Yarl Forum
வித்தியாசமான சாமியார் (நாடு உருப்பட்டா மாதிரிதான்) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: வித்தியாசமான சாமியார் (நாடு உருப்பட்டா மாதிரிதான்) (/showthread.php?tid=3940)



வித்தியாசமான சாமியார் (நாடு உருப்பட்டா மாதிரிதான்) - Vaanampaadi - 07-10-2005

[size=18]<b>அமாவாசையில் அருள்வாக்கு சொல்லும் சிகரெட் சாமியார் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது </b>



அரூர்,ஜூலை.10- தர்மபுரி மாவட்டடத்தில் அமாவாசையில் அருள்வாக்கு சொல்லும் சிகரெட் சாமியாரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சாமியார் என்றாலே காவி உடை, கழுத்தில் துளசி மாலை, நெற்றியில் பட்டை, குங்குமம் என்ற சில அடையாளங்கள் மனதில் எழும். ஆனால் இந்தவிதமான எந்த அடையாளங்களும் இன்றி சாதாரண தோற்றத்தில் அரைக்கால் டிரவுசர், ஜீன்ஸ் சர்ட், கையில் சிகரெட், பறட்டை தலை என்ற நலையில் சுற்றி கொண்டிருக்கும் ஒருவரின் பின்னால் ஆசி வாங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது வெளி நாட்டிலோ, வெளி மாநி லத்திலோ அல்ல. நம் தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து தீர்த்தமலை செல்லும் 16-வது கிலோ மீட்டரில் உள்ள பாளையம் என்ற இடத்தில்தான் சிகரெட் சாமியார் ஆசி வழங்குகிறார். அதற்கென சிறியதாக ஒரு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே இவரை பார்க்க முடிகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஏராளமானார் வரிசையில் நின்று சிகரெட் சாமியாரின் ஆசியை பெறுகின்றனர். மற்ற நாட்களில் இவர் எங்கு இருக்கிறhர் என்று எவருக்கும் தெரியாது. ஒருசில வி.ஐ.வி. பக்தர்கள் மட்டும் இவரின் இருப்பிடம் அறிவர்.

பாளையம் வந்து இவர் சேர்ந்த விதமே வித்யாசமானது. இவ்வூரை சேர்ந்த அசோக்குமார் சாமியாரை பற்றி அறிந்து தன் நோயை குணமாக்க வேண்டி இவரை அணுகி உள்ளார். சாமியாரின் ஆசியால் அசோக்குமாரின் நோய் குணமாகிவிட்டது. இதனால் அவரின் தீவிர பக்தராக மாறிய அசோக்குமார் சாமியாரை தன் சொந்த ஊருக்கே அழைத்துள்ளார். சாமியாரும் சம்மதம் தெரிவிக்க, தன் சொந்த நிலத்திற்கு அழைத்து வந்து சுற்றி காட்டியுள்ளார். ஓரிடத்தில் கால் இடறி கீழே விழுந்த சாமியார் எழுந்து நின்றபோது எதிரே ஒரு புற்றை பார்த்து இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த இடம் என உரத்த குரலில் கூறி உள்ளார். இதனையடுத்து அந்த புற்கை சுற்றி சிறிய கோவில் ஏழுப்பப்பட்டு தற்போது அங்குதான் சிகரெட் சாமியார் அருள்வாக்கு கூறுகிறார்.

இக்கோவில் கருவறை அடியில் சாமியாருக்கென தியான மடம் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வளவு பிரபலமான சாமியாரின் பூர்வீம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதை பற்றி சிலர் கேட்டபோது அமாவாசை அன்று சொல் கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. அதையடுத்து கடந்த அமாவாசை அன்று பக்தர்களுக்கு ஆசி வழங்க வந்த சாமியாரை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

அப்பேட்டி வருமாறு„-

கேள்வி„- உங்கள் சொந்த ஊர் பற்றி சொல்லுங்கள்?

பதில்„- என் பெயர் பழனிவேல், சென்னை மாநகரை சேர்ந்தவன். டிரைவராக வேலை பார்த்து வந்தேன். சில விஷயங்களில் மனம் வெறுத்த நான் உளுந்தூர்பேட்டை சங்கரலிங்கம் சாமியாரை கேள்விபட்டு அங்கு சென்றேன். அவரது செய்கைகளால் கவரப்பட்டு அவருடைய பக்தனாக மாறி விட்டேன். அவர் இறந்த பிறகு என்னுள் ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த சக்திதான் என்னை இயக்க ஆரம்பித்து, இப்போதும் அதன் மூலமே இயங்கி கொண்டிருக்கிறேன்.

கேள்வி„- உங்கள் பூர்வீகம் பற்றி மேலும் கூறுங்களேன்?

பதில்„- இதற்கு மேல் நான் தெளிவாக சொன்னால் என் உறவினர்கள் என்னை வைத்து பணம் சம்பாதிக்க தொடங்கிவிடுவார்கள். அதனால் இதற்கு மேல் வேண்டாம்(பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் ரூபாய் நோட்டுகளை கிழித்து எரிந்துவிடுவதாக கூறுகிறார்கள்.)

