Yarl Forum
இன்னொரு பக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இன்னொரு பக்கம் (/showthread.php?tid=3328)

Pages: 1 2


இன்னொரு பக்கம் - இளைஞன் - 09-13-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>இன்னொரு பக்கம்</b></span>
<b>ஜெயபாஸ்கரன்</b>

தெளிவாகவே தெரிகிறது
நிகழ்வுகளின்
இன்னொரு பக்கம்

கண்களை கவரும்
வண்ண வண்ண
கடவுள் படங்களின் மீது,
அச்சு இயந்திரங்களின்
ஓசையும்
'முருகனுக்கு மெஜந்தா போதாது'
என்றொரு குரலும்
கேட்கிறது எனக்கு.

திரையரங்குகளில் கிடந்து
வெளியேறும் போது
சொல்கிறார்கள்
'அப்பாசாமி நடிப்பு அற்புதம்'
உள்ளுக்குள்
உறுமுகிறேன் நான்.

'அடபாவிகளே'
எடுத்தத்தில் தேறியதை
காட்டுகிறார்கள் நமக்கு.
எடுத்து எடுத்து
வெட்டி வீசப்பட்டதைக் குறித்து
ஏதாவது தெரியுமா உனக்கு?
இங்கிலாந்து ராணி
இந்தியா வந்தபோது
எல்லோரும் பார்த்தார்கள்
அவரை.

நான் பார்த்தது
அவருக்காகவே
அங்கிருந்தே
கொண்டு வரப்பட்ட
காரை.

என்னவோ போங்கள்.
வேர்களின் மீது
சிறுநீர் கழித்துக் கொண்டே
பூக்களைப் புகழ்வதற்குப்
பிடிக்கவில்லை எனக்கு.

உங்களுக்கு?

<i>நன்றி: ஆறாம்திணை</i>


- இளைஞன் - 09-13-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>மெளன அஞ்சலி</b></span>
<b>ஜெயபாஸ்கரன் </b>

எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.

இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்

இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த முரணுமில்லை எனக்கு.

ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.

கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை

ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்,
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.

ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.

<i>நன்றி: ஆறாம்திணை</i>


- இளைஞன் - 09-13-2005

[size=18]<b>நானும் நீயும்</b>
<b>ஜெயபாஸ்கரன்</b>

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

<i>நன்றி: ஆறாம்திணை</i>


- Mathan - 09-13-2005

கவிதைகளை அறிய தந்தமைக்கு நன்றி இளைஞன்.

இந்த மெளன அஞ்சலி கவிதையில் சொல்லப்பட்டவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. அறிவிப்பு செய்தவர் மணி துளிகளை கணக்கிடும் போது அஞ்சலி செலுத்தும் நம்முடைய மனதில் இன்னும் எத்தனை செக்கன் இப்படியே இருக்கணும், இன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என்ன போன்ற பல சிந்தனைகள் அலை மோதுகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாங்கள் அந்த மணிதுளிகளை அஞ்சலி செலுத்த உபயோக்கப்படுத்துவதில்லை என்றே சொல்ல வேண்டும்.


- Mathan - 09-13-2005

இந்த கவிதை எப்படி இருக்கு இளைஞன்?

<b>¸¡¾ø...¸¡¾ø...</b>

<b>¦ƒÂÀ¡Š¸Ãý</b>

<span style='font-size:20pt;line-height:100%'>±ýÉ ¦º¡øÅ¦¾ýÚ
¦¾Ã¢ÂÅ¢ø¨Ä
±ý¨Éô ÀüÈ¢ ¦¸¡ñÎ
¯ý¨ÉôÀüÈ¢ì ¦¸¡ñÎ
¯ý¨ÉôÀüÈ¢ì §¸ðÀÅ÷¸ÙìÌ.

¬¨ºÓ¸õ
ÁÈóÐ §À¡¸Ä¡õ
¬¨Ç§Â ÁÈóÐ §À¡¸Ä¡Á¡?
±ýÚ Â¡Ã¢¼§Á¡
¦º¡øÄ¢ì ¦¸¡ñÎ §À¡¸¢È¡û,
±ý¨ÉÔõ, ¯ý¨ÉÔõ
ÒâóÐì ¦¸¡ûÙõ
ÁÉ¢¾ÁüÈ §ÅġԾõ.

¸ñ¸¨Çô À¡÷òÐ
§ÀÍÅÐõ
¸¡ÐÀ¼ô §ÀÍÅÐõ
§ÅÚ §ÅÈ¡¸ இÕ츢ÈÐ
அó¾ ÁÉ¢¾÷¸ÙìÌ.

