருப்பம்.
குடும்பத்தில் முடிவெடுக்க வேண்டியது துணைவனும் துணைவியும் பிள்ளைகளும் மாத்திரமே.
மற்றவர்களிடம் ஆலோசனை பெறலாமே தவிர முடிவல்ல.
பின்பு துன்பப்படுவது அப்பெண் மாத்திரமே.
மாமியார் அந்த நேரத்தில் திரும்பியும் பார்க்கமாட்டார்


- SUNDHAL - 07-02-2005

ஆனால் தன்னுடைய ஒரே பிள்ளையை இழந்த சோகம் அந்த தாய்க்கு ஆகவே மகனுடைய வாரிசு கருவில் வளர்ந்து கொன்டு இருக்கின்றது அவன் பிறந்து வந்ததும் தன்னுடைய மகனையே அந்த குழந்தை மூலம் கான நினைத்திருந்த அந்த தாய்யினுடைய நிலையும் கவலை அழிக்க கூடியது அல்லவா?
எது எப்பிடி இருப்பினும் நீதி என்ன கூறப்போகின்றது என்பதனை பொறுத்திறுந்து பார்ப்போம்.


- Eswar - 07-02-2005

நீதி என்னத்த சொல்லி என்னத்த கண்டது. மொத்தத்தில அந்த சந்ததி அழிஞ்சு போச்சே.


- yalie - 07-02-2005

அருவி கூறியுள்ளது போல் இது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சொந்த விருப்பம். ஏனெனில் எதிர்கால பிரச்சiனைகளை எதிர் கொள்ளப் போகின்றவள் அவள் மாத்திரமே!
இன்று துள்ளும் மாமியார் இதுவே பெண் குழந்தையாக பிறந்தால் அதனைக் கொல்லவும் துணியக் கூடும்.
சந்ததி அழிந்து போய் விட்டது என்று கவலைப்படுவதை விட, கணவனை இழந்துள்ள ஒரு பெண்ணுடைய எதிர்காலப் பாரம் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது என்பதே பொருந்தும். (அதற்காக குழந்தைகளைப் பாரம் என்று சொல்கின்றேன் என்பது பொருளல்ல)
தவிர கணவர் இருக்கும் பொழுது கூட, இங்கு வெளிநாடுகளில் ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செய்யப்படும்.
எந்த ஒரு மனிதரும் தனிப்பட்ட முறையில் தமது வாழ்க்கை பற்றி முடிவெடுக்க சகல உரிமைகளும் உண்டு. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், கட்டிய மனைவியாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி இருக்கும் போது மாமியார் எம்மாத்திரம்??

ஆனால் ஒன்று விளங்கவில்லை. 19 மாதக் கரு என்று சொல்லி இருக்கின்றீhகள்!! அப்படியானால் கிட்டத்தட்ட நான்கு அரை மாதங்கள்! அந்த நிலையிலுள்ள கருவை அழிப்பது தாயின் உயிருக்கே ஆபத்து! அந்த நிலையிலும் மம்தா கருவை அழிக்க முடிவெடுத்திருந்தார் என்றால் நிச்சயமாக இதற்கு தகுந்த காரணம் இருக்கும்.
வெளியில் இருந்து மேலோட்டமாக செய்தியை மட்டும் படித்து விட்டு நாம் அவரைக் குறை கூறுவது நல்லதாகப் படவில்லை!!


- tamilini - 07-02-2005

Quote:டெல்லியைச் சேர்ந்த போலீஸ்காரர் அனு}ப் சிங் திடீரென இறந்து விட்டார். அப்போது அவரது மனைவி மம்தா வயிற்றில் 19 வார கரு உருவாகி இருந்தது. கணவன் மரணத்துக்குப் பிறகு அதை மம்தா கலைத்து விட்டார். என் மகனின் ஒரே வாhpசை என் சம்மதமின்றி மருமகள் கலைத்து விட்டார். தந்தையின் தூண்டுதலி;ன் போpலும், மறுமணம் செய்யும் ஆசையிலும் மம்தா இப்படி செய்ததாக அனு}ப்சிங் தாயார் லட்சுமிதேவி குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். இப்போது மம்தா, அவரது பெற்n;றhர், சகோதரர், கரு கலைத்த டாக்டர் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளனர்.

கணவன் இறந்த பிறகு அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டியது கஷ்டமாக இருக்குமே என்று மம்தா கலைத்து விட்டாh
_________________
காரணம் எதுவானாலும்.. ஒரு சிசுவைக்கொல்வது நல்லாய் இல்லை. கணவன் இனி இந்த உலகத்தில இல்லை என்று ஆன பின்னர். அந்த கணவன் நினைவாய் ஆவது பெற்றெடுத்திருக்கலாம். அந்த பெண்ணின் நிலை எப்படியோ..?? ஒரு வேளை பிறரில் தங்கியிருக்க வேண்டியிருந்தா கஸ்டம் தானே.. :?


- kuruvikal - 07-02-2005

SUNDHAL Wrote:இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கணவர் இளம் வயதிலையே இறக்கின்ற பட்சத்தில் அவனுடைய கருவை களைக்கின்ற அதிகாரம் பெண்னிற்கு இருக்கிறதா?

