![]() |
|
கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? (/showthread.php?tid=3014) |
கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? - தூயவன் - 10-06-2005 கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? இந்த சந்தேகம் எனக்கு நெடுநாளாக உண்டு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். - msuresh - 10-06-2005 <b>கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது. உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும்இ நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது. ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது. இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும். </b>[/b] - Thala - 10-06-2005 அட இவ்வளவெல்லாம் இருக்கா?? நான் வேற மாதிரியெல்லே கேள்விப்பட்டன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கரிகாலன் - 10-06-2005 Thala Wrote:அட இவ்வளவெல்லாம் இருக்கா?? நான் வேற மாதிரியெல்லே கேள்விப்பட்டன்.... <!--emo& என்ன மாதிரி தல :!: - வெண்ணிலா - 10-06-2005 விளக்கத்துக்கு நன்றிங்க. - தூயா - 10-06-2005 விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி. - தூயவன் - 10-06-2005 msuresh Wrote:<b>தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.எத்தனை பேருக்கு இவ் உண்மை தெரிந்து செயகின்றனர் Re: கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? - கீதா - 10-22-2005 thuyawan Wrote:கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்? ஏன் நாங்கள் கடவுளை வணங்குகின்றோம் எல்லாம் ஒரு நம்பிக்கை தான் ? அதைமாதிரித் தான் தேங்காய் உடைக்கின்றோம் இல்லையா :roll: - sathiri - 10-22-2005 ஓய் தூயவன் உம்மடைவீட்டு வாசலிலை உடைக்கேலாது அதுதான் கோயில்லை உடைக்கினம் - RaMa - 10-23-2005 sathiri Wrote:ஓய் தூயவன் உம்மடைவீட்டு வாசலிலை உடைக்கேலாது அதுதான் கோயில்லை உடைக்கினம் அதோடை உங்கடை தலையில எல்லாத் தேங்காயும் உடைக்கேலது... அது தான் கோயில் கல்லில் உடைக்கின்றவர்கள்....... அது தான் விளக்கம் காணுமோ??????????? - ப்ரியசகி - 10-23-2005 RaMa Wrote:sathiri Wrote:ஓய் தூயவன் உம்மடைவீட்டு வாசலிலை உடைக்கேலாது அதுதான் கோயில்லை உடைக்கினம் ம்ம்...இதிலும் விட..சந்தேகத்தோடயே இருந்திருக்கலாம்..தூயவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - tamilini - 10-23-2005 தேங்கை உடைப்பதற்கு இன்னொரு காரணம் சிதறு தேங்காய் ஆக தேங்காய் மாறும் போது அல்லது அங்கு உடைக்கப்படும் தேங்காயை காக்கா குருவி மைனா புறா என்று அந்த கோவில் சூழலில் வாழ்கின்ற உயிரனிங்களிற்கு உணவாக போகும் என்பதாலும் என்றார்கள். :wink: - Mathan - 10-23-2005 அப்படியும் இருக்காலாம். ஆனால் பெரும்பாலும் கோயில்களில் உடைக்கப்படும் தேங்காய்களை சேகரித்து எண்ணை தயாரித்து அதனை கோயில்களில் விளக்கேற்ற உபயோகிக்கின்றார்கள். - narathar - 10-23-2005 தகவலுக்கு நன்றி. - MUGATHTHAR - 10-24-2005 tamilini Wrote:தேங்கை உடைப்பதற்கு இன்னொரு காரணம் சிதறு தேங்காய் ஆக தேங்காய் மாறும் போது அல்லது அங்கு உடைக்கப்படும் தேங்காயை காக்கா குருவி மைனா புறா என்று அந்த கோவில் சூழலில் வாழ்கின்ற உயிரனிங்களிற்கு உணவாக போகும் என்பதாலும் என்றார்கள். :wink: எங்களைப் போல தேங்காய் பொறுக்கித் தின்னுற ஆட்களை எந்த லிஸ்டிலை சேக்கிறது விட்டுட்டியள் - RaMa - 10-24-2005 MUGATHTHAR Wrote:அங்கிள் நீங்கள் தேங்காய் பொறுக்கி சாப்பிடுவிர்களா.? ஆனால் நீங்கள் குடிக்கும் நீருக்கும் சிதறு தேங்காய்க்கு ஒரு வித தொடர்பும் இல்லை எப்படி அங்கிள்???tamilini Wrote:தேங்கை உடைப்பதற்கு இன்னொரு காரணம் சிதறு தேங்காய் ஆக தேங்காய் மாறும் போது அல்லது அங்கு உடைக்கப்படும் தேங்காயை காக்கா குருவி மைனா புறா என்று அந்த கோவில் சூழலில் வாழ்கின்ற உயிரனிங்களிற்கு உணவாக போகும் என்பதாலும் என்றார்கள். :wink: - tamilini - 10-24-2005 MUGATHTHAR Wrote:tamilini Wrote:தேங்கை உடைப்பதற்கு இன்னொரு காரணம் சிதறு தேங்காய் ஆக தேங்காய் மாறும் போது அல்லது அங்கு உடைக்கப்படும் தேங்காயை காக்கா குருவி மைனா புறா என்று அந்த கோவில் சூழலில் வாழ்கின்ற உயிரனிங்களிற்கு உணவாக போகும் என்பதாலும் என்றார்கள். :wink: அது தான் அந்த சு}ழலில் வாழ்கின்ற உயிரனங்கள் என்டு சொல்லியிருக்கிறன். (நீங்கள் உயிரனத்தில அடங்கலையா என்ன) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-24-2005 tamilina Wrote:அது தான் அந்த சு}ழலில் வாழ்கின்ற உயிரனங்கள் என்டு சொல்லியிருக்கிறன். (நீங்கள் உயிரனத்தில அடங்கலையா என்ன) உங்களிலிலும் பார்க்க பொண்ணம்மா தேவலையப்பா... - தூயவன் - 10-24-2005 MUGATHTHAR Wrote:புரிந்தால் சரிtamilina Wrote:அது தான் அந்த சு}ழலில் வாழ்கின்ற உயிரனங்கள் என்டு சொல்லியிருக்கிறன். (நீங்கள் உயிரனத்தில அடங்கலையா என்ன) |