±ý¨É ¿£
²Á¡üÈ¢ Å¢ðÎô §À¡öŢ𼾡¸
¿¡Ö §Àâ¼Á¡ÅÐ
¦º¡øÄ¡ Å¢ð¼¡ø
«ýÈ¢Ã×
¯Èì¸í¦¸¡ñÎ «¨Ä¸¢È¡ý
- ¯.À¢. Ãí¸ý

¯ý ¸¡¾¨Ä
«Åû ÒâóЦ¸¡ûÇÅ¢ø¨Ä¡?
±ý¦Èý¨Éì §¸ðÎì §¸ðÎ
Ðì¸õ ¸ìÌŧ¾
¾¢ÉºÃ¢ §Å¨Ä¡¸¢ Å¢ð¼Ð
¾Â¡ÇÛìÌ.

¯ý¨Éô ÀüÈ¢
¿¡ý ¦º¡øÖõ ±Ð×õ
±ÎÀ¼¡Á§Ä §À¡öŢθ¢ÈÐ.
¬¨½Ôõ, ¦Àñ¨½Ôõ
¸¡¾Ä÷¸Ç¡¸ô À¡÷ò§¾
ÀÆì¸ô ÀðÎô§À¡É
அÅ÷¸Ç¢¼õ.

¯ý ¦À¡ÕðÎ
¿¡ý ÀÎõ «ÅЍ¾¸ÙìÌ
ÓüÚô ÒûǢ¡¸,
«¨ÆòÐ ÅóÐ அÅ÷¸ÙìÌ
¸¡ðÊÅ¢ðÎô §À¡¸Ä¡ÁøÄÅ¡?
¯ý º¿¾¢Ã§º¸Ã¨É.

<i>நன்றி - ஆறாம்திணை</i></span>


- இளைஞன் - 09-13-2005

நன்றி மதன். ஜெயபாஸ்கரனின் கவிதைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. இப் பாடுபொருள்கள் பெர்துவானவைதான். இருந்தபோதும் அதை சொல்கிற விதம் - கவிதையின் வார்த்தைப் பயன்படுத்தல்கள் தான் கவிஞர்களைத் தனித்துவப்படுத்திக் காட்டுகின்றன. அந்த வகையில் இவரது கவிதைகளை நான் இரசித்துப் படித்திருக்கிறேன்.

பாருங்கள் நட்பு பற்றிய கவிதைக்கு "காதல்... காதல்..." என்று தலைப்பிட்டு கடைசி வரிகளில் அற்புதமாய் நட்பை சொல்கிறார். ஆண்-பெண் நட்பை சமூகம் புரிந்துகொள்வதில்லை என்பதையும், அதே நேரம் ஒரு பெண் நட்பாகப் பழகுவதைக் கூட காதல் என்று தனக்குள் ஆசை வளர்த்துக் கொள்பவர்களையும் சாடுகிறது கவிதை.

நன்றி


- Rasikai - 09-13-2005

கவிதை நன்றாக இருக்கு. நான் இவரின் கவிதை இப்போது தான் வாசிக்கிறேன். தொடர்ந்து இங்கு போடவும் இவரின் கவிதைகளை.


- Mathan - 09-13-2005

கவிதைகளில் பேசப்படும் விடயங்கள் குறித்த உங்களுடைய கருத்தையும் எழுதுங்களேன் ரசிகை,


- sakthy - 09-13-2005

[ஃஉஒடெ="இளைஞன்"][cஒலொர்=க்ரேன்][ப்][சிழெ=18]மெளன அஞ்சலி[/சிழெ][/ப்][/cஒலொர்]
[ப்]ஜெயபாஸ்கரன் [/ப்]


ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.

எத்தனை அழகான நிஜம் ஜெயபாஸ்கரனின் கவிதை வரிகளில்.........


- sakthy - 09-13-2005

நிலவு தனிமையில்
வானமும் தனிமையில்
இதயம் எங்கு தேடினாலும்
மிஞ்சுவது வெறுமை
நம்பிக்கைகள் மவுனமாய்
செத்துவிட்டன.

தனியாக ஒரு புகைக் கீற்று
மட்டும்
கணநேரம் நடுங்கிச் செல்கிறது
உடலும் உள்ளமும்
தனிமையில் தரிசிப்பதுதான்
வாழ்க்கையா ?

எப்போதாவது ஒரு துணை கிடைத்தாலும்
நம்மைக் கரம் பற்றி இழுத்துச் செல்வது
தனிமை
ஆள் அரவமற்ற மாளிகைக்குள்
தயங்கியபடி ஒரு தீபம் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது

தனிமையின்
இடிபாடுகளுக்கிடையில்
இன்னும் பல வருடங்கள்
நான் நம்பிக்கையுடன்
காத்திருப்பேன் .........

வளைந்து நெளிந்து செல்லும்
வாழ்க்கைப் பாதையை
பார்த்தபடி
அதன் பிறகு போய்விடுவேன்
இந்த உலகை விட்டு
தனியாக...............
- உருது கவிதை


- KULAKADDAN - 09-14-2005

நன்றி இளைஞன், மதன்

Quote:ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்

எந்தவொரு அஞ்சலியிலும்.
Quote:என்னவோ போங்கள்.
வேர்களின் மீது
சிறுநீர் கழித்துக் கொண்டே
பூக்களைப் புகழ்வதற்குப்
பிடிக்கவில்லை எனக்கு.

