Yarl Forum
கடவுளுக்கேன் கருணை இல்லை?... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கடவுளுக்கேன் கருணை இல்லை?... (/showthread.php?tid=3642)



கடவுளுக்கேன் கருணை இல்லை?... - hari - 08-17-2005

கடவுளுக்கேன் கருணை இல்லை?...
தொ. சூசைமிக்கேல்


ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!
ஏனதுநீ சொல்வதென்(று) எல்லாரும் கேட்பர்:
என்னையன்றி அஃதறிவார் எவரும் இல்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

மாடாக உழைத்துவிட்டோம்; இளமை தன்னை
மாய்த்துவிட்டோம்; என்றாலும் மகிழ்ச்சி இல்லை.
காடாகக் கிடப்பவற்றைக் கழனி யாக்கும்
கனவுகட்குக் கனவில்கூட நனவு இல்லை!



கைநிறையச் சம்பளம்தான்; இருந்தும் என்ன?
கடன்சுமையின் கணக்கினிலே மாற்றம் இல்லை:
மெய்நிறைய நோய்மொய்த்துக் கொண்ட தாலே
மிஞ்சுவது சஞ்சலமே; இதுபொய் இல்லை!

"எத்தனைநாள் இப்படியே வாழ்ந்தி ருப்போம்?"
என்பதொரு கேள்விக்கு விடையே இல்லை:
"அத்தனையும் போதுமடா! போவோம்!" என்றால்
அச்சுறுத்தும் செலவுகட்கோர் அளவே இல்லை!

வங்கிதனில் பணம்செலுத்தி முடித்த பின்னர்
வாய்க்கினிதாய்ச் சாப்பிடவோ காசும் இல்லை;
எங்கிருந்தோ கடன்வாங்கி அவ்வப் போது
இரைபோட்டுக் கொள்வதனால் வலுவும் இல்லை!

பெற்றமகன் பணிதேடிப் பிறிதோர் ஊரில்
பெருஞ்சிரமம் மேற்கொண்டும் விடிவே இல்லை;
உற்றமனை ஒற்றையளாய்த் தனித்த வீட்டில்
உழலுகின்றாள்; வாழ்க்கையிலே பயனே இல்லை!

"கொண்டவளைப் பிரிந்ததெல்லாம் குழந்தைக்(கு)!" என்னும்
கூற்றுக்குப் பிரிவுதினம் வரவே இல்லை:
என்றெனது இல்லாள், தன் கையால் அன்னம்
இட்டென்னை உண்ணவைப்பாள்? விளங்க வில்லை!

ஒவ்வொருநாள் இரவினிலும் உறங்கு தற்(கு)என்
உற்றார்தம்; ஞாபகங்கள் விடுவ தில்லை;
எவ்வளவு தான்புரண்டு படுத்த போதும்
இருவிழிகள் குளமாதல் நிற்ப தில்லை!

இவையனைத்தும் எனக்குமட்டும் நேர்வ தல்ல;
ஏனையர்க்கும் நேர்வதுதான்; ஐயம் இல்லை!
கவலையின்றி சவூதிமண்ணில் ஒருவ னேனும்
கண்துயில்வான் என்றெனக்குத் தோன்ற வில்லை.

தூக்கமிலா இரவுகளின் தொடர்ச்சி யாலே
துக்கமதைத் தாங்குதற்குச் சக்தி இல்லை;
யார்க்குமிலா வேதனையின் விபரம் சொல்லி
யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை!

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

நன்றி: கீற்று ( keetru.com )


- Rasikai - 08-17-2005

ஓ ரொம்ப சோகமான கவிதை மிகவும் உணர்ந்து தத்வரூபமாக எழுதியுள்ளார்


- Jenany - 08-17-2005

ம்ம்.. கவிதை ரசிகை சொன்ன மதிரி ரொம்ப சோகமான கவிதையா இருக்கு... உண்மையை எழுதி இருக்கினம்....


- kuruvikal - 08-17-2005

நிகழ்கால மனிதன் சடமான பின் கடவுள் மட்டும் கருணை காட்டுவானா என்ன...! கடவுள் சாதாரண புலக் கண்ணுக்கே தெரியவில்லையாம்...கருத்துக்குள் தெரிவாரோ....! :wink: Idea


- Niththila - 08-17-2005

நன்றி ஹரி அண்ணா கவிதையை வாசிக்கும் போது மனசுக்கு கஸ்டமாக இருக்கு யதார்த்தம் எப்பவும் சுடும் தானே


- Nitharsan - 08-17-2005

யாதார்த்தத்தை கவிதையாய் தந்த சுூசைமிக்கேல் அவர்களுக்கும்... அதை இங்கே வழங்க்கிய ஹரிக்கும் நன்றிகள்


- கீதா - 08-17-2005

நல்ல சோகமான கவிதை நன்றி அண்ணா

.......................
jothika


- tamilini - 08-17-2005

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை!

