Yarl Forum
அட இந்த கூத்த படிங்க.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அட இந்த கூத்த படிங்க.. (/showthread.php?tid=3295)



அட இந்த கூத்த படிங்க.. - SUNDHAL - 09-15-2005

இங்கிலாந்துக்கு ஐரோப்பிய கோர்ட்டு கண்டனம்

திருமணம் தொடர்பான மனித உரிமை ஒப்பந்தத்தை மீறியதாக இங்கிலாந்து மீது ஐரோப்பிய கோர்ட்டு குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டில் இங்கிலாந்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஒருவர் பின்னர் தனது மருமகளுடன் சேர்ந்து வாழ்கிறார். மருமகளும், இந்த நபரின் மகனை விவாகரத்து செய்தவர்தான். மாமனார். அந்த பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.

தனது மகனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்ணை அதாவது மருமகளை ஒருவர் (மாமனார்) திருமணம் செய்து கொள்வதை ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இங்கிலாந்து நாட்டுக்காரர் தனது மருமகளை திருமணம் செய்து கொண்ட பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மறுமணம் தொடர்பான ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தை இங்கிலாந்து மீறி விட்டதாக கூறி கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
Thnaks:Thinathanthi...


- RaMa - 09-15-2005

கடவுளே எங்கைபோய் முட்டிக் கொள்வது


- SUNDHAL - 09-15-2005

ஏன் பக்கத்தில சுவர் இல்லையா?


- Senthamarai - 09-15-2005

தயவு செய்து கணனித்திரையில் முட்டி விடாதீர்கள்.
சுவரில் முட்டிக் கொள்ளுங்கள்


- RaMa - 09-15-2005

சுவரில் மூட்டி விட்டு யாராம் இன்சுரன்ஸ் காசு கட்டுறதாம்?


- SUNDHAL - 09-15-2005

அப்ப முட்டாதிங்க...


- கீதா - 09-15-2005

<span style='font-size:25pt;line-height:100%'>அடகடவுளே நாங்கள் ஏன் சண்டைக்குப் போவான் அவர்கள் விரும்பின மாதிரி சொய்யட்டும் வாழ்த்துக்கள் சொல்லி விடுங்கள்</span> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-15-2005

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் தாயின்முதல்தாரத்து கணவனை அதாவது தந்தையின் முதல்தாரத்து மகனை எப்படி கூப்பிடும்? அண்ணா? அல்லது பெரியப்பா?

இதனால்தான் எமது கலாச்சாரம் மகனின் மனைவி மகளுக்கு சமன் என்று சொல்லுகுதோ(மரு-மகள்)?