![]() |
|
மனிதனும் மிருகமாகலாம் (உன்னால்) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மனிதனும் மிருகமாகலாம் (உன்னால்) (/showthread.php?tid=3120) |
மனிதனும் மிருகமாகலாம் (உன்னால்) - inthirajith - 09-28-2005 காலம் முச்சூடும் உன்னுடன் என்றாயே காலம் மட்டும் போனது உன் நிஜம் என்ன காதல் மாறியதோ இல்லை கனவாய் போனதோ காணும் போது எல்லாம் அத்தான் என்றாயே உயிர்வரை வலிக்கிறதே பிரியசகி ஏன் இந்தமௌனம் உன்னால் உறவுகள் இல்லாமல் தனிமரம் உறக்கம் இல்லா இரவுகள் உன்னை மட்டும் உபாசிக்கின்றதே உள்ளம் தவிப்பது புரியலையா? யாருமே இல்லாமல் வாழும் வாழும் என்நிலை யாருக்கு புரியும் உன்னை தவிர புரிந்த நீயே..... யாதுமாய் நின்றாயே யாரும் வேண்டாம் யான் இருப்பேன் என் மடிமீது அழு என்றாயே இப்போ மட்டும் என்னை தவிக்கவிட்டு நீ இரக்கமில்லா இரவுகளில் என்னை கொல்வது இருதிங்களுக்கு முன்னால் மரணம் என்னை இல்லாது செய்தால் இருக்காதே இந்தவலியெலாம் மனிதனும் புத்தனாகலாம் அரசனாய் இருந்தால் மனிதனும் மகாத்மா ஆகலாம் ஆபிரிக்கா போனால் மனிதனும் வீரனாகலாம் அடக்குமுறையை அழித்தால் மனிதன் நான் மட்டும் மிருகமாககூடாத உன் அலட்சியத்தால்.. - Mathan - 10-03-2005 கவிதைகள் நல்லா இருக்கின்றது இந்திரஜித். காதல் உங்களை பாதித்திருக்கின்றதா அல்லது காதலை ரசித்து எழுதுகின்றீர்களா? தொடர்ந்து எழுதுங்கள். - வெண்ணிலா - 10-04-2005 இந்திரஜித் நீங்கள் எழுதும் ஒவ்வொரு கவிதையிலும் காதலால் தோற்கடிக்கப்பட்ட நெஞ்சம் தெரிகிறதே. அவை உங்கள் சொந்தக் கவிதைகளா? அப்படியெனில் ...............
|