Yarl Forum
போராளிக் கலைஞன் சிட்டு நினைவுதினம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: போராளிக் கலைஞன் சிட்டு நினைவுதினம் (/showthread.php?tid=3780)

Pages: 1 2


போராளிக் கலைஞன் சிட்டு நினைவுதினம் - vasisutha - 08-01-2005

<b>போராளிக் கலைஞன் சிட்டு </b>

<b>போர்க்குயிலின் மறைவு.</b>

தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. 'புலிகள் பாடல்கள்' என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். <b>'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்'</b> என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.

விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய <b>'கடலம்மா'</b> பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் 'உயிர்ப்பூ' திரைப்படத்தில் சிட்டு பாடிய
<b>'சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்'</b>
என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.

ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.

அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. <b>அவரின் எட்டாம் ஆண்டு நினைவுதினம் இன்று</b>.



மேலும் படிக்க...பாடல்களை கேட்க .
Arrow http://pooraayam.blogspot.com/2005/08/blog-post.html



நன்றி: pooraayam.blogspot.com


- selvanNL - 08-01-2005

நன்றி வசி... இந்த பாடல்களை வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்.. :!: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Niththila - 08-01-2005

நன்றி வசி அண்ணா

மாவீரர் சிட்டுவுக்கு வீர வணக்கங்கள்

மாவீரர்கள் அனைவர் பற்றிய தகவல்களை எங்க எடுக்கலாம்


- vasisutha - 08-01-2005

<b>மாவீரர் சிட்டுவுக்கு வீர வணக்கங்கள்</b>



இவரின் புகைப்படம் எங்கே எடுக்கலாம்?


- கீதா - 08-01-2005

நன்றி வாசிஅண்ணா

மாவீரர் எங்கள் சிட்டுஅண்ணாக்கு வீர வணக்கம்


-------------
jothika


- Niththila - 08-01-2005

தெரிஞ்சவை சொன்னா உதவியா இருக்கும்


- tamilini - 08-01-2005

http://www.tmzweb.com/eelam/Non_MP3/Tamile..._naatham.com.ra

சின்னச்சின்ன கண்ணில் பாடல்.

நன்றி வசி


- வினித் - 08-01-2005

¦¿¡¾÷ÄñÊø º¢ðΠŢ¨Ç¡ðÎ ¸Æ¸õ þÕìÌ Hooran ±ýÛõ þ¼ò¾¢ø


- AJeevan - 08-01-2005

நன்றி வசி
மாவீரர் சிட்டுவுக்கு வீர வணக்கங்கள்


- Rasikai - 08-01-2005

மாவீரர் சிட்டுவுக்கு வீர வணக்கங்கள்


- வினித் - 08-01-2005

Rasikai Wrote:மாவீரர் சிட்டுவுக்கு வீர வணக்கங்கள்

±ÉÐ 8õ ¬ñÎ ¿¢¨É׫îºÄ¢ Á¡Å£Ã÷
º¢ðÎ «Å÷¸ÙìÌ


- cannon - 08-01-2005

"மழை மேகம் பொழிகின்ற முகிலாகி .... வெற்றி பல தந்துவிட்டு நீர் உறங்குகின்றீர், ...." என்ற அந்த அற்புதமான பூநகரி நாயகர்களுக்காக ஒலித்த சிட்டுவின் குரல் கேட்டு, விளியோரம் நீர் கசியாதோர் இலர். இந்தச் சிட்டுக்குறலோனின், கேணல் கிட்டுவுடன் தோழர்கள் இந்திய சதிக்கு கடலில் சங்கமமாகியபோது "...தேச விடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள் நேச குழந்தைகளை நீச வழி மறித்த .... கடலம்மாஆ.... எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" கதறல் கேட்டு வாய்விட்டு அழாதோர் இருந்திலர். ...

.... ஓ சிட்டா! நீ ஜெயசிக்குறு சமர்க்களத்தில் வித்தானாலும், நீ என்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

வசி: மேஜர் சிட்டுவின் நினைவு தாங்கி ஒலி/ஒளிப்பேழை, எரிமலை, ஒலிவீச்சு வந்தன. மாவீர தெய்வங்களின் நினைவு சுமந்து வரும் தமிழ்மறவன்.கொம் இணையத்தளத்தில் 1997 ஆண்டு ஆவணி மாத பக்கத்தில் 55ஆவது மாவீர திருவுருவமாக மேஜர் சிட்டுவின் புகைப்படம் உள்ளது.
http://www.tamilmaravan.com/heros/1997/Tam...amil-1997-8.htm


- Thala - 08-01-2005

tamilini Wrote:http://www.tmzweb.com/eelam/Non_MP3/Tamile..._naatham.com.ra
சின்னச்சின்ன கண்ணில் பாடல்.

நன்றி வசி


மாவீரன் சிட்டுவுக்கு எனது வணக்கங்கள்..

நண்றிகள் பல!..... நான் இந்தப்பாடலோடு சேர்த்து உயிர்ப்பூ படத்தையும் தேடித்திரிகிறன்...

( உயிர்ப்பூ படத்தில் நடித்தவர் கரும்புலி கப்ரன் நகுலன். இவர் கருணாவின் பாதுகாப்பிற்காய் சென்று ஒரு டோராவைத்தகர்த்து காவியமானவர், அவருடன் காவியமானவர் கரும்புலி கப்ரன் கண்ணாளன்..)


