Yarl Forum
ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வென்றது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வென்றது (/showthread.php?tid=3321)



ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வென்றது - Mathan - 09-14-2005

அண்மையில் நடந்த ஆஸ்ரேலியா இங்கிலாந்து இடையே நடந்த 5 டெஸ்ட்களை கொண்ட ஆஷஸ் போட்டி தொடரை இங்கிலாந்து வென்றது. இந்த தொடரை 18 வருடங்களாக ஆஸ்ரேலியா வென்று வந்ததும் இம்முறை அதனை முறியடித்து இங்கிலாந்து வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 18 வருடத்திற்கு பிந்தய வெற்றியை கவுரவிக்கும் விதமாக நேற்று கிரிக்கட் வீரர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.

நேற்றைய வாழ்த்து ஊர்வலத்தின் படங்கள் சில (படங்கள் நன்றி -பிபிசி)

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_england0s_ashes_victory_parade/img/1.jpg' border='0' alt='user posted image'>
வீரர்கள் திறந்த பஸ்சில் நகரில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_england0s_ashes_victory_parade/img/2.jpg' border='0' alt='user posted image'>
வீரர்களை வாழ்த்துவதற்காக நகரில் கூடியிருந்த மக்களில் ஒரு பகுதி.

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_england0s_ashes_victory_parade/img/4.jpg' border='0' alt='user posted image'>
புகழ்பெற்ற டிராபில்கர் சதுக்கத்தில் கூடியிருக்கும் மக்கள்


- Mathan - 09-14-2005

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_england0s_ashes_victory_parade/img/6.jpg' border='0' alt='user posted image'>
மேடையில் பாராட்டப்படும் வீரர்களுடன் இணைந்து பெண்கள் அணியினரும் மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்.

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_england0s_ashes_victory_parade/img/7.jpg' border='0' alt='user posted image'>
மக்கள் கூட்டத்தில் இங்கிலாந்து அணி தலைவர் Michael Vaughan

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_england0s_ashes_victory_parade/img/8.jpg' border='0' alt='user posted image'>
பிரதமர் ரொனி பிளேயரினால் கவுரவிக்கப்பட்ட வீரர்கள் அவரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் சாலைக்கு வெளியே பிரதமருடன்.


- Mathan - 09-14-2005

இங்கிலாந்து அணிக்கு லண்டனில் உற்சாக வரவேற்பு

<img src='http://news.bbc.co.uk/sol/shared/spl/hi/pop_ups/05/cricket_england0s_ashes_celebrations_/img/3.jpg' border='0' alt='user posted image'>

லண்டன், செப். 14: ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு லண்டனில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திறந்த 2 அடுக்கு மாடி பஸ்ஸில் வீரர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

கிழக்கு லண்டனில் உள்ள மான்சன் ஹவுஸில் தொடங்கிய ஊர்வலம், கனான் தெரு, செயின்ட் பால்ஸ் கத்தீட்ரல் வழியாக டிராபல்கார் சதுக்கத்தை அடைந்தது. அங்கு வீரர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் லார்ட்ஸ் மைதானத்தை நோக்கிச் சென்றது வீரர்களின் அணி வகுப்பு. அங்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய ஆஷஸ் கோப்பையை வாகன் தலைமையிலான குழு ஒப்படைத்தது.

ஆயிரக்கணக்கானோர் தேசியக் கொடியுடன் லண்டன் தெருக்களில் அணிவகுத்து, வீரர்களை வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இங்கிலாந்து அணிக்கு, அந் நாட்டு பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Thanx: BBC/Dinamani


- Danklas - 09-14-2005

இங்கிலாந்து அணிக்கு கிடைச்ச 2 சூப்பர் ஸ்ரார்கள்....

<img src='http://img65.imageshack.us/img65/6509/flntof8ng.jpg' border='0' alt='user posted image'>
**Andrew Flintoff** அதிரடி பட்ஸ்மன் ஆக்கிரோச பந்து வீச்சாளார்...

<img src='http://img65.imageshack.us/img65/5219/kevin0nc.jpg' border='0' alt='user posted image'>
**கேவின் பிற்றர்சன்** அதிரடி சிக்ஸ்ஸர் மன்னன்.... Idea


- SUNDHAL - 09-14-2005

ம்ம்ம்ம் மிகவும் அருமையான ஆட்டம்...