![]() |
|
கவனம் !! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவனம் !! (/showthread.php?tid=351) |
கவனம் !! - வர்ணன் - 04-03-2006 <b>[color=blue] நாலெழுத்து படித்து விட்டால் நானே ஊருக்கு நாட்டாமை என்பான் கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால் நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான் அவன் பாட்டன் - கோவணத்துடன் திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான் மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்! ஏனடா நீ இப்பிடி? வெள்ளையும் சுள்ளையுமாகி நீ இங்கு திரிந்தாலும் வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும் கிளிந்த சேலையுடன் இருந்த போதும் உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !! </b> - வர்ணன் - 04-03-2006 இது என்னினத்தை பழித்து - பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு! - Aravinthan - 04-03-2006 நல்ல கவிதை. வாழ்த்துக்கள் - Puyal - 04-03-2006 உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா மிகவும் அருமையான வரிகள் பாராட்டுக்கள் முயற்சியைத் தொடரவும். - RaMa - 04-04-2006 உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !! மீண்டும் அழகான வரிகளுடன் வந்து இருக்கிறீர்கள் வர்ணன். நன்றிகள். தொடர்ந்து தாருங்கள். - sagevan - 04-04-2006 புயல் சொன்ன மாதிரி அருமையான வரிகள்.பாராட்டுக்கள்.வர்ணன். - Selvamuthu - 04-04-2006 கவிதைக்கு வாழ்த்துக்கள்! இது யதார்த்தம். ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்கவும். - gowrybalan - 04-04-2006 கவிதை நன்றாக உள்ளது.... பாராட்டுக்கள் <img src='http://img113.imageshack.us/img113/133/200519144629049jg.gif' border='0' alt='user posted image'> - Jenany - 04-05-2006 நல்ல கவிதை வர்ணன். - rock boy - 04-05-2006 உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !! விளங்வில்லை நண்பா......... முடிந்தால் விளக்கம் தாருங்கள்........ - Puyal - 04-05-2006 தமிழ் ஈழத்தில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்த வேளை ஜீவாதாரத்திற்கே மிகவும் குடும்பத் தலைவன் அல்லலுற்ற வேளை தன்னில் தன் தாலியை அடைவு வைத்து எடுத்த பணத்தில் தான் இவனைத் தாய் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த வேளை, இவனோ தாயினும் மேலான தாயகத்தைப் பழிக்கின்றான் என்ற கருத்தில் கவிஞர் எழுதியிருப்பார் என அடியேன் நினைக்கின்றேன். - Niththila - 04-05-2006 கவிதை நல்லாயிருக்கு வர்ணன் அண்ணா - அருவி - 04-06-2006 மீண்டும் ஓர் கருத்துள்ள கவிதையைத் தந்த வர்ணனிற்கு நன்றி. கவிதை நன்றாக இருக்கிறது தொடர்ந்து தாருங்கள் வர்ணன். - rock boy - 04-06-2006 Puyal Wrote:தமிழ் ஈழத்தில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்த வேளை ஜீவாதாரத்திற்கே மிகவும் குடும்பத் தலைவன் அல்லலுற்ற வேளை தன்னில் தன் தாலியை அடைவு வைத்து எடுத்த பணத்தில் தான் இவனைத் தாய் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த வேளை, இவனோ தாயினும் மேலான தாயகத்தைப் பழிக்கின்றான் என்ற கருத்தில் கவிஞர் எழுதியிருப்பார் என அடியேன் நினைக்கின்றேன். நண்றி உங்கள் விளக்கத்திற்கு - வர்ணன் - 04-07-2006 நன்றி அரவிந்தன் - புயல் - ரமா -சஜீவன் - ஆசிரியர் -(மன்னிக்கவும் ஆங்கில கலப்பில் எனக்கும் உடன்பாடில்லைத்தான் - நான் குறிப்பிட்ட சொற்களுக்கு சரியான தமிழ் தெரியவில்லை) நன்றி கெளரிபாலன்! - வர்ணன் - 04-07-2006 நன்றி ஜெனனி - றொக் ஃபோய் -( புயல் சொன்ன விளக்கமே எனது கருத்தாயிருந்தது - ஆனாலும் புயல் ஃகப்பில கவிஞர் எண்டுட்டிங்க - தாங்கல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) மீண்டும் நன்றி -புயல்!நன்றி நித்திலா - அருவி! இது பொதுவா எல்லாரயும் சொல்லி எழுதல்ல- இந்த களத்தில ஒரு தலைப்பில - நடந்த விவாதத்தில் -ஒரு சிலர் பண்ணின குசும்பு தாங்க முடியாம எழுதினேன்!! 8) |