Yarl Forum
பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம் (/showthread.php?tid=3403)



பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம் - narathar - 09-06-2005

பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்

இரா. திருநாவுக்கரசு

எந்த ஒரு வரலாற்று ஆளுமை மீதான விமர்சனத்திலும் அன்றாட அரசியல் ரீதியான பார்வையில், நேர் அல்லது எதிர்மறையான பண்புகளே பொதுவாக முன்னிறுத்தப்படும். ஆனால் ஒரு வரலாற்று ஆளுமையை அவர் காலச் சமூக, அரசியல், கலாச்சாரச் சூழலோடு பொருத்திப் பார்த்து (நீஷீஸீற்மீஜ்ற்ன்ணீறீவீக்ஷ்மீ) அணுகும்போது நமது விமர்சனங்கள் நல்லது / கெட்டது என்பவற்றுக்குள் அடங்க மறுக்கும்.

பெரியாரை அவர் வாழ்ந்த சமூக, அரசியல், கலாச்சாரச் சூழýல் பொருத்திப் பார்த்தால் மட்டுமே இன்றைய 'அன்றாட அரசியல்' தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் அவரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ மதிப்பிடுவதை விடுத்து விரிவான, ஆழமான புரிதலை அடைய முடியும்.

பெரியாரை ஒரு சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் மதிப்பீடு ஒரு புறம். அவரை ஏறக்குறைய ஒரு தýத் விரோதி என்று சித்தரிக்கும் அளவிற்குப் போகும் கருத்தாக்கம் மற்றொரு புறம். பெரியார் தனது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்த ஒரு போý - அவரைப் பெண் விடுதலைக்கு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆதர்சமாக முன்னிறுத்துவது ஆபத்தானது என்று வழக்கம்போலப் பெரியாரின் அன்றாட அரசியலை மட்டுமே பிரதானப்படுத்தும் தார்மீகக் கண்ணீர். இவை போன்ற வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழýன் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.

காலனிய ஆட்சி மூலமாக முதýல் இந்தியாவின் அரசியல்-பொருளாதாரத் தளங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் பின்னர் நிறுவனமயமாக்கத்தால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அதுவரை நிலவிவந்த மதிப்பீடுகள் பெரும் அதிர்வைச் சந்தித்தன. இதன் பின்புலம் நவீனத்துவமே என்ற சுயபிரக்ஞையுடன் அதை ஒரு சித்தாந்தமாகவே சுவீகரித்துக்கொண்டு பல அறிஞர்கள், தலைவர்கள் சமூக, கலாச்சாரத் தளங்களில் தீவிரமாக இயங்கினர். அதுவரை நிலவிவந்த சாதிக் கொடுமைகள், சாதி அமைப்பிற்கும் இந்து மதத்திற்குமான உறவு பற்றிய புரிதல் ஆகியன நவீனத்துவச் சிந்தனைகள் மூலமே சாத்தியப்பட்டன. சமூகச் சீர்திருத்தம் எனும் பெயரால் நடந்தவை அனைத்துமே சாதி-இந்து மதம் சார்ந்தே அமைந்திருந்தன. சாதி அழிப்பாளர்களுக்கு நவீனத்துவம் தத்துவ நிலைப்பாடு என்பதிýருந்து, சித்தாந்த நிலைப்பாடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சூழýல் நவீனத்துவச் சிந்தனைகள் சமூகச் சீர்திருத்தத்திற்கான இயக்கச் சக்தியாகச் செயல்பட்டதோடு, அதன் அடுத்த, மேம்பட்ட எல்லையான தேசியச் சிந்தனையை எட்டவும் உதவியது. இது போன்று நிகழவேண்டுமானால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அத்தியாவசியமான சில மாற்றங்கள் கட்டாயம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது, தேசியம், தேசம் பற்றிய பிரக்ஞைக்குத் தேவையான அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்ச் சூழýல் ஏற்பட்டிருக்க வேண்டும். சாதி அழிப்பு, பெண் விடுதலை, தனிநபர் உரிமை, மதச் சார்பின்மையாக்கம், குடிமை உரிமை, பின்னர் தேசியப் பிரக்ஞை ஆகிய அனைத்துமே நவீனத்துவத்தைத் தோற்றுவாயாகக் கொண்டவை. தமிழ்ச் சூழýல் நவீனத்துவத்தால் சாதி அழிப்பு இயக்கம் பெற்ற உத்வேகம் அசாதாரணமானது. இதன் தொடக்கப் புள்ளி அயோத்திதாசர் என்று ஐயமின்றிக் கூறலாம். அதே சமயம், இவரது சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக உருவான சனாதனிகளின் இயக்கத்தை ஆதிக்கம் பெறாமல் செய்தது மட்டுமன்றி ஒரு கட்டத்தில் சிதைந்துபோகும் அளவிற்குக் கொண்டுவந்தது, அயோத்திதாசருக்குப் பிறகு நவீனத்துவக் கருத்துகளைத் தீவிரத்துடன் பரப்பிய பெரியாரின் சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு நவீனத்துவத்தின் மூலமே நிரந்தரத் தீர்வு என்பதில் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் இருந்த நம்பிக்கை குறைகாண முடியாதது.