- Danklas - 08-01-2005

தலை அது ஒரு கொசுறுச்செய்தியா?? எவ்வளவு பெரிய ஒரு செய்தியை பிறைக்கட்டுக்கை கொசுறுசெய்தி என்று போட்டுருக்கிறீங்க.. (சினிமா செய்திமாதிரி) :?:


- Niththila - 08-01-2005

நகுலன் அண்ணா (கிருஷ்ணன் அண்ணா) நடித்த உயிர்ப்பூ; படம் வீடியோவா என்னிடம் உள்ளது.


- Thala - 08-01-2005

Danklas Wrote:தலை அது ஒரு கொசுறுச்செய்தியா?? எவ்வளவு பெரிய ஒரு செய்தியை பிறைக்கட்டுக்கை கொசுறுசெய்தி என்று போட்டுருக்கிறீங்க.. (சினிமா செய்திமாதிரி) :?:

மன்னிச்சிடுங்கோ!... அனேகமானவர்களுக்கு தெரிந்திருக்கு என்பதானால் தான் அப்படி செய்திட்டன் பிழைதான்..


- அருவி - 08-01-2005

மாவீரர் மேஜர் சிட்டு அண்ணாவிற்கும் இத்தினத்தில் வீரமரணம் அடைந்த அனைவரிற்கும் வீரவணக்கங்கள்


- Sriramanan - 08-01-2005

சிட்டுவின் பாடல்களின் தொகுப்பு

சாவினைத் தோள் மீது தாங்கியயே காவிய சந்தன மேனிகளே...
http://www.eelatamil.com/eelamsongs/Karump...tariyamale.smil

எதிரியின் குருதியில் குளிப்போம் அம்மா எரிமலையாகியே விழிப்போம்...
http://www.eelatamil.com/eelamsongs/Karump.../ethiriyin.smil

அங்கயற்கண்ணியின் அனல் விழி திறந்தது அலைகடல் மீதிலோர்...
http://www.eelatamil.com/eelamsongs/KadatK...atkanniyin.smil

புூக்களின் மென்மையில் புூத்தது பெண்மையின் புூவுடல் என்றவரே...
http://www.eelatamil.com/eelamsongs/KadatK.../uruvethum.smil

குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே...
http://www.eelatamil.com/eelamsongs/KadatK...l/kurunthi.smil

நீலக்கடலேறி வந்து மேனி தொடும் காற்று வான் மீது நிலா...
http://www.eelatamil.com/eelamsongs/Kadali...lakadaleri.smil

ஓட்டிகளே படகோட்டிகளே எங்கள் உணர்வினிற்கே வழி...
http://www.eelatamil.com/eelamsongs/Kadali.../ooddikale.smil

எங்கே எங்கே வேங்கைகள் எங்கே இந்திய அரசே பதில் சொல்லு
http://www.eelatamil.com/eelamsongs/Azhiya...evengaikal.smil

நெஞ்சிலே இரத்தம் கொட்டும் நினைவே நெருப்பாகும்
http://www.eelatamil.com/eelamsongs/Azhiya...leraththam.smil

தளராத துணிவோடு களமாடினாய் இன்று தமிழீழ நினைவோடு
http://www.eelatamil.com/eelamsongs/Azhiya...athunivodu.smil


- அருவி - 08-01-2005

Thala Wrote:மாவீரன் சிட்டுவுக்கு எனது வணக்கங்கள்..

நண்றிகள் பல!..... நான் இந்தப்பாடலோடு சேர்த்து உயிர்ப்பூ படத்தையும் தேடித்திரிகிறன்...

(ஒரு கொசுறுச்செய்தி:- உயிர்ப்பூ படத்தில் நடித்தவர் கரும்புலி கப்ரன் நகுலன். இவர் கருணாவின் பாதுகாப்பிற்காய் சென்று ஒரு டோராவைத்தகர்த்து காவியமானவர், அவருடன் காவியமானவர் கரும்புலி கப்ரன் கண்ணாளன்..)


தல உயிர்ப்பூ படத்தினை நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எம் தாயக வெளியீடுகளைப் பணங்கொடுத்து வாங்கி எம் தாயகத்திற்கு ஒருசிறு நிதியினை வழங்கிய திருப்தியுடன் வெளியீடுகளை நுகரலாம்.- சிறு துளி பெருவெள்ளம்.


- Thala - 08-01-2005

Aruvi Wrote:[quote=Thala]
மாவீரன் சிட்டுவுக்கு எனது வணக்கங்கள்..

நண்றிகள் பல!..... நான் இந்தப்பாடலோடு சேர்த்து உயிர்ப்பூ படத்தையும் தேடித்திரிகிறன்...

(ஒரு கொசுறுச்செய்தி:- உயிர்ப்பூ படத்தில் நடித்தவர் கரும்புலி கப்ரன் நகுலன். இவர் கருணாவின் பாதுகாப்பிற்காய் சென்று ஒரு டோராவைத்தகர்த்து காவியமானவர், அவருடன் காவியமானவர் கரும்புலி கப்ரன் கண்ணாளன்..)


தல உயிர்ப்பூ படத்தினை நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எம் தாயக வெளியீடுகளைப் பணங்கொடுத்து வாங்கி எம் தாயகத்திற்கு ஒருசிறு நிதியினை வழங்கிய திருப்தியுடன் வெளியீடுகளை நுகரலாம்.- சிறு துளி பெருவெள்ளம்.

நான் லண்டனில விசாரிச்சிட்டன் அவர்கள் France அலுவலகத்தில் கேக்கச்சொன்னவ, கேட்டால் net ரில http://www.eelamstore.com/ இல DVD யாக விரைவில வரும் எண்டு பதில் சொன்னார்கள்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->