Yarl Forum
செங்கல் அளவு பனிக்கட்டி சம்பூரில் பொழிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: செங்கல் அளவு பனிக்கட்டி சம்பூரில் பொழிவு (/showthread.php?tid=3680)



செங்கல் அளவு பனிக்கட்டி சம்பூரில் பொழிவு - Sriramanan - 08-12-2005

திருமலை மாவட்டம் சாம்புூரின் கரையேரப் பகுதிகளில் இன்று பிற்பகல் கடுமையான காற்று வீசியதுடன், பனிக்கட்டி மழையும் பொழிந்துள்ளது. செங்கல் அளவிலான பனிக்கட்டிகள் இதன்போது தொடர்ச்சியாக வீழ்ந்ததாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

கடுiமாயன காற்று வடக்கு நோக்கி 10 நிமிடங்களும், தெற்கு நோக்கி ஐந்து நிமடங்களும் வீசியுள்ளது.

இதன்போது வீடுகள் பலவற்றின் கூரைகள் பறந்து சென்றுள்ளதுடன், பல மரங்கள் தெலைபேசிக் கம்பங்கள் என முறிந்து வீழ்ந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் காரியாலயத்திற்கும் கஜமுகன் வித்தியாலயத்திற்கும் அருகிலிருந்த பாரிய ஆலை மரம் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தின் போது வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மின்னல் தாக்கியதாகவும் அதனால் அவரின் உடல் கருகியுள்ளதாகவும் அவர் சாம்புூரிலிருந்து 2 கிலே மீற்றர் தூரத்திலுள்ள கூனித் தீவு கஜமுகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மக்கள் பயப் பீதியுடன் காணப்படுததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சங்கதி


Re: செங்கல் அளவு பனிக்கட்டி சம்பூரில் பொழிவு - vasisutha - 08-14-2005

<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin--><b>செங்கல் அளவிலான பனிக்கட்டிகள்</b> இதன்போது தொடர்ச்சியாக வீழ்ந்ததாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

சங்கதி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Confusedhock: Confusedhock:


- தூயா - 08-14-2005

ஆ இலங்கையிலா?