எனினும் நவீனத்துவம் பற்றிய பெரியாரின் புரிதல் பொதுப் புத்தியும் தன்னுணர்வும் சார்ந்தது. ஆனால் மானுட விடுதலைக்கு நவீனத்துவத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை மாசற்றது. தனது சமூகத்தின் வரலாற்றை யாருமே எதிர்பாராதபடியெல்லாம் விமர்சித்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றதுகூட இந்தப் பொருளில்தான்; அறிவு (க்ஷீமீணீள்ஷீஸீ) மற்றும் நவீனத்துவக் கருத்துகளை உள்வாங்கும் தன்மை தமிழில் இல்லை என்று அவர் நம்பியதன் விளைவே இது.

நவீனத்துவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து அதைச் சமூகத்தின் அனைத்து எல்லைகளுக்கும் நீட்டிக்க உழைத்த பெரியார் இல்லாத ஒரு தமிழ்ச் சூழல் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். சாதி இறுக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைய பெரியாரின் நவீனத்துவக் கருத்துகள் காரணம் என்பதை மறுக்க முடியாது.

நவீனத்துவக் கருத்துகளைப் பெரியார் முன்னெடுத்துச் செல்லும்போது, வரலாற்றுக் காரணங்களால் சில வசதிகளோடு முன்வரிசையில் இருந்தவர்கள் அதன் சலுகைகளைச் சற்றே கூடுதலாகப் பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அவரது நவீனத்துவக் கருத்தே தவறு எனக் கூற முடியுமா? பெரியாரது பணியே ஆதிக்கச் சக்திகளான சாதி இந்துகளைப் பாதுகாக்கவே எனச் சிலர் கூறுவது அசல் திரிபுவாதம். அம்பேத்கரின் இயக்கத்தில்கூட, அதன் பலனைப் பெற்றவர்களில் அன்றைய சூழýல் சில மேம்பட்ட தýத் வகுப்பாளர்களே அதிகம். அதற்காக, 'மஹர்' வகுப்பைத் தவிர ஏனைய தýத்துகளுக்கு அம்பேத்கர் எதிரி என்று சொல்ல முடியுமா?

தமிழின் பழமை பற்றி அளவிற்கதிகமான பெருமிதமும் சகிக்க முடியாத உயர்வு நவிற்சியும் கொண்டிருந்த தி.மு.க. பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தவறியதோடு, வாக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் தரத் துவங்கியதால் பெரியாரின் இயக்கமே 'சாதி எதிர்ப்பு இயக்கமல்ல, வெறும் பிராமண எதிர்ப்பு இயக்கமே' எனும் பெயரைப் பெறக் காரணமாகிவிட்டது. ஆக, ஒரு ஆக்கபூர்வமான சிவில் சமூகம் உருவாவதை இவர்கள் யாருமே விரும்பவில்லை எனத் தெரிகிறது.

தமிழகச் சூழýல் நவீனத்துவக் கருத்துகளைப் பெரியாருக்குப் பிறகு தர்க்கரீதியாக அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு சாதி பற்றிய புரிந்துணர்வு கொண்ட மார்க்சியவாதிகளான நக்சல் அமைப்பினரிடமும் தýத் இயக்கங்களிடமுமே உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளின் தொடர்ச்சியே முக்கியப் பங்காற்றும். மாறாக, பெரியாரின் சிந்தனைகள் எதிர்மறையானவை என்பது புரட்டல்வாதமே.

பெரியாரை அழித்தே தýத் விடுதலை என்பது நவீனத்துவத்தை மறுத்தே தýத் விடுதலை என்பதற்கு ஒப்பாகும். அன்றாட அரசியல் குறைகளை முன்னிறுத்திப் பெரியாரை, நவீனத்துவத்தை மறுதýப்பதால் ஏற்படும் வெற்றிடம் தýத் விடுதலைக்கு, பெண் விடுதலைக்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை.

மேலும் கழகங்கள் இந்துத்வ சக்திகளோடு கூட்டணி சேர்ந்ததற்குப் பெரியார் பொறுப்பாக மாட்டார்; அதேபோல் குலதெய்வத்தைக் கும்பிட்டு, ஜார்ஜ் பெர்னாண்டஸ÷டன் கூட்டுச் சேர்ந்தால் அது அம்பேத்கரின் தவறல்ல. இதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் அன்றாட அரசியýன் ஒரு பரிமாணம். இவற்றை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி இகழ்ந்தோ, புகழ்ந்தோ பேசுவது சாதாரணப் பத்திரிகை நிருபர் செய்யும் வேலை. ஆகையால் அன்றாட அரசியலையும் அதன் நிறை, குறைகளையும் பின்தள்ளி, வரலாற்று ரீதியாக, ஆய்வு நோக்கில், ஓர் இயக்கத்தின் முற்போக்குச் சிந்தனைகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எப்படி உருமாற வேண்டும் என்ற புதிய கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும்.

