![]() |
|
கைக்கூ கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கைக்கூ கவிதைகள் (/showthread.php?tid=3297) |
கைக்கூ கவிதைகள் - Jenany - 09-15-2005 மலர் சூட மலருக்கு தடை விதவை இயற்கையா? செயற்க்கையா? கூந்தல் மணம் மட்டுமல்ல பெண்களின் மனமும்தான் மலரே மலர் சூடியது கனியே கனி சுவைத்தது என்னவள் என்னைவிட என் பேனா அதிகம் நேசிக்கிறது அவளை அவளைப்பற்றியே எழுதுகிறது. விலை மதிப்பற்றது விற்க்க கூடாதது காதலி தந்த பரிசு உதட்டிட்க்கு பூசுங்கள் உள்ளத்திற்க்கு பூசாதீர்கள் சாயத்தை... உன் விழி கண்டு தாமரைகள் மலர்கின்றன ஆதவனுக்கு பொறாமை. thanks: www.kavimalar.com - Mathan - 09-15-2005 ஹைக்கூ கவிதைகளை அறிய தந்தமைக்கு நன்றி. அவை சில வரிகளிலேயே விடயத்தை சொல்லிவிடுகின்றன, இன்னும் சிறப்பான ஹைக்கூ கவிதைகள் கிடைத்தால் அவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஈழத்து ஹைக்கூ கவிஞர்கள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள், - sakthy - 09-17-2005 ஏழைகளின் வீடுகளிலும் அடுப்பு எரிகிறது குடிசைகள் தீ வைப்பு - sakthy - 09-17-2005 ஊழல் பெருஞ்சாலிகளின் கிடங்கு-அரசியல் - sakthy - 09-17-2005 மனிதனை மிருகமாக்குவதும் காதல் மிருகத்தை மனிதனாக்குவதும் காதல் - Mathan - 09-17-2005 sakthy Wrote:மனிதனை உண்மையில் காதல் மனிதனை மிருதுவாக்குவதுடன் அவனுடைய மென்மையான உணர்வுகளை தட்டியெழுப்பி ரசனையுள்ளவனாக்குகின்றது. அதே காதல் மனிதனை மிருகமாக்குகின்றது என்றால் அந்த மனிதன் கொண்டது காதலே அல்ல, ஒரு தலையாய் அன்பு வைத்துவிட்டு( அது காதல் இல்லை தானே) அவனோ அவளோ கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மிருகமாகிவிடுபவர்களை பார்த்து அதற்கு காதல் தான் காரணம் என்று சொல்ல முடியாது, - ப்ரியசகி - 09-17-2005 Quote:ஒரு தலையாய் அன்பு வைத்துவிட்டு( அது காதல் இல்லை தானே) இல்லை..அது காதல் தான்...ஆனால் முழுமையானதல்ல... - Mathan - 09-17-2005 ம் அதுபத்தி எனக்கு சரியாக தெரியலை. எது எப்படியோ ஒரு தலை அன்பு இருபக்கமும் அன்பாக காதலாக பரிணமிக்காத போது அன்பை ஏற்று கொள்ளாத மறுதரப்பை மிருகமாக மாறி காயப்படுத்தாதவரை சரிதான். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டு அதனை அன்புக்குரியவர் ஏற்றுகொள்ளாத போது வஞ்சம் வைத்து காயப்படுத்துவதில் நான் புலத்தில் பல இடங்களில் கண்டிருக்கின்ன்றேன் (பெரும்பாலும் ஆண்கள் தான் வஞ்சம் தீர்க்கின்றார்கள்) - sakthy - 09-17-2005 காதல் தான் அளவுக்கு அதிகமான அபரிதமான காதல். எத்தனையோ காதல்கள் கொலை செய்யும் அளவுக்கு போயிருக்கிறதே - ப்ரியசகி - 09-17-2005 [quote="Mathan"]ம் அதுபத்தி எனக்கு சரியாக தெரியலை. எது எப்படியோ ஒரு தலை அன்பு இருபக்கமும் அன்பாக காதலாக பரிணமிக்காத போது அன்பை ஏற்று கொள்ளாத மறுதரப்பை மிருகமாக மாறி காயப்படுத்தாதவரை சரிதான். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டு அதனை அன்புக்குரியவர் ஏற்றுகொள்ளாத போது வஞ்சம் வைத்து காயப்படுத்துவதில் நான் புலத்தில் பல இடங்களில் கண்டிருக்கின்ன்றேன் (<b>பெரும்பாலும் ஆண்கள் தான் வஞ்சம் தீர்க்கின்றார்கள்)[/</b>quote] ம் அது சரி..