Yarl Forum
தன்மானத்தோடு வாழ்வது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தன்மானத்தோடு வாழ்வது (/showthread.php?tid=3099)



தன்மானத்தோடு வாழ்வது - iruvizhi - 09-30-2005

தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்காகப் போராடுவது பயங்கரவாதமெனில் அதற்காக நாம் பெருமைப்படுகிறோம் என்று யாழ் பொங்கு தமிழ் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்தார்.


தற்போது நடைபெற்று வரும் யாழ். பொங்கு தமிழ் நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எதிர்கொள்ளாத நிலையில்தான் இனவாத சிறிலங்கா அரசு, யுத்தம் வேண்டாம்-பேச்சு மேசைக்கு வருகிறோம் என்று வந்தது.

இப்போது அங்கே சிங்களப் பேரினவாதிகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு நிலமில்லையாம்.ஆயுதங்களைக் கீழ போட வேண்டுமாம். யுத்தத்துக்காகப் பேரினவாதிகள் அங்கே ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

ஆனால் இங்கே தமிழர் கூடியிருப்பது யுத்தத்துக்காக அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்களே...அவர்களை நோக்கிச் சொல்கிறோம்.

100 ஆண்டு காலமாக எங்களை ஒடுக்கியவர்கள் பயங்கரவாதிகளா? நாங்கள் பயங்கரவாதிகளா?

ஆலயங்களில் குண்டுவீசிக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா

மத வழிபாட்டுத் தலங்களை அழித்தது பயங்கரவாதம் இல்லையா?

செம்மணிப் புதைகுழிகளிலே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கை வேறாக கால் வேறாக கொன்று புதைத்தது பயங்கரவாதம் இல்லையா?

இதை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றால் நாங்கள் பயங்கரவாதிகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம்.

எவனுக்கும் அடிபணியாமல் தன்மானத்தோடு வாழ்வது பயங்கரவாதம் எனில் பயங்கரவாதியாகவே இருந்துவிட்டுப் போகிறோம்.

தொல்லை கொடுப்பவை கிள்ளி எறிவது பயங்கரவாதமாம்.

எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன், தமிழர் தாயகத்திற்கு மட்டுமேல்.. இலங்கைக்கு மட்டுமல்ல. உலகத் தமிழர்களின் தலைவராக திகழ்கிறார்.

தமிழர்களின் இழிவுநிலைக்கு காரணமே இந்த ஐரோப்பிய சமூகம்தான். தமிழர்களையும் சிங்களவர்களையும் இணைத்தது ஐரோப்பிய சமூகம். கூலிகளாக்கி எங்களை உரிமைக்காகப் போராடவிட்டதும் ஐரோப்பிய சமூகம்தான். எமது இலட்சியத்தை நாம் வென்றெடுப்போம் என்றார் அவ


நன்றி புதினம்


தன்மானத்தோடு வாழ்வது பயங்கரவாதமெனில் பெருமைப்படுகிறோம் - வினித் - 09-30-2005

<b>நீக்கப்பட்டுள்ளது - இராவணன்.</b>


- vasisutha - 09-30-2005

ரெண்டுபேரும் ஒரே செய்தியை போட்டிருக்கிறீர்கள்? :?: Idea


- MEERA - 09-30-2005

நேரத்தை சற்று கவனியுங்கள்.....