Yarl Forum
நல்லூரில் சம்பவம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நல்லூரில் சம்பவம் (/showthread.php?tid=298)



நல்லூரில் சம்பவம் - Vaanampaadi - 04-09-2006

<span style='color:blue'><b>நல்லூரில் ஆறு வீடுகளில் கொள்ளை
வாள்களுடன் வந்த கும்பல் அட்டகாசம்</b>
<b>[size=18]பணம், நகை தர மறுத்தோருக்கு வாள்வெட்டு</b> </span>

நல்லூரில் சட்டநாதர் வீதி, சங்கிலியன் வீதிப்பகுதிகளில் நேற்று அதிகாலை கொள் ளைக்கோஷ்டி ஒன்று பல வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்ததுடன் தங்க நகை, பணம் மற்றும் பொருள்களையும் கொள்ளை யிட்டிருக்கின்றது.
முகத்தைக் கறுப்புத்துணியால் மறைத் துக் கட்டிக்கொண்டு வாள்கள், கிறிஸ் கத்திக ளுடன் காணப்பட்ட கொள்ளையர்கள் வீடு களை அடித்து நொறுக்கி உள்நுழைந்து அங் கிருந்தவர்களைப் பயமுறுத்தி, மிரட்டிகொள் ளையில் ஈடுபட்டிருக்கின்றனர். சுமார் இரு பது இருபத்தைதந்து பேர் அடங்கிய கொள் ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு பெரும் அடாவடித்தனமான செயலில் ஈடுபட்டிருப் பது தெரியவந்துள்ளது.
நேற்று அதிகாலை 2.30 மணிக்குப் பின் னர் நல்லூர் சட்டநாதர் வீதியில் அருகருகே அமைந்துள்ள இரண்டு வீடுகளில் முதலில் கொள்ளையர்கள் நுழைந்தனர். முதலாவது வீட்டின் கதவுகளை அடித்துப் பெயர்த்துத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கொள்ளை யர்கள் வீட்டில் இருந்த மூவரையும் கத்தி முனையில் மிரட்டினர். தொலைபேசி இணைப் பைத் துண்டித்தனர். வீட்டில் இருந்த கைத் தொலை பேசியையும் அபகரித்துக் கொண் டனர். அறைகளில் தேடுதல் நடத்தி பொருள் களைத் அபகரித்தனர். பெண்ணெருவர் அணிந் திருந்த தங்க நகைகளையும் பறித்தெடுத்த னர். வீட்டில் இருந்த இளைஞனை வாளால் வெட்டவும் முயற்சித்தனர். பின்னர் அங்கி ருந்து வெளியேறி பக்கத்து வீட்டின் ஓடு களைப் பிரித்து, கூரை சீலிங்குகளைத் தகர் துக்கொண்டு உள்ளே இறங்கிய கொள்ளை யர்கள் அந்த வீட்டில் இருந்தோரைப் பய முறுத்தி தங்க நகைகளையும், பணத்தையும் கேட்டனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த போது குடும்பஸ்தரை வாளால் வெட்டிக் காயப் படுத்தினர்.
பின்னர் அங்கிருந்து சுமார் 16 ஆயிரம் ரூபா பணம், கைத்தொலைபேசி, 5 பவுண் நகைகளைக் கொள்ளையர்கள் அபகரித்தனர். வாள்வெட்டுக்கு இலக்கான ரமேஸ் என்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
வீதிக்கு வந்தோர் விரட்டப்பட்டனர்
கொள்ளையர்கள் வீடுகளின் கதவுகளை அடித்துத் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்த அயலவர்கள் சிலர் வீதிக்குவர முற்பட்ட போது வீதிகளில் வாள்கள், பொல்லுகளு டன் தயார் நிலையில் நின்றிருந்த கொள்ளை யர்கள் அவர்களை மிரட்டி வெளியே வர விடாது தடுத்துவிட்டனர். சட்டநாதர் வீதியில் கொன்றலடி வைரவர் கோயிலுக்கு அருகே உள்ள அந்தணர் ஒருவரின் வீட்டினுள்ளும் கொள்ளையர்கள் நுழைந்தனர். அங்கு சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டனர். பின்னர் சங்கிலியன் வீதியில் உள்ள மூன்று வீடுகளினுள்ளும் கொள் ளையர்கள் நுழைந்து அடித்து நொறுக்கி அட்ட காசம் புரிந்தனர். கையடக்கத் தொலைபேசி, பணம், தங்க நகைகளைக் கொள்ளையிட்ட னர்.
ஒரு பகுதியில் பல மணி நேரம் தங்கி நின்று கொள்ளைக் கும்பல் நடத்திய இந்தத் துணிகரமான கொள்ளைச் சம்பவங்கள் நல் லூர் பகுதியில் பெரும் பரபரப்பபையும் மக் கள் மத்தியில் பீதியையும் உருவாக்கி உள்ளது.
இராணுவம் மற்றும் பொலீஸ் காவல் நிறைந்த வீதிகளில் கொள்ளையர்கள் நீண்டநேரம் தங்கி நின்று அட்டகாசம் புரிந் துள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பாய் பொலீஸார் விசாரணை
இதேவேளை
கொள்ளைச் சம்வங்கள் இடம்பெற்ற ஆறு வீடுகளுக்கும் சென்ற கோப்பாய் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அங்கு விசாரணை களை மேற்கொண்டார். கைரேகை அடையா ளங்களும் தடயங்களும் சேகரிக்கப்பட்டன.
பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை அடுத்து இவற்றைத் தடுப்பதற்காக பொலீ ஸார் இரவு ரோந்துப் பணியைத் தீவிரமாக்க உள்ளனர் என்றும்
இரவு வேளைகளில் அநாவசியமாக வீதி களில் நடமாடுவதைப் பொதுமக்கள் தவிர்த் துக்கொள்ள வேண்டும் என்றும்
கோப்பாய்ப் பொலீஸ் நிலையப் பொறுப் பதிகாரி தெரிவித்தார்.