அப்படி மாறினால் அது உண்மையான பாசம் என்று இல்லை .. :evil: அப்படி அது மாறும் போது..அது உண்மைக்காதல் இல்லை என்பதைக்காட்டி விடுகிறது.. அது ஏன் ஆண்கள் தான் கூட???????? hock: பெண்களும் செய்கிறார்கள்..(நாடகத்தில பார்த்திருக்கிறேன்) - sakthy - 09-17-2005 உண்மைதான் சமிபத்தில் கூட தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்தது.ஒரு கல்லூரி மணவனே சக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொன்றான். - ப்ரியசகி - 09-17-2005 sakthy Wrote:உண்மைதான் சமிபத்தில் கூட தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்தது.ஒரு கல்லூரி மணவனே சக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொன்றான். ம்... :evil: :evil: :evil: :evil: :evil: நான் சன் டீவியில் பார்த்தேன்..ரொம்ப பாவமான காரியம்..உருப்படாத ஜென்மங்கள்.. :evil: :evil: எப்படி...ஆசையாய் காதலித்த ஒருவரை அப்படி செய்வதற்கு மனம் வருதோ தெரியல..கொஞ்ச நேரத்துக்குள்ள..கோவம்..எல்லாம் கண்ணை மறைச்சுடுது.. :evil: - sakthy - 09-17-2005 கோபம் ஒரு மனிதனை முட்டளாக்குகிறது அர்த்தம் தெரியாமல் கொட்டும் வார்த்தைகள் பின் யோசிக்கையில் ரணமாய் வலிக்கிறது. கோபத்தால் ஒரு மனிதன் மிருகமாகிறான் -அந்த நொடிகளில்.......... முடிந்த வரை உன்னை கட்டுப்படுத்து -இல்லை இடத்தை விட்டு விலகிவிடு -இது என் சுய அனுபவத்தில் கண்ட உண்மை - ப்ரியசகி - 09-17-2005 sakthy Wrote:கோபம் ம்..அது சரி..சக்தி..ஏன் உங்களுக்கு கோவம் கூட வருமா? :roll: - sakthy - 09-17-2005 மிருகங்களுக்கு கூட கோவம் வருமே....... நான் நிஜ மிருகங்களை சொன்னென் பிரியசகி.நானும் மனித பிறவி தானே ,மகாத்மா இல்லையே.பல தடவை கோவப்பட்டிருக்கிறேன் சில மனிதர்களை பார்க்கையில் - ப்ரியசகி - 09-17-2005 sakthy Wrote:மிருகங்களுக்கு கூட கோவம் வருமே....... நான் நிஜ மிருகங்களை சொன்னென் பிரியசகி.நானும் மனித பிறவி தானே ,மகாத்மா இல்லையே.பல தடவை கோவப்பட்டிருக்கிறேன் சில மனிதர்களை பார்க்கையில் ம்ம் நானும் தான்...அதுவும் தற்போதில்..அடிக்கடி டென்சன் வேற ஆயிடுவேன்..என்ன செய்வதென்றே தெரியல..சில பேர் என்னை டென்சன் பண்ண என்றே அலயுறாங்க..சோ, என்ன செய்ய :evil: - Senthamarai - 09-17-2005 இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் கோபம் பற்றி கதைப்பதால். கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பது சரியா? ஆறுவது சினம் - ஒளவையார் ரௌத்திரம் பழகு- பாரதியார் இவ்விரண்டையும் பார்க்கும் பொழுது நாம் எதற்கு எதற்கு கோபப்படாலாம் என்று நாம் அந்த சந்தர்ப்பத்தில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். - ப்ரியசகி - 09-17-2005 ம்ம் அது சரி..கோவப்படுவது தப்பில்லை த்தானே..மனிசர் என்றால் கோவம் வரணும்..நாய்க்கே வருது...நமக்கு வரப்படாதா என்ன? வரலாம்..ஆனால் நீங்கள் சொன்னது போல..சந்தர்ப்பத்தில் தான் இருக்கிறது.. அதுசரி..ரௌத்திரம் என்றால் என்ன? - Senthamarai - 09-17-2005 சினம் - கோபம் ரௌத்திரம் - கோபம் - Birundan - 09-18-2005 முரன்பாடு அல்லது காதல் மான்கள் வலைவிரிக்க வேடன் அகப்படுகிறான் எங்கேயோ படித்தது. :wink: |