Yarl Forum
வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு (/showthread.php?tid=3010)



வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு - வெண்ணிலா - 10-06-2005

கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் உள்ள தினமுரசு பத்திரிகை அலுவலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளது.


பத்திரிகை அலுவலகத்திற்கு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர் ஏ.ஜெயராஜ் என்பவர் பயன்படுத்தும் இந்து கலாச்சார அமைச்சின் வாகனத்தில் நேரம் குறித்து வைக்கப்பட்ட குண்டே வெடித்துள்ளது.

குண்டு வைக்கப்பட்டிருந்த வான் சின்னாபின்னமாகச் வெடித்துச் சிதைந்து போயுள்ளது.

குண்டுவெடிப்பில் ஈ.பி.டி.பி. உறுப்பினரான விஜயகாந்தன் என்பவர் காயமடைந்துள்ளார். தினமுரசு பத்திரிகை அலுவலகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை வேளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதாகவும் அறியவருகின்றது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியை காவல்துறையினரும் இராணுவத்தினரும் சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


நன்றி புதினம்


- தூயா - 10-06-2005

அப்பகுதியில் வசிக்கும் அப்பாவி தமிழர்கள் தான் பாவம்