Yarl Forum
அவார்டுக்கு குறி வைக்கும் சிநேகா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: அவார்டுக்கு குறி வைக்கும் சிநேகா (/showthread.php?tid=3425)



அவார்டுக்கு குறி வைக்கும் சிநேகா - வினித் - 09-05-2005

அவார்டுக்கு குறி வைக்கும் சிநேகா


எப்படி நடிப்பது என்பதில் இடையில் தடுமாறிய சிநேகா இப்போது ஒரு தெளிவுக்கு வந்துள்ளார். வர்ற வாய்ப்புகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு நடிக்காமல், செலக்டிவ்வாக நடித்து தேசிய விருது ஒன்றை எப்படியாவது வாங்கி விட அவர் முடிவெடுத்து விட்டார்.

ஆரம்பத்திலிருந்தே குடும்பக் குத்துவிளக்கு கணக்காக நடித்து வந்தார் சினேகா. அவரது அசத்தும் புன்னகை, 'நம்ம பொண்ணு' என்று நினைக்க வைக்கும் முகவெட்டு, அழகு ஆகிய அத்தனையும் சேர்ந்து அடக்கம் ஒடுக்கமான வேடங்கள் கிடைத்து வந்தன.



சிநேகாவுக்கு பெரிய பெயரை வாங்கித் தந்த படம் பார்திதபன் கனவு, ஆட்டோகிராப். இந்த இரண்டு படங்களுமே சிநேகாவின் முதிர்ந்த நடிப்பை வெளிக்காட்டின. தொடர்ந்து பல படங்கள் வந்து குவியத் தொடங்கின. இந்த நிலையில்தான் மும்பை நடிகைகளின் ஆதிக்கமும், மலையாள நடிகைகளின் கவர்ச்சிக் களியாட்டமும் கோலிவுட்டைக் கலக்கத் தொடங்கின.

இதனால் பல நடிகைகள் கிளாமருக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காலத்தின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், சிநேகாவும் கிளாமருக்குத் தாவினார். சின்னாவில் அவர் காட்டிய கிளாமர் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கிளாமருக்கு மாறினால் வாய்ப்புகள் அட்டகாசமாக வந்து குவியும் என்று எதிர்பார்த்த சிநேகாவுக்கு ஆட்சேபனைகள் மழை மாதிரி வந்து கொட்டியதால் சோர்ந்து போனார். அப்படி நடித்தாலும் பிரச்சினை, இப்படி நடித்தாலும் எதிர்ப்பு என்று அலுத்துப் போன சிநேகாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இப்போது இரண்டு படங்கள் கிடைத்துள்ளன.

ஒன்று செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை. இன்னொன்று ஏபிசிடி. இரண்டு படங்களிலும் வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார் சிநேகா. புதுப்பேட்டையில், அவருக்கு விலைமாது வேடமாம். இப்படத்தின் நாயகி சோனியா அகர்வால்தான் என்றாலும் நடிப்புக்கு சிநேகாவுக்கே அதிக வாய்ப்பாம். அம்மணியும் அடிச்சுத் தூள் கிளப்பி வருகிறார்.

அதேபோல ஏபிசிடி படத்தில் விதவையாக வருகிறார் சிநேகா. இந்த இரண்டு படமுமமே எனக்கு நிச்சயம் விருது வாங்கித் தரும் என்று அடிச்சுக் கூறுகிறார் சிநேக். அவரது ரசிகர்களும் அதற்கு ஆசி வழங்கி கடித மழை பொழிகிறார்களாம். அத்தோடு ஒரு அறிவுரையையும் சேர்த்து அனுப்புகிறார்கள்.

எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள், சின்ன வேடமாக இருந்தாலும் பரவாயில்லை, உங்களது நடிப்பு திறமை மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க வேண்டாம். விருது பெறக் கூடிய முழுத் தகுதியும் உங்களுக்கு உள்ளது.



அவள் ஒரு தொடர்கதை சுஜாதா, அச்சமில்லை அச்சமில்லை சரிதா, புதுமைப் பெண் ரேவதி போல நீங்களும் ஒரு சிறந்த நடிகைதான். எனவே உங்களுக்குள் புதைந்து கிடக்கும் முழுத் திறமையையும் வெளிக் கொணர்ந்து விருது பெற முயற்சியுங்கள் என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறார்களாம் ரசிகர்கள்.

அவர்களின் இந்த அன்பின் வெளிப்பாட்டைக் கண்டு நெகிழ்ந்து போய் விட்டாராம் சிநேகா. எனவே இனிமேல் கொட்டிக் கொடுத்தாலும் நோ கிளாமர் என்ற முடிவுக்கு வந்துள்ளார் சிநேகா. புதுப்பேட்டை, ஏபிசிடியைத் தொடர்ந்து விருது பெறத் தகுதியான கதையைத் தேடிப் பிடித்து நடிக்கப் போகிறாராம்.

நல்ல விஷயம், வாழ்த்துவோம்!


- Vishnu - 09-05-2005

சினேகா ஈ மெயில் முகவரி -

<b>sineha@romba_ninaippuththaan.com</b>

:wink:


- Jenany - 09-07-2005

ஓஒ...நன்றி அண்ணா.. mail நீங்க போட்டு பார்த்தீங்களா? பதில் போட்டங்களா?


- Vishnu - 09-07-2005

Jenany Wrote:ஓஒ...நன்றி அண்ணா.. mail நீங்க போட்டு பார்த்தீங்களா? பதில் போட்டங்களா?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-07-2005

அவாவின் பி.எ அனுப்பியிருப்பா


- கீதா - 09-07-2005

நன்றி தகவலுக்கு ? எனக்கு சினேகா என்றால் விருப்பம்


- vasisutha - 09-07-2005

அப்படியா ஜோ?


- கீதா - 09-10-2005

vasisutha Wrote:அப்படியா ஜோ?









ம்ம் அப்படித்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 09-11-2005

:evil: :evil: :evil:
ஓய் வினித்து ளொள்ளா நம்ம ஆளைப்பத்தி அடிக்கடி ரோக் போடுறீர் பீ கேர் புல்ல்ல்ல் ஓகே
மைன்ட் இற்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: