![]() |
|
70 வயது தம்பியை டிவட்ழய 78 வயது அண்ணன - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 70 வயது தம்பியை டிவட்ழய 78 வயது அண்ணன (/showthread.php?tid=3292) |
70 வயது தம்பியை டிவட்ழய 78 வயது அண்ணன - SUNDHAL - 09-15-2005 அருப்புக்கோட்டையில், தள்ளா டும் வயதிலும் சொத்து தகராறில் தம்பியை வெட்டித் தள்ளிய 78வயது முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் வசிப்பவர் பரமசிவம் (70). இவரது அண்ணன் பிச்சை (78). இவர் வசிக்கும் வீட்டில் தனக்கு பங்கு இருப்பதாக பாக பிரிவினை கேட்டு பரமசிவம் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நடந்துவருகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று பரமசிவம், அருப்புக்கோட்டை பைபாசில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் அருகே நடந்து சென்ற போது பிச்சை வழிமறித்து சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பிச்சை அரிவாளால் தம்பி பரமசிவத்தை வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அருப்புக்கோட்டை டவுண் போலீசார் வழக்கு பதிந்து பிச்சையை தேடி வருகின்றனர். Thanks inakaran...
- RaMa - 09-15-2005 ம்ம் இதுக்கெல்லாம் போய் தலையை மோதிக் கொள்ளலாமா? - SUNDHAL - 09-15-2005 78 வயசுல எவ்ளவு வீரதீர செயல சென்ஞ்சு இருக்கிறார் நீங்க வேற... |