சும்மாடு கனநாளுக்கு பிறகு கேட்ட வார்த்தை.

இதை கடவுளுக்கு சொல்லி என்ன வரப்போது. பலரது நிலையை உணர்த்தும் கவிதை நன்றி அண்ணா.


- அனிதா - 08-17-2005

சோகமான கவிவரிகள் ... நல்லா எழுதியிருக்கிறார் ..


கேர்பல் கால் சதீக் கதீர் முஸ்கில் - inthirajith - 08-17-2005

அரபிக்காரனுக்கு ஒட்டகம்
போல் தான் வெளி நாட்டு மனிதன் காசுக்காக தன்னை சுமக்க வைக்கிறான் கடனுக்காக உறவுக்காக ஒட்டகமாக அலைகின்ற வாள்க்கை கொடுமைதான் நண்பா
எத்தனை தூக்கம் இல்லா இரவுகள் படுக்கையை நனைக்கும் தனிமை புரிந்தவன் தான் அனுபவிக்கமுடியும்

ஆறுதலாக
இந்திரஜித்


- MUGATHTHAR - 08-17-2005

Quote:ஆனதுபார் சவூதிவந்து இருப தாண்டு:
அடுக்கடுக்காய்த் துன்பமின்றி இன்ப மில்லை!

சுமைதாங்கி ஓய்வின்றிச் சுமையே தாங்கும்;
சொல்வார்கள்; இதுவரைநான் கண்ட தில்லை.
எமைத்தாங்கும் சுமைதாங்கி சவூதி நாட்டில்
எம்தலையின் சும்மாட்டுக்(கு) ஓய்வே இல்லை

தம்பி ஹரி முகத்தானுக்கெண்டு எழுதினமாதிரி இருக்குது என்ன முகத்தான் இஞ்சை(சவுதி) வந்து 8வருடங்கள்தான் ஆகுதப்பு


- inthirajith - 08-18-2005

முகத்தரர் சவூதில என்கே இருக்கிரின்க ரியாத் இல்லை ஜித்தா டமாம்
இப்போ நல்ல வெய்யில் தானே[/b]


- ப்ரியசகி - 08-18-2005

உண்மை கலந்த சோகக் கவிதை...

ஆனாலும்..இந்த கவிதையின் தலைப்புக்கு <b>என்றைக்கும் </b>விடை கிடைத்ததும் இல்லை கிடைக்கப்போவதும் இல்லை..<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-19-2005

கடவுளிடம் முறையிட்டு அலுத்துப் போனேன்:
கண்ணீர்விட்(டு) அழுதழுது களைத்துப் போனேன்;
கடவுளைநான் இல்லையென்று சொல்ல வில்லை;
கடவுளுக்கேன் என்னிடத்தில் கருணை இல்லை?...


Cry Cry Cry


- ¦ÀâÂôÒ - 08-19-2005

[size=16]
¸¼×û.....

«Å÷ ¸Õ¨½ì¸¼¦ÄýÚ Óý§É¡÷ ¦º¡ýÉ¡÷,
«ó¾ì ¸¼Öõ ¦À¡í¸¢ÂÐ þýÉ¡û ¸ñË÷..

šâ즸¡Îò¾§¾ šâ즸¡ñ¼§¾?

«¾üÌ..

«ØÐ ÒÄõÒž¡ø ¬ÅÐ ±ýÉ ÀÂý?

Å¢Øó¾¡ø §ÅñÎõ Á£ñÎõ ±ØõÀò ¾¢¼õ.

¿¡ý «Æ¢ó¾¡Öõ §ÅñÎõ þó¾ âÁ¢Â¢ø ´Õ þ¼õ.

Ò¨¾ì¸ÅøÄ... ±Ã¢ì¸ÅøÄ...
¿¡ý «¸¾¢ÂøÄ ±ýÚ ¦º¡øÄ¢ì¦¸¡ûÇ...


- shanmuhi - 08-19-2005

யாதார்த்தத்தை கவிதையாய் தந்த சுூசைமிக்கேல் அவர்களுக்கும்... அதை இங்கே வழங்க்கிய ஹரிக்கும் நன்றிகள்...