Yarl Forum
யாழ்குடாநாட்டில் இரவு நேரங்களில் கடுமையான பயிற்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ்குடாநாட்டில் இரவு நேரங்களில் கடுமையான பயிற்சி (/showthread.php?tid=3920)



யாழ்குடாநாட்டில் இரவு நேரங்களில் கடுமையான பயிற்சி - தமிழரசன் - 07-14-2005

<b>யாழ்குடாநாட்டில் இரவு நேரங்களில் கடுமையான பயிற்சி படைத்தளபாடங்கள் முன்னனி காவலரண்கள் நோக்கி நகர்வு! </b>


நாகர்கோவில், கிளாலி, எழுது மட்டுவாள் பிரதேசங்களில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படைகள் இரவில் தீவிர பயிற்சி நடவடிக்கை களில் ஈடுபட்டுவருவதால் மிருசுவில் வரையான கிராமங்கள் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்து வருகின்றன. அத்தோடு போர்த் தளபாடங்களையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முகமாலை நோக்கி நகர்த்தி வருகின்றன.

இடைவிடாத துப்பாக்கிச் சூடுகளுடன் எறிகணைகளையும், டாங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலமும் இப்பயிற்சிகள் இடம் பெற்று வருவதால் குண்டுச் சத்தங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகின்றது.

இதேவேளை யாழ்.குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து முகமாலை நோக்கி கனரக துருப்புக்காவிகள், கவச வாகனங்கள் மற்றும் பல்பேவறு வகையான போர்க் கருவிகளையும் படையினர் நகர்த்தி வருவதாகத் தெரியவருகிறது.