![]() |
|
ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு (/showthread.php?tid=3881) |
ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு - kuruvikal - 07-20-2005 <span style='color:red'><b>ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு</b> துபாய்: <b>இராக்கில் இருந்து தங்களது படைகளை ஒரு மாதத்துக்குள் வாபஸ் பெறாவிட்டால் லண்டனில் நடந்தது போன்ற வெடிகுண்டுத் தாக்குதல்களை உங்கள் நாடுகளிலும் நடத்துவோம் என ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்கொய்தாவின் ஐரோப்பியப் பிரிவு ஒரு இணையத் தளம் மூலமாக வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ஐரோப்பிய நாடுகளுக்கு இது இறுதி எச்சரிக்கை. மெசபடோமியாவில் (இராக்) இருந்து உங்கள் நாட்டு வீரர்களை ஒரு மாதத்துக்குள் திரும்பப் பெற வேண்டும் என கெடு விதிக்கிறோம். ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இந்த கெடு முடியும். அதற்குப் பின் எச்சரிக்கை எல்லாம் விட மாட்டோம். எங்கள் தாக்குதல்களை அரங்கேற்றுவோம். ஐரோப்பாவின் இதயத்தில் எங்கள் தாக்குதல் இருக்கும். பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை உள்பட எங்கள் மண்ணில் படைகளை நிறுத்தியிருக்கும் நாடுகளுக்கு நாங்கள் விடுக்கும் கடும் எச்சரிக்கை இது. ஸ்பெயின் ரயிலிலும், லண்டன் ரயில், பஸ்களிலும் நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். ஒரு மாதத்தில் ஐரோப்பாவை மீண்டும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.</b> [size=9]that'stamil.com</span> - tamilini - 07-20-2005 அடப்பாவிகளா. என்ன தான் நடக்கப்போகுது உலகத்தில. hock:
- Thala - 08-02-2005 இதுசம்மந்தமான!.. அதாவது 9/11 தாக்குதல் சம்பந்தமான ஒரு புலன்விசாரனை அறிக்கையோடுகூடிய விவரணம் ஒன்ரை பிரான்ஸ் புலனாய்வு வலை இதள் வெளியிட அதை அமெரிக்க தளம் ஒன்று ஆங்கிலப்படுத்தியுள்ளது. பெண்டகன் தாக்கப்பட்டதன் விபரம் CIAன் பங்கு இருக்கலாம் என்கின்றரீதியில் விவரணம் அமைந்துள்ளது. எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன்...... http://www.thepowerhour.com/911_analysis/f.../french-911.htm சென்று பாருங்கள்.... Re: ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு - sinnappu - 08-03-2005 kuruvikal Wrote:<span style='color:red'><b>ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு</b> ASYL இனி ஆபிரிக்காவில தான் அடிக்க வேணும் ஓம் ஓம் மச்சானிட்டை போவம் சோமாலியாவுக்கு
|