சுருங்கக் கூறின், சாதி அழிப்பு, பெண் விடுதலை, மதச் சார்பின்மையாக்கம் போன்ற உயர்ந்த விழுமியங்களுக்கு நவீனத்துவமே தோற்றுவாய். தமிழ்ச் சூழýல் இந்த நவீனத்துவச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தியோரில் முதýரண்டு இடங்கள் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் உரியவை. இச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இவ்விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணியே. எனினும் மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் தýத் அமைப்புகளும் இப்பணியைச் செய்யச் சித்தாந்த பலம் பெற்றவை.

கட்டுரையாசிரியர் புதுதில்ý ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை ஆய்வு மாணவர்.


http://tamil.sify.com/kalachuvadu/april05/...php?id=13710510


- stalin - 09-06-2005

இக்கட்டுரையை இணைத்த நாரதர் அவர்கட்கு நன்றி..இந்த கட்டுரையில் கூறப்படும் அயோத்தி தாசன் என்பவர் யார்.. பெரியார் இயக்கத்திலிருந்தவரா அல்லது சமகாலத்து சமூகவியலாளனா...இவரை முன்பூ கேள்விப்பட்டதில்லை ...ஒரு தகவலுக்காக கேட்கிறேன்


- narathar - 09-06-2005

stalin Wrote:இக்கட்டுரையை இணைத்த நாரதர் அவர்கட்கு நன்றி..இந்த கட்டுரையில் கூறப்படும் அயோத்தி தாசன் என்பவர் யார்.. பெரியார் இயக்கத்திலிருந்தவரா அல்லது சமகாலத்து சமூகவியலாளனா...இவரை முன்பூ கேள்விப்பட்டதில்லை ...ஒரு தகவலுக்காக கேட்கிறேன்

இவர் 1845 - 1914 காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ் பொளவுத்த சிந்தனை ஆளர்.


- stalin - 09-06-2005

narathar Wrote:
stalin Wrote:இக்கட்டுரையை இணைத்த நாரதர் அவர்கட்கு நன்றி..இந்த கட்டுரையில் கூறப்படும் அயோத்தி தாசன் என்பவர் யார்.. பெரியார் இயக்கத்திலிருந்தவரா அல்லது சமகாலத்து சமூகவியலாளனா...இவரை முன்பூ கேள்விப்பட்டதில்லை ...ஒரு தகவலுக்காக கேட்கிறேன்

இவர் 1845 - 1914 காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ் பொளவுத்த சிந்தனை ஆளர்.
நன்றி நாரதர்


- narathar - 09-07-2005

தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்

இன்குலாப்


தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.

சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.

"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.
சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.

எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.

விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.

இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.

இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).

தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:

“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).

பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.

மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''

பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.

இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:

"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான் தலைவர் என்ற வாதத்தை சுபவீ, சரியான தர்க்கத்தினால் மறுக்கிறார்:

“... ஒரு சாதிக்குள்ளேயே பல குழுக்களும் தலைவர்கள் பலரும் இருக்கும்போது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதிகளுக்கும் ஒரு தலைவர் என்பது கற்பனை. சாதிகள் அல்லது தொகுப்புகளின் அடிப்படையில் "ஒற்றைத் தலைவர்' ஒரு நாளும் வரமுடியாது. இன்றைக்கும் தங்களின் "சாதிவட்டம்' என்பதுதான் சாதித் தலைவர்களின் பலம் பலவீனம். அவர்கள் ஒரு சாதியை விட்டு ஒரு சாதிச் சங்கத்தை விட்டு வெளியில் வரும் வரை, எல்லாச் சாதியினருக்கும் தலைவராக முடியாது'' (பக்கம்: 168 69).

பெரியார், "பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்' என்று முத்திரை குத்தும் தலித்தியச் சிந்தனையாளர்கள், இது குறித்து ஆழ்ந்து ஆராய வேண்டும். பெரியார் செருப்படி பட்டது, ஒரு குறிப்பிட்ட சாதி வெறிகொண்ட பிற்படுத்தப்பட்டோர் மத்தியில்தான் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. முதுகளத்தூர் கலவரத்தின் போது பெரியார் எடுத்த நிலைப்பாடு, கம்யூனிஸ்டுகளால் கூடத் துணிய முடியாதது. வெண்மணி குறித்து "விடுதலை' தலையங்கம் எழுதியதை ஏற்றுக் கொண்டுதான் அவரை விமர்சிக்க வேண்டும்.

