![]() |
|
போராட்டத்தில் பாடகனும் நடிகனும். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போராட்டத்தில் பாடகனும் நடிகனும். (/showthread.php?tid=2985) |
போராட்டத்தில் பாடகனும் நடிகனும். - கோமதி - 10-08-2005 இன்று அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய மேஜர் சிட்டு 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் உயிர்ப்பூ படத்தில் இவர் பாடிய சின்னச் சின்னக் கண்ணில் என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும். அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது. <img src='http://www.aruchuna.com/Martyr/karumpulli/photos/photo47.jpg' border='0' alt='user posted image'> சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான். இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் உயிர்ப்பூ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான். போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. <b>நகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்</b> படஉதவி:- அருச்சுனா இணையத்தளம். ------------------------------- இப்பதிவை எழுதியவர்: வசந்தன் மூலச்சுட்டி: http://vasanthanin.blogspot.com/2005/08/blog-post.html இணைப்புகளை திருத்தியுள்ளேன் - மதன் - கோமதி - 10-08-2005 மேலே படத்தின் சுட்டி மட்டும் சரியாக வந்துள்ளது. பாடலின் சுட்டியும் பதிவின் சுட்டியும் சரிவர இணைக்கப்படவில்லை. - Mathan - 10-08-2005 கோமதி, முதலாவது பாடலின் இணைப்பு வசந்தனின் பதிவில் வேலை செய்யவில்லை, அதுதவிர மற்ற பாடல் இணைப்பையும் பதிவு இணைப்பையும் சரி செய்துள்ளேன். - கோமதி - 10-08-2005 நன்றி மதன். சுட்டிகளைத் திருத்தியமைக்கு. - RaMa - 10-08-2005 நன்றி கோமதி உங்கள் தகவலுக்கு... ஆனால் மேஐர் சிட்டுவின் படமும் போட்டிருந்தால் நல்லாயிருக்கும். யாரிடம் இருந்தால் போடுங்களேன் |