கணவன் அந்த குடும்பத்தின் ஒரேவாரிசாக இருக்கின்ற பொழுது அந்த குழந்தையை பெற்று கொடுத்து இருக்க வேண்டும் என்று பெண்னினுடைய மாமியார் எதிர் பார்த்தது தவரா?

இப்படிப் பார்த்தா வெள்ளைக்காரப் பெண்கள் பல மடங்கு உசத்தி போல...இறந்த அல்லது நோய் வாய்ப்பட்ட கணவனின் கருவுக்காக குளோனிங் செய்யும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்...! என்னதான் சிரமம் இருந்தாலும் உண்மையான அன்புள்ள கருணை உள்ள எந்தப் பெண்ணும் அவளுடைய அன்புக்குரியவனின் ஒரு கருவை அழிக்கமாட்டாள்...!

சூழ்நிலைகளை மனிதன் தான் வெற்றிகொள்ள வேண்டுமே தவிர சூழ்நிலைக்குப் பயந்து மனிதன் தவறு செய்கின்றான் என்றால்..அவன் வாழ்வதில் அர்த்தமென்ன...! அன்புக்குரிய கணவனின் வாரிசுக்காக போராடப் பயந்தவளுக்கு... பிறகெதற்கு திருமண வாழ்வு...!

கருக்கலைப்பு என்பது அங்கீகரிக்கப்பட்ட படுகொலை....! இதனால் இன்று தவறு செய்வபர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 07-03-2005

சபாஸ் குருவிகளே!


- வெண்ணிலா - 07-03-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 07-03-2005

குருவியாரே நாங்கள் அப்பெண்ணின் நிலையினை அறியாமல் கதைக்கிறோம்.
ஒருவேளை அப்பெண்ணிற்குக் கட்டாயத் திருமணம் நடந்திருந்தால்............
அடுத்து இன்னொரு கருத்து வெள்ளைக்கார பெண்களைப்பற்றி கூறியிருந்தீர்:- அவர்களின் வாழ்க்கைமுறை முற்றுமுழுதாக வேறுபட்டது.
திருமணத்தையும் அவர்கள் அங்கீகருத்துள்ளார்கள். அதையும் ஆமோதிக்கிறீர்களா?(தமிழ் சமூகத்தில்)
கணவர் இல்லாமலும் தனியே வாழக்கூடிய நிலையில் உள்ளவர்கள்

நீங்கள் கூறியபடி சூழ்நிலைகளை மனிதன் வெற்றிகாண வேண்டுமென்றால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவனிட்ட அடிபட்டு செத்திருக்கோணும்.

(நீங்கள் நினைக்கலாம் இவர்கள் அங்கு இருந்திருந்தால் எப்பவோ ஈழம் கிடைத்திருக்குமென்று ஆனால் தற்போதைய எமது பலத்திற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒருகாரணம்.)


- அருவி - 07-03-2005

குருவியாரே நாங்கள் அப்பெண்ணின் நிலையினை அறியாமல் கதைக்கிறோம்.
ஒருவேளை அப்பெண்ணிற்குக் கட்டாயத் திருமணம் நடந்திருந்தால்............
அடுத்து இன்னொரு கருத்து வெள்ளைக்கார பெண்களைப்பற்றி கூறியிருந்தீர்:- அவர்களின் வாழ்க்கைமுறை முற்றுமுழுதாக வேறுபட்டது.
GAY & LESSBIAN திருமணத்தையும் அவர்கள் அங்கீகருத்துள்ளார்கள். அதையும் ஆமோதிக்கிறீர்களா?(தமிழ் சமூகத்தில்)
western women கணவர் இல்லாமலும் தனியே வாழக்கூடிய நிலையில் உள்ளவர்கள்

நீங்கள் கூறியபடி சூழ்நிலைகளை மனிதன் வெற்றிகாண வேண்டுமென்றால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவனிட்ட அடிபட்டு செத்திருக்கோணும்.

(நீங்கள் நினைக்கலாம் இவர்கள் அங்கு இருந்திருந்தால் எப்பவோ ஈழம் கிடைத்திருக்குமென்று ஆனால் தற்போதைய எமது பலத்திற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒருகாரணம்.)


- hari - 07-03-2005

சபாஸ் சரியான போட்டி


- அருவி - 07-03-2005

ஒருவர் தனது வாழ்வுபற்றித் தானே முடிவெடுக்கவிடுங்களேன்

அதையாவது விட்டுக்கொடுப்போம்


- அருவி - 07-03-2005

என்ன மன்னா உங்களின் கருத்தும் அறிய ஆவல்


- அருவி - 07-03-2005

ஹரி உங்கள் கருத்துப்பற்றி அறியவும் ஆவல்


- அருவி - 07-03-2005

sorry for the double entry
that was my mistake


- hari - 07-03-2005

அதுதானே ஏற்கனவே இதை :roll: :roll: போட்டுட்டன், இந்த கதையின் முழு உண்மையும் தெரியாமல் கருத்துசொல்லமுடியாது!


- hari - 07-03-2005

இப்ப பாருங்கள் நீங்களே உங்களை அறியாமல் இரண்டு தவறு செய்துவிட்டீர்கள், ஒன்று இருதடவை பதிந்தது, இரண்டு ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்டது, அப்படித்தான் அந்த கதையிலும் என்ன என்ன தவறு இருக்கோ யாருக்கு தெரியும்?