கவிதைகள், யாதார்த்ததை பேசுகிறன, கவிதை நடை வித்தியாசமானது.


- Mathan - 09-14-2005

முதல் கவிதையில் குறிப்பிட்டது போல் அனைத்தினதும் மறுபக்கத்தை பார்த்தால் எதையும் ரசிக்கமுடியாது என்று ஒருவர் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குளம்.


- KULAKADDAN - 09-14-2005

Mathan Wrote:முதல் கவிதையில் குறிப்பிட்டது போல் அனைத்தினதும் மறுபக்கத்தை பார்த்தால் எதையும் ரசிக்கமுடியாது என்று ஒருவர் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குளம்.

மறுபக்கத்தை பார்த்தால் ரசிக்கமுடியாது என்பது சரி. ஆனால் மறுபக்கம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடக்கூடாதில்லையா மதன்.


- ப்ரியசகி - 09-14-2005

கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது...இப்படி நிறைய..வித்யாசமான கவிதைகள் எனக்கு வாசிக்க கிடைப்பதில்லை...ரொம்ப நன்றி..
ஆனால் தப்பா எடுக்காதீர்கள்..ஜெயபாஸ்கரன் யாரு? எனக்கு தெரியலையே...
:roll: சக்தி போட்ட கவிதையும் அவருடையதா? :roll:


- Mathan - 09-14-2005

ப்ரியசகி,

ஜெயபாஸ்கரன் இந்தியா மதுரையை சேர்ந்தவர். இவரின் கவிதை நடை வித்தியாசமாக சிந்தனையை தூண்டுவது போல் இருக்கும். நானும் நண்பர் ஒருவர் அறிமுகம் செய்ததை தொடர்ந்து இணையம் முலமே இவருடைய கவிதைகளை அறிந்து கொண்டேன். ஜெயபாஸ்கரனின் கவிதைகள் சில வருடங்களிற்கு முன்பும் சாமி என்பவரால் களத்தில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஜெயபாஸ்கரனை jayabaskaran_1960@rediffmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.


- sakthy - 09-14-2005

மதன் அண்ணா ஜெயபாஸ்கரன் இணையத்தள முகவரி இருந்தால் அனுப்புங்களேன்.
இது எனது படைப்பு அல்ல பிரியசகி .எங்கோ படித்த உருது கவிதை.
தொடந்து கொடுங்கள் இளைஞன்


- Mathan - 09-14-2005

சக்தி,

இணையதள முகவரி எது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆறாம் திணையில் இவருடைய கவிதைகள் சில இருக்கின்றது.


- ப்ரியசகி - 09-15-2005

நன்றி மதன் தகவலுக்கு...


- வெண்ணிலா - 09-15-2005

ஜெயபாஸ்கரன் இவரின் கவிதைகள் நன்றாக இருக்கு. வாசிக்க சந்தர்ப்பம் தந்த மதன் அண்ணாக்கும் இளைஞனுக்கும் நன்றி


- இளைஞன் - 02-16-2006

[size=18]<b>புத்தம் புதிய</b>
<b>ஜெயபாஸ்கரன்</b>

ஒரே ஒழுங்கில்
ஒரே ஓசையில்தான்
அடித்துக் கொள்வார்கள்
வில்லனும் கதாநாயகனும்

சொல்ல வேண்டிய யாவற்றையும்
முழுமையாகச் சொல்லிவிட்ட பிறகுதான்
தலை சாய்ந்து போகிறது
துப்பாக்கியால் சுடப்பட்டவருக்கு.

சொல்லி வைத்தாற்போல்
ஒரே தொனியில்தான்
ஓலமிடுவார்கள்
கற்பழிக்கத் தூரத்தப்படும்
கதாநாயகிகள்.

கதாநாயகன் வந்து
காப்பாற்றும் வரை
கதாநாயகியைக் கட்டி வைத்து
நிதானமாகப் பேசி
சித்ரவதை செய்வான் வில்லன்.

முக்கியமான கட்டத்தில்
கைத்தூப்பாக்கியில்
தோட்டா தீர்ந்துபோகும்
கதாநாயகனுக்கு.

அந்தக் காலத்தில்
அம்மா பாடிய பாடலால்
ஒன்றிணைந்து கட்டியழுவார்கள்
அதுவரை எதிரிகளாயிருந்த
அண்ணனும் தம்பியும்.

எல்லாமுமே
ஒரே மாதிரியாகத்தான்
இருக்கிறது
கடந்த இருபத்தைந்து
ஆண்டுகளுக்கும் மேலாக.

இருந்தும்
நாகூசாமல்
அடிக்கடி சொல்கிறீர்கள்
புத்தம் புதிய
தமிழ்த் திரைப்படம் என்று.

<i>நன்றி: ஆறாம்திணை</i>