பெண்ணியம் குறித்த நிலைப்பாட்டில், ஒட்டுமொத்த தமிழ் மரபுச் சிந்தனையாளர்களுக்கும் எதிராக ஒலித்த ஒரு குரல் பெரியாருடையது மட்டும்தான். பெரியாரை ஆழ்ந்து பயிலும்போது, பெண் விடுதலை குறித்து அவர் வெளியிட்டது வெறும் அதிர்ச்சி மதிப்புச் சார்ந்தது என்பது, நியாயமற்ற குற்றச் சாட்டாகவே நிற்பது புலனாகும். அவருடைய தேடலில் அவர் கண்டடைந்த முடிவுகள் ஆணாதிக்கத்துக்கும், சாதியத்துக்கும் அதிர்ச்சியளிப்பவைதான். கோப்பர் நிகசும், கலிலியோவும் கண்டடைந்த முடிவுகளை அறிவியலாளர்கள் வெறும் அதிர்ச்சி மதிப்புக்குரியவை என்று கூறுவார்களா? எனினும், பழமைவாதிகளுக்கு அவை அதிர்ச்சியளித்தது உண்மைதான். சிந்தனையாளர்களின் ஆய்வு முடிவுகள், எத்தகைய தரவுகளின் பரிசீலனையில் உருவானவை என்பதை நோக்குவதுதான் தன்மையானது. பெரியாரியத்தை வசைபாடும் தோழர்கள், மானுட விடுதலை குறித்த பெரியாரியப் பார்வைக்கு நியாயம் செய்யவில்லை.

உண்மையான பெரியாரியவாதிகளுக்கும் பல செய்திகளைச் சொல்ல வேண்டும். 1967 இல் இருந்து பெரியாரை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் கழகங்கள்தாம் தமிழகத்தை ஆளுகின்றன. இதற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததைவிடக் கூடுதலாக தலித்துகள் அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கழகங்களின் ஆட்சியில்தான். இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் கழக முன்னோடிகளின் பங்கு கணிசமானது. ஆட்சிக்குக் கட்டுப்பட்ட காவல் துறையின் அத்துமீறல்கள், நாகரிக உலகைத் தலைகுனியச் செய்யும். இந்தக் கொடுமைகளை முதன் முதலாக தலித்துகள்தான் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள், போராடுகிறார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் அவ்வப்பொழுது கண்டனம் செய்கின்றன.

ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலிய ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்ட கட்சிகள், இந்தக் கொடுமைகளுக்கு எதிரான சமரசமற்ற ஒருபோராட்டத்தை ஏன் முன்னெடுக்கவில்லை? இந்தக் கட்சிகள் அனைத்தும் "பெரியார் சுழி'யோடுதான் தங்கள் வரலாற்றைச் சொல்கின்றன. எனில், சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும்போது, மவுனம் காக்க வேண்டும் என்று பெரியார் கற்பித்தாரா? இந்தக் கழகங்களைச் சேர்ந்தவர்களின் சாதிய ஈடுபாடு, தமிழக வரலாற்றை நாறச் செய்கிறதே! இதற்கு இக்கழகங்களின் தலைவர்கள் என்ன பரிகாரம் செய்யப் போகிறார்கள்?

சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால் பல அத்துமீறல்கள் நடந்தன; ஊழல் புரையோடிப் போனது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணமான கட்சித் தலைவர்கள், லெனினை முன்னிறுத்தியே தங்கள் தவறுகளைத் தொடர்ந்தனர். சினம் கொண்ட இளைஞர்கள் கட்சியை வெறுத்தனர். கட்சி கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட லெனினை வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதில் உலக முதலாளியம் முன்னின்றது என்பது உண்மைதான். ஆனால், அதற்கு கட்சியின் தவறுகள் இடங்கொடுத்தன. சோவியத் யூனியன் சிதறியபோது, லெனினுடைய சிலையும் சேர்ந்தே சிதறியது.

கழகங்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் சாதியக் கொடுமைகளால், தன்னுணர்வு பெற்ற தலித்துகள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள். அந்த வெறுப்பு, பெரியார் எதிர்ப்பாக மாறக்கூடிய எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. இதற்கு, பார்ப்பனியம் தூபம் போடலாம். அதற்கு முன்பு கழகங்கள் தன்நெஞ்சறிவது பொய்க்கக்கூடாது. பெரியாருக்கு நியாயம் செய்வது, இன்று தலித்துகளுக்கு நியாயம் செய்வதுதான்.

http://www.keetru.com/dalithmurasu/aug05/ingulab.html


- stalin - 09-09-2005

http://www.periyar.org/html/ap_bios_eng3.asp