Yarl Forum
பிரிந்துவிட்ட நண்பனுக்காய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிரிந்துவிட்ட நண்பனுக்காய் (/showthread.php?tid=3254)



பிரிந்துவிட்ட நண்பனுக்காய் - inthirajith - 09-19-2005

ஆண்டு பதினைந்துவயதா நம் நட்புக்கு
உன்மனைவி இறந்த கவலைக்கு ஆறுதலாக
வந்தநான் உன்வலியில் பங்கெடுத்த அந்த நினைவு
மனவானில் வட்டமிடுகிறது நண்பா அன்று
என்னுடன் இணைந்தது உன்மனம் உன் தப்பால்
என்னையும் என் உயிரையும் ஏன் உன்னையும்
பிரித்தது உன் மது மயக்கம் உனக்காக உன் நட்பை
தூயதாகநினைத்து வாதாடினேனே அப்போ
தான் இடியாய் வந்தது அவள் அனுப்பியமடல்
நம்பிக்கையின் ஆணிவேரை அறுத்து விட்டாயே
நண்பனே அது உண்மையாக இருக்ககூடாதா
தாயகம் போனநண்பனே நலமுடன் வாழ
என்பிரார்தனைகள் என்றும் உண்டு

நீ சொன்னவார்த்தைகள் நெஞ்சை அறுக்கிறது
நம்பாதே உன்னை ஏமாற்றுவார்கள்
உன்முகத்தில் விழிக்க தெம்பில்லை என்சோகம் பார்க்கவும்
என்நம்பிகை வழவாழ்த்துகள் சொன்னாய் தோழா
என்றும் உன்வார்தைகளை நம்பினேன் இதை நம்ப
மனம் மறுக்கிறதே அது நிஜம் ஆகாது தோழா
என்னில் அவளும் அவளில் நானும் வாழ்கிறோம் கண்ணை
இமை பிரிவதுண்டோ நண்பா நான் இருவரும் உன்னிடம்
வருவோம் அப்போ புரியும் அவள் தேவதை தான் என்று


- lollu Thamilichee - 09-19-2005

எப்படி எத்தனைதடவை வாசித்தாலும்
புரியுது இல்லை..!!
இது அல்லவா கவிதை :-)


- கீதா - 09-19-2005

நல்ல கவிதை அண்ணா நன்றி


- RaMa - 09-20-2005

நல்லாயிருக்கு