![]() |
|
ஆடுகளில் உறை நிலை சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை வெற்றி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: ஆடுகளில் உறை நிலை சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை வெற்றி (/showthread.php?tid=3300) |
ஆடுகளில் உறை நிலை சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை வெற்றி - kuruvikal - 09-15-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40799000/jpg/_40799968_humanegg_spl_203_body.jpg' border='0' alt='user posted image'> ஆடுகளில் மேற்கொள்ளப்பட்ட உறை நிலையில் (frozen) பரிகரிக்கப்பட்ட சூலகங்கள் ((ovary) கொண்டான மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை முதன்முறையாக வெற்றி அளித்திருக்கிறது..! மாற்றீடு செய்யப்பட்ட சூலகங்கள் வழமையான குருதி வழங்களைப் பெறுவதுடன் வளமான முட்டையையும் (egg) உருவாக்கி உள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் அறியத்தருகின்றார்கள்..! மனிதப் பெண்களில் சூலகப் பாதிப்புக்களால் அல்லது சூலகப்புற்று நோயால் சூலகத்தை இழப்பவர்கள்..அல்லது வளமான முட்டை இன்மையால்.. கருக்கட்டும் தகுதியை இழப்பவர்களுக்கு இந்த மாற்றீட்டு முறை மனிதரில் வெற்றி அளிக்கும் பட்சத்தில்...அவர்களும் வளமான முட்டைகளை உருவாக்கக் கூடிய நிலை தோன்றலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது...! முன்னர் மனிதரில் சில உடனடி சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் உறை நிலையில் பரிகரிக்கப்பட்ட சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..! தகவல் - http://news.bbc.co.uk/1/hi/health/4244750.stm[/size] - Rasikai - 09-15-2005 ஆகா விஞ்ஞானம் நல்லாத்தான் முன்னேறுது. தகவலுக்கு நன்றிகள் குருவிகாள். - Mathan - 09-15-2005 தகவலுக்கு நன்றி குருவி, - ப்ரியசகி - 09-16-2005 சரி இதில ஆட்டுக்கு ஒன்றும் ஆகாது தானே? - kuruvikal - 09-16-2005 ப்ரியசகி Wrote:சரி இதில ஆட்டுக்கு ஒன்றும் ஆகாது தானே? ஆகும் சகி... ஆடு குட்டி ஈனும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 09-16-2005 நன்றி அண்ணா தகவலுக்கு |