கேள்வி„- உங்களை தேடி அதிகம் பேர் வருகிறார்களே?

பதில்„-ஏதோ ஒரு சக்தியால் மக்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சக்தி எப்போது வந்தது என்றால் தெரியாது. என்னை ஒரு சக்தி இயக்குது. அதன்படி நான் செய்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி„- பக்தர்கள் முன்னால் சிகரெட் குடிக்கிறீர்கள். உங்களை பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா?

பதில்„- யாரையும் நான் வர சொல்லவில்லையே?

கேள்வி„- நீங்கள் சாமியாரா?

பதில்„- நான் சாமி இல்லை. மக்கள் என்னை சாமி என அழைப்பதற்கு நான் பொறுப் பில்லை.

கேள்வி„- வெளியில் உங்களை பற்றி தவறாக பேசுகிறார்களே?

பதில்„- அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை (இவ்வாறு கூறிய அவர் மீன் கதை ஒன்றை தெரிவித்தார்.)

கேள்வி„- மற்ற சாமியார்கள் பற்றி?

பதில்„- நிறைய சாமியார்கள் அறக்கட்டளை தொடங்கி கல்லூரிகள் நடத்தி சேவை செய்து வருகிறhர்கள்.

கேள்வி„- உங்களை தேடி அரசியல்வாதிகள் வருகிறார்களே?

பதில்„- பிச்சைக்காரர்களுக்கு ராஜாவாக இருந்தாலும் நின்று கொண்டுதான் பிச்சை போடுகிறார். அப்போது உட்கார்ந்திருக்கும் பிச்சை காரன்தான் உயர்ந்தவன்.

கேள்வி„- அமாவாசை, பவுர்ணமி தவிர மற்ற நாட்களில் உங்களை பார்க்க முடிவது இல்லையே?

பதில்„- எனக்கு நெருக்கமான பக்தர்களை பார்க்க சென்றுவிடுவேன்.

கேள்வி„- நீங்கள் இன்னும் சில நாட்கள்தான் இருக்க போவதாக கூறுகிறார்களே?

பதில்„-அமாம், நான் 460 நாட்களுக்கு பின்னால் கருவறை அடியில் உள்ள தியான மடத்தில் உறங்கிவிடுவேன். எழமாட்டேன். என்னை நினைத்து கும்பிட்டாலே பக்தர்கள் நினைக்கும் காரியத்தை நிறைவேற்றிவிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டபோது பெரும்பாலானோர் நினைத்தது நடந்ததாகவும், நோய்கள் குணமான தாகவும் கூறினார்கள்.

சிகரெட் சாமியார் தன்னுடைய குருவை அடிக்கடி நினைத்து கொள்கிறhர். எந்த ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன்பும் …சங்கலிங்க சாமிகள் சமர்ப்பணம்† என்று கூறிய பின்னரே பேசத்தொடங் குகிறார். மேலும் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் பக்தர்கள் வாங்கி கொடுத்த செல்போன் மற்றும் காரை பயன்படுத்துகிறhர்.

இந்த வித்தியாசமான சிகரெட் சாமியாரை தர்மபுரி மாவட்டத்தின் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சந்தித்து ஆசி வெற்று வருகி றார்கள். அவ்வப்போது நிதி உதவியும் செய்வதாக கூறப்படுகிறது.


- Danklas - 07-10-2005

ராமா ராமா இந்தியத்தமிலர்களை திருத்தவே முடியாதா... பேசாமல் யாழ்களத்துக்கு வாரதைவிட்டுட்டு நம்மட புலநாயோட போனால் "நாய் சாமியார்" எண்டு நம்பி சனம் என்னட்ட வந்தால் நானும் கண்டபடி அறிக்கைகள் விடலாம் கேடிஸ்வரன் சீ கோடிஸ்வரன் ஆகிடலாம் (இருந்தாலும் சாமியாராகிறதுக்கு தேவையான அம்சங்கள் அதுதான் தாடி, வேட்டி, வெள்ளை சட்டை, கானும்தானே..) ஜோவ்வ் சாத்திரி கொஞ்ச நாள் போனால் உம்மையும் அத்துவையும் முகத்தாரையும் எண்ட சிஸ்யர்களாக ஆக்கிறன் ஒகேயா... :wink: :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 07-10-2005

அப்ப உங்கட பேர் டக்கானந்த சுவாமிகளா? நாய்ச்சாமி நல்லா இல்ல......

சாமிகள் எல்லாம் ஆனந்தமாய் இருக்கிறதாலதான் ஆனந்தம் எண்டு பேர் வைக்கிரவ. எதுக்கும் சாத்திரிட்ட எண்கணிதப்படி ஒரு ராசியான பேர் கேளுங்கோவன்..; <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 07-10-2005

யார் இத்தா வாணம்பாடி?????????????????


- Vaanampaadi - 07-10-2005

<!--QuoteBegin-veenanavan+-->QUOTE(veenanavan)<!--QuoteEBegin-->யார் இத்தா வாணம்பாடி?????????????????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=24]<b>தலைவா!!!! அது நான் தான்</b>


- kavithan - 07-10-2005

டக்கானந்த வாழ்க