http://www.uthayan.com/pages/news/today/03.htm


ahh; fs;ssh; - uoorkkruvi - 04-09-2006

நல்லூரடியிலை கொள்ளைக்காரர்கள் தங்கடை வீட்டிலை
நிண்டு தங்கடை சாமானை எடுக்கிற மாதிரி துணிவா
கொள்ளை அடிச்சுக்கொண்டு போயிருக்கிறாங்கள்.
முழத்துக்கொரு ஆமிச்சென்றியும் அடிக்கொரு பொலிஸ்
நிலையமும் இருக்கிற இடத்திலை நடந்திருக்குது. அப்ப
நீங்கள் யோசியுங்கோவன் யார் செய்திருப்பினம் என்டு.
இதுவும் ஒரு ஒட்டுக்குழு முகமூடிதான்.

எங்கடை பெடியள் வெறுங்கையோடு அங்கை நிக்கேக்கையே
உந்ததக் கள்ளரெல்லாம் சுருட்டிக்கொண்டு கிடந்தவங்கள்
இப்ப தொடங்கீற்றாங்கள்.

பொறுங்கடா பொறுங்கோ எல்லாத்துக்கும் சண்டை தொடங்கட்டும்


- SANKILIYAN - 04-10-2006

என்ன ஊர் குருவி சண்டையா நீரே தொடங்குவிர் போல உத்தக்களவுகுளுக்கு யாழ் மக்கள் தான் விழிப்ப இருக்கா வேணும் பழையா பாடி விழிப்பு குழுக்களை உருவாக்க வேண்டும் இதற்கு இளம் பருதி தேவை இல்லை எற்கனவே அந்தக்கட்டமைப்பு இருக்கு தனே பிற என்ன?
பழையா பாடி விளசா வேண்டியாதுதனே?