Yarl Forum
திருமலையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் (/showthread.php?tid=3394)



திருமலையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் - mayooran - 09-08-2005

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் பெரும்பான்மையாக வதியும் சிறிமாபுரப் பகுதியால் நேற்றிரவு சென்ற தமிழ், முஸ்லீம் மக்கள் சிங்களக் காடையர்களின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
தமிழ், முஸ்லீம் மக்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்திக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா காவல்துறையினரே அல்லது படையினரோ அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிங்களக் காடையர்களின் தாக்குதலின் காரணமாக தமிழ், முஸ்லீம் மக்கள் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலையில் நேற்று தமிழ் பகுதிகளிற்குச் சென்ற படையினரும் காவல்துறையினருடம் வீடு வீடாகத் தேடுதல் நடாத்தியுள்ளனர். எனினும் எவரும் இந்தத் தேடுதலின்போது கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று முந்நாள் சிங்களப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய படுகாயமடைந்த சமாதிபிள்ளையார் கோயிலின் பூசகர் கண்ணன் மற்றும் அவரின் உதவியாளர் தாசன் ஆகியோரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக்கூறி கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா படையினர் முயன்றபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா.சம்பந்தன் அவர்களினும் மக்களினதும் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
[size=7]சங்கதி


- RaMa - 09-08-2005

மட்டகளப்பில் எல்லாம் முடிந்து இனி திருகோணமலையில் தொடங்கி விட்டார்களா?