![]() |
|
ஜே.வி.பி ஹெல உறுமயவுக்கும் பொங்கு தமிழுக்கு அழைப்பு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜே.வி.பி ஹெல உறுமயவுக்கும் பொங்கு தமிழுக்கு அழைப்பு! (/showthread.php?tid=3210) |
ஜே.வி.பி ஹெல உறுமயவுக்கும் பொங்கு தமிழுக்கு அழைப்பு! - வினித் - 09-23-2005 ஜே.வி.பி ஹெல உறுமயவுக்கும் பொங்கு தமிழுக்கு அழைப்பு! யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடை பெறவுள்ள "பொங்கு தமிழ்' எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஜே.வி.பி,ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிக ளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சிகளுக்கான அழைப்பிதழ்களை பல்கலைக்கழகச் சமுகம் இரண்டு கட்சிகளின தும் முகவரியிட்டு அனுப்பியுள்ளது. "பொங்கு தமிழ்' எழுச்சி நிகழ்வு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையைச் சர்வதேசச் சமுகம் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரும் வகையில் பல்கலைக்கழகச் சமுகம் முன்னெடுக்கும் இந்த மாபெரும் எழுச்சி நிகழ்வில் இனவாதக் கட்சிகளின் பிரதிநிதிக ளும் கலந்துகொள்ளும் பட்சத்தில் அங்கு திர ளும் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளை அவர்களும் அறிந்து கொள்வர். அதற்காகவே,இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று பொங்கு தமிழ் ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரி வித்தார். இதேவேளை தமிழ்,முஸ்லிம்,சிங்கள அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறு வனங்கள்,இலங்கையில் உள்ள வெளிநாட் டுத் தூதரங்கள் என்பவற்றுக்கும் பொங்கு தமிழுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கி றது. - Mathan - 09-23-2005 தகவலுக்கு நன்றி வினித். செய்திகளுடன் அவை பெறப்பட்ட இடத்தையும் குறிப்பிட்டால் நல்லது தானே, - வினித் - 09-23-2005 http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1& நன்றி; www.lankasri.com |