![]() |
|
திருப்தி அடையாத பள்ளி நிர்வாகி !!!!!!!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: திருப்தி அடையாத பள்ளி நிர்வாகி !!!!!!!!! (/showthread.php?tid=3707) |
திருப்தி அடையாத பள்ளி நிர்வாகி !!!!!!!!! - Vaanampaadi - 08-09-2005 3 ஆசிரியைகளை திருமணம் செய்தும் 4வது டீச்சரை வளைக்க முயன்ற பள்ளி நிர்வாகி! ஆகஸ்ட் 09, 2005 திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தனது பள்ளியில் வேலை பார்த்து வந்த 3 ஆசிரியைகளை திருமணம் செய்த பின்னர், 4வதாக மேலும் ஒரு ஆசிரியையை திருமணம் செய்ய ¬முயன்ற பள்ளி நிர்வாகியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வருகிறார். பள்ளி நிர்வாகத்தைக் கவனிப்பதை விட பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியைகளை தனது காதல் வலையில் வீழ்த்துவதிலேயே அதிகம் நேரம் செலவிட்டுள்ளார் சிவசங்கரன். அவரது காதல் வலையில் சிக்கிய 3 ஆசிரியைகளை யாருக்கும் தெரியாமல் அடுத்தடுத்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார் சிவசங்கரன். அத்தோடு நிற்காமல், இன்னொரு ஆசிரியைக்கும் அவர் ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார். இந்தத் திருமணம் குறித்துத் தெரிய வந்த 3வது மனைவி திருவேணி மற்றும் ¬முதல் மனைவி ஆகிய இருவரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நாடி புகார் கொடுத்தனர். இதையடுத்து சிவசங்கரனை போலீஸார் அழைத்து விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது. அவருக்கு உடந்தையாக அவரது தாயாரும் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவசங்கரன் மற்றும் அவரது தாயார் குமாரி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். Thatstamil |