Yarl Forum
கமலை நிராகரித்த அஸின்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கமலை நிராகரித்த அஸின்! (/showthread.php?tid=3438)



கமலை நிராகரித்த அஸின்! - வினித் - 09-04-2005

கமலை நிராகரித்த அஸின்!



மலபார் மல்கோவா அஸின் ஒரு சலசலப்பில் சிக்கியுள்ளார். அதாவது கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி படு வேகமாக பரவி வருகிறது.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அஸின். ஆரம்பத்திலிருந்தே சின்னப் பசங்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார் அஸின்.

ஜெயம் ரவியைத் தொடர்ந்து, விஜய், சூர்யா, அஜீத் என ஜோடி போட்டு தூள் கிளப்பி வருகிறார். இவர்களை விட கொஞ்சமே கூடுதல் வயதான விக்ரமுடனும் இப்போது மஜா படத்தில் குஜாலாக நடித்து வருகிறார்.



இந்த நிலையில்தான் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு அஸினைத் தேடி வந்துள்ளது. முதலில் சந்தோஷப்பட்ட அஸின் பின்னர் யோசித்துப் பார்த்து (எதை?) அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.
இப்பத்தான் ஏதோ நிறையப் படங்களில் நடித்து டப்பு பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் சீனியர் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கப் போய், சரத்குமார், சத்யராஜ், அர்ஜூன், நெப்போலியன் பெரிசுகள் கூட்டமாக வந்து மொய்க்கத் தொடங்கினால் என்னாவது என்று பயந்து போய்த்தான் கமல்ஹாசனுடன் நடிக்க மறுத்து விட்டாராம் அஸின்.

ஆனால் அஸினைப் பார்த்து இதைக் கேட்டால் தலையை பலமாக ஆட்டி மறுக்கிறார். அய்யோ, எண்டே குருவாயூரப்பா, நான் போய் கமல் சாரை நிராகரிப்பதாவது.? அவர் என்னோட கனவு நாயகன். எனது கனவில் அடிக்கடி வரும் நாயகன் அவர் மட்டும்தான்.



அவர் நடிக்கும் காலத்தில் நானெல்லாம் நடிகையாக உலா வருவதே மிகப் பெரிய பாக்கியம். அப்படி இருக்கையில் நான் போய் கமல்ஹாசனை நிராகரிப்பதாவது. அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மறுக்க மாட்டேன்.

கமலுடன் நடிப்பது எவ்வளவு பெரிய சமாச்சாராம். அதை போய் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? உண்மையில் யாருமே என்னிடம் கமலுடன் நடிப்பது தொடர்பாக அணுகவே இல்லை. அப்படி இருக்கையில் இதுபோன்ற செய்திகளை யார் பரப்புவது என்று தெரியவில்லை என்று புலம்பித் தள்ளி விட்டார்.

அப்ப சரி!


- ப்ரியசகி - 09-07-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-07-2005

நல்ல கதை. படமாய் ஆக்கி கமலையும் அஸினையும் நடிக்கச் சொல்லாலம்


- vasisutha - 09-07-2005

வினித் Wrote:ஆனால் அஸினைப் பார்த்து இதைக் கேட்டால் தலையை பலமாக ஆட்டி மறுக்கிறார்.


அஸினை பேட்டி எடுத்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் வினித்


- கீதா - 09-12-2005

quote="Mathana"]நல்ல கதை. படமாய் ஆக்கி கமலையும் அஸினையும் நடிக்கச் சொல்லாலம்[/quote]







அப்ப சரி நான் போய் சொல்லுறன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->