Yarl Forum
காதலித்து திருமணம் முடிப்பவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: காதலித்து திருமணம் முடிப்பவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவை (/showthread.php?tid=3844)



காதலித்து திருமணம் முடிப்பவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவை - SUNDHAL - 07-25-2005

எப்போதுமே அதிரடியாக முடிவுகளை எடுக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பார்வை, காதலர்கள் மீது பாய்ந்துள்ளது. குஜராத்தில் காதலிக்க தடை போட்டுள்ளது அவரின் லேட்டஸ்ட் நடவடிக்கை.

"காதல் திருமணங்களை பதிவு செய்ய வேண்டாம்; இருதரப்பு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இல்லாவிட்டால், காதல் திருமணங் களை நிராகரித்து விடலாம்' என்று பதிவுத் துறைக்கு உத்தவிட்டுள்ளது குஜராத் அரசு. பெற்றோர் ஒப்புதல் இல்லாத திருமணங்களை இனி குஜராத் கோர்ட்டுகள் அங்கீகரிக்காது.


குஜராத்தில் கடந்த சில ஆண்டு

களில் 15 முதல் 25 சதவீதம் வரை காதல் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கோர்ட்டுகளில் ஏகப்பட்ட வழக்குகள் குவிந்தன. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் காதலித்து திருமணம் செய்வது அதிகரிப்பதுடன், போலித் திருமணங்களும் நடப்பது தெரியவந்தது. அதாவது, பெற்றோர் ஒப்புதல் பெற்றது போல சொல்லியும், பெண்களை ஏமாற்றியும் திருமணம் செய்வதும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசுக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்தன.

இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, "இனி பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் யாருடைய திருமணத்தையும் பதிவு செய்யக் கூடாது. கோர்ட்டுகளில் அங்கீகரிக் கும் போது, பெற்றோர் ஒப்புதல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்' என்று உத்தரவு போட்டுவிட்டது.


மாநிலத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாமலும், போலியாகவும், ஏமாற்றும் வகையிலும் திருமணங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. இப்படி தொடர்ந்ததால், அதை தடுக்கவே இப்படி முடிவு எடுத்துள்ளது அரசு'

"இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில மாதங்களாகவே அதிக கடிதங்கள், பெற்றோரிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இப்போது உத்தரவை பாராட்டியும் பலரும் அரசுக்கு நன்றி கடிதங்கள் எழுதி வருகின்றனர்' என்று துணைப்பதிவாளர் கோமேதி கூறினார்.

இனி குஜராத்தில் யாரும் காதல் திருமணம் செய்ய முடியாது. அப்படியே செய்ய விரும்பினால், இரு தரப்பு பெற்றோர் சம்மதம் தேவை. அத்துடன், அவர்களின் கடிதங்களும் தேவை. மேலும், மத அடிப்படையில் செய்யும் போது பூசாரி பற்றிய விவரமும் தேவை. அப்படி இருந்தால் மட்டுமே காதல் திருமணங்கள் பதிவு செய்யப்படும். கோர்ட்டுகளில் இதுதொடர்பாக வழக்குகள் வரும் போது, இப்படிப்பட்ட ஆவணங்கள், முக்கியமானதாக கருதப்படும்.


- Eswar - 07-25-2005

என்ன சுண்டல்!
உங்க தரவுபடி பாத்தா காதலிக்க தடை போடலையே. (காதல்) திருமணத்துக்குதானே தடை.


- SUNDHAL - 07-25-2005

தலைப்பை மாற்றிவிட்டேன் ஈஸ்வர் நன்றிகள்


- tamilini - 07-25-2005

நல்ல ஐடியாவாச்சே காதலர்கள் பகுதியில் இருந்து எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கப்படவில்லையோ..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 07-25-2005

மாணில அரசுக்கு வந்த பல வேண்டுகோள்களை அடுத்தே அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது பாராட்டுக்கள் அரசுக்கு ஒருபக்கம் குவிந்தவண்னம் இருந்தாலும் மறுபக்கம் எதிர்ப்புக்களும் இருக்கின்றதாம் குறிப்பாக வழக்கறியர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி இருப்பதாக கூறப்படுகின்றது.


- Mathan - 07-25-2005

காதலித்து திருமணம் செய்பவர்கள் நிச்சயமாக பெற்றோர் சம்மதம் பெறவேண்டும். அவர்கள் பெற்று வளர்த்து ஒரு நிலைக்கு உருவாக்கிய அவர்களை புறக்கணித்து திருமணம் செய்யும் போது அவர்கள் சந்தோஷமாக மன நிறைவுடன் வாழமுடியாது. ஆனால் சம்மதம் பெறவேண்டும் என்பது காதலர்கள் தாமாக உணர வேண்டிய விடயம், திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருவரை சட்டப்படி திருமணம் செய்யவிடாமல் தடுப்பது அவர்களின் தனிமனித சுதந்திரத்தை உரிமையை மீறுவதாக அமைகின்றது,