Yarl Forum
முன்னேற்ற படிக்கற்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: முன்னேற்ற படிக்கற்கள் (/showthread.php?tid=3877)



முன்னேற்ற படிக்கற்கள் - MUGATHTHAR - 07-20-2005

<b>முன்னேற்ற படிக்கற்கள் </b>

கள உறவுகளே உங்களுடைய வாழ்க்கையின்முன்னேற்றத்துக்கு
படிக்கற்களாக இருந்தவர்கள் யார்? ஆதுதான் இந்த தலைப்பின் கீழ் வரப் போகிறது நாங்கள் அனைவரும்

1. பெற்றோரின் அருவணைப்பு
2. சகோதரரின் பாசம்
3. நண்பர்களின் நட்பு
4. மனைவி /கணவனின் காதல்
இவற்றினால் கட்டுண்டு இருக்கிறோம் இதில்அருவணைப்பு . பாசம் . நட்பு . காதல் நான்கையும்; அன்பு என குறிப்பிடுவோம் இவற்றுள் எந்த அன்பு சிறந்தது என வாக்குப் போட முடியாது ஏனெனில் எமது ஒவ்வொரு பருவத்திலும் இவர்களின் அன்பு . ஊக்கம் கிடைத்திருக்கிறது /கிடைக்கும் இதில் உங்களுடைய இன்றைய முன்னேற்றத்துக்கு ஊக்கமாகவும் உறுதுனையாகவும் இருந்தவர்கள் இருப்பவர்கள் யார்? அவர்கள் யார் எண்டு குறிப்பிடுவதில் தப்பொன்றும் இல்லையே.. .. .. ..

. . . . . . . . . . . . . .எனக்குத் தெரியும் கனபேர் மனசுக்கை நினைப்பியள் எல்லா உறவுகளாலும் தொல்லையும் உபத்திரவமும் தான் எங்களை எங்கை முன்னேற விடுகுதுகள் உவன் முகத்தானுக்குத் தேவையில்லாத வேலை எண்டு என்ன செய்ய. . . . . .


- tamilini - 07-20-2005

பெற்றோர்கள் சகோதர்கள் ஆரம்ப படிக்கற்களாய் இருப்பார்கள். அவர்கள் அத்திவாரம் மாதிரி. நண்பர்கள் படிக்கற்களாய் இருப்பது குறைவு. நல்ல காதலன் நல்ல கணவன் இருக்கலாம் உறுதுணையாய். நல்ல விடயம் தான் தொடங்கியிருக்கிறியள் தவத்தார்.


- kuruvikal - 07-20-2005

tamilini Wrote:பெற்றோர்கள் சகோதர்கள் ஆரம்ப படிக்கற்களாய் இருப்பார்கள். அவர்கள் அத்திவாரம் மாதிரி. நண்பர்கள் படிக்கற்களாய் இருப்பது குறைவு. நல்ல காதலன்/ காதலி நல்ல கணவன் / துணைவி இருக்கலாம் உறுதுணையாய். நல்ல விடயம் தான் தொடங்கியிருக்கிறியள் தவத்தார்.

இதுதான் எங்கள் கருத்தும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- samsan - 07-20-2005

பெற்றோர்கள் சகோதர்கள் ஆரம்ப படிக்கற்களாய் இருப்பார்கள்.

அதில் நானும் உடன்படுகிறேன்.

நண்பர்கள் படிக்கற்களாய் இருப்பது குறைவு.

இங்கே என் கருத்து முற்றிலும் வித்தியாசமானது. வசதிகுறைந்த குடும்பத்தில் பிறந்த என்னுடைய மேற்படிப்புக்கு இன்று உதவிசெய்பவனே என் நன்பன்தான். இன்று அவன் வீட்டிலிருந்தே அவன் சகோதரன் போல இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.

நல்ல காதலன்/ காதலி நல்ல கணவன் / துணைவி இருக்கலாம் உறுதுணையாய்.

இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்னைப்பொருத்தவரை ஒருவன் வளர்ச்சிக்கு பொற்றோரும். நன்பர்களின் துணையும் மிக அவசியம்.