Yarl Forum
இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்! (/showthread.php?tid=3116)



இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்! - வினித் - 09-29-2005

சிங்கள இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்!
[வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புடன் கடந்த வாரம் ஆறு பேர் கொண்ட இக்குழுவை விமானம் மூலம் வி.ஆனந்தசங்கரி அழைத்து வந்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி. செயற்படுவது போல ஈ.என்.டி.எல்.எஃப் குழுவையும் செயற்பட வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர் தற்போது தீவகம் மற்றும் ஊர்காவற்துறைப் பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கையின் வடபகுதிக்கும் இடையில் உள்ள கடல்வழி தொடர்புகளை வேணுவதற்காகவும் இவர்களை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.</b>
www.puthinam.com


- MUGATHTHAR - 09-29-2005

இந்த செய்தியை வாசிக்கும் போது இன்னோரு தகவலும் உங்களுக்கு தரலாம் என நினைக்கிறன் இன்று பிற்பகல் மத்திய கிழக்கில் இருக்கும் எனது நண்பருடன் தொடர்பு கொண்டேன் அவர் கூறினார் அவர்களில் காம்பில் 14மாதங்களுக்கு முன்னம் வந்த மட்டகளப்பை சேர்ந்த (கருணா அணியில் பொறுப்பாளர்கள்) இருவருக்கு உடனடியாக பிள்ளைக்கு சுகமில்லை வரும்படி பக்ஸ் வந்திருக்கிறதாம் அது மட்டகளப்பிலிருந்து தான் அனுப்பப் பட்டிருக்கு இவர்கள் இந்த கிழமை போவதற்கு ஆயுத்தங்கள் செய்கிறார்களாம் திரும்பி வரமாட்டம் என பப்பிளிக்காகவே சொல்கிறார்களாம் அவர்களுக்கு விமானநிலையத்திலிருந்து போவதற்கு இராணுவ பாதுகாப்பு இருக்கும் என தான் கேள்விப்பட்டதாக எனது நண்பர் கூறினார் மேலும் இங்குள்ள மிகுதிப் பேரையும் (20--30) டிசம்பர் மாதம் வருவதிற்கு ரெடியாக இருக்;கும் படியும் கூறியுள்ளாராம் அவர்களின் எண்ணமெல்லாம் தேர்தலில் நிச்சயம் மகிந்தா தான் வருவர் வந்ததும் யுத்தம் ஆரம்பமாகும் தாங்கள் இயங்கத் தொடங்கப் போவதாக ஒரு செய்தியும் உள்ளது


- vasisutha - 09-30-2005

Confusedhock: Confusedhock: Confusedhock: