Yarl Forum
சிக்கன் கட்லெட் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சிக்கன் கட்லெட் (/showthread.php?tid=3636)



சிக்கன் கட்லெட் - Jenany - 08-17-2005

சிக்கன் அரை கிலோ(கொத்தியது)
உருளைக்கிழங்கு அரை கிலோ
பச்சை பட்டாணி 100 கிராம்(உரித்தது)
பச்சை மிளகாய் 25 கிராம்
வெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு அங்குலம்
பட்டை ஒரு அங்குலம்.
சோம்பு அரை தேக்கரண்டி
முட்டை 4
ரொட்டித் தூள் ஒரு கப்
கொத்தமல்லித் தழை சிறிய கட்டு
எண்ணெய் பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

சிக்கனை எலும்பு நீக்கி நன்கு கொத்திக் கொள்ளவும். சிக்கன், உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவற்றை தனித்தனியாக உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பட்டை, சோம்பு இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை மசித்துக் கொண்டு மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைக்கவும்.
முட்டையை நன்கு அடுத்துக் கொண்டு தட்டி வைத்த கட்லெட்டை முட்டையில் தோய்த்தெடுத்து ரொட்டி தூளில் புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

நன்றி:Tamilnaatham


- SUNDHAL - 08-17-2005

இதெல்லாம் சொல்றதோட சரியாக்கும்
செஞசும் பழகிக்கோங்க ஜனனி அக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-17-2005

ஜனனி நீங்கள் செய்து சாப்பிட்டாச்சா? ம்ம் எனக்கு இப்ப கொலிடேய் தானே செய்து பார்த்துட்டு சொல்லுறன்


- SOMAN - 08-17-2005

NO CURRY LEAF

MANCHAL

MILAGU


- Jenany - 08-18-2005

அquote="SUNDHAL"]இதெல்லாம் சொல்றதோட சரியாக்கும்
செஞசும் பழகிக்கோங்க ஜனனி அக்கா...

அதுதான் செய்து பழகிறம் எல்ல.. ம்ம்...செய்துட்டு தம்பியை taste பண்ணுறதுக்கு கூப்பிடுறன்.. okeva?
அப்புறம் தம்பி நீங்களும் செய்து பழகுங்க ...வரும் காலத்தில் உதவியா இருக்கும்.....


- Jenany - 08-18-2005

quote="Rasikai"]ஜனனி நீங்கள் செய்து சாப்பிட்டாச்சா? ம்ம் எனக்கு இப்ப கொலிடேய் தானே செய்து பார்த்துட்டு சொல்லுறன்[/quote]


இன்னும் செய்யலை ரசிகை... நானும் செய்திட்டு சொல்லுறன்...


- Jenany - 08-18-2005

quote="SOMAN"]NO CURRY LEAF

MANCHAL

MILAGU[/quote]


என்ன அண்ணா சொல்லுறீங்க??? எனக்கு புரியலை....


- MUGATHTHAR - 08-18-2005

Quote:என்ன அண்ணா சொல்லுறீங்க??? எனக்கு புரியலை....

1. கறிவேப்பிலை
2. மஞ்சள்
3. மிளகு
ஜயோ பிள்ளை இந்த 3 சாமான்களும் நீங்க குடுத்த மனுவிலை இல்லையாம் அதாலை செய்யமுடியாதிருக்கிறது எண்டு சொல்லுறார்.....சரியா எப்பிடி பிழையைப் பிடிச்சமே...


- Jenany - 08-20-2005

ஓஓ...அப்படியா??? சரி.. நீங்கள் இதையும் போட்டு செய்து பாருங்களேன்.....


- கீதா - 08-27-2005

[quote="Rasikai"]ஜனனி நீங்கள் செய்து சாப்பிட்டாச்சா? ம்ம் எனக்கு இப்ப கொலிடேய் தானே செய்து பார்த்துட்டு சொல்லுறன்[/quote









நானும் செய்து பாத்துரு எப்படி இருந்ததென்று சொல்லுகின்றேன்