Yarl Forum
யாழில் கோவில் புூசகர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழில் கோவில் புூசகர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=2998)



யாழில் கோவில் புூசகர் சுட்டுக்கொலை - mayooran - 10-07-2005

யாழ்ப்பாணத்தில் யாழ். பிரதானவீதியும் கோவில் வீதியும் இணையும்; யாழ் ஆயர் இல்லத்திற்கு அருகில் இன்று 9-30 அளவில் இந்து மத புூசகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 40 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி செந்தில் குமரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் ரீ. மகேஸ்வரனின் யாழ் அலுவலகத்தில் கடமையாற்றியுள்ளார். [b]பின்னர் தேசவிரோதி டக்ளஸ் தேவானந்தாவின்அமைச்சின் கீழும் சிறிது காலம் பணியாற்றியவர் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை யாழ் காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
Sankathi