Yarl Forum
காதலனுக்காக உயிர்தியாகம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதலனுக்காக உயிர்தியாகம்... (/showthread.php?tid=2976)



காதலனுக்காக உயிர்தியாகம்... - SUNDHAL - 10-08-2005

டெல்லி பிதாம்புராவை சேர்ந்தவர் ராவ்பீம்சிங் இவரது மகள் நீருசிங் (வயது 23). அங்குள்ள ஒரு கல்லூரியில் எம்.பில் படித்து வந்தார். அவருக்கும் கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்த சரன்ஜித் (26) என்ற வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது. இருவரும் 6 வருடங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு ராவ்பீம்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று அவர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சரன்ஜித் சிங்கை தேடி சென்றார். அவருடன் வாக்குவாதம் செய்தார். இதை மகள் நீருசிங் எதிர்த்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ராவ்பீம்சிங் துப்பாக்கியை எடுத்து சரன்ஜித்தை நோக்கி சுட்டார்.

உடனே சினிமா சம்பவம் போல நீருசிங் காதலரின் உயிரை காப்பாற்றுவதற்காக குறுக்கே பாய்ந்தார். துப்பாக்கி குண்டுகள் அவர் தலையிலும், மார்பு பகுதியிலும் பாய்ந்தன. அந்த இடத்திலேயே நீருசிங் உயிர் இழந்தார். சரன்ஜித் சிங்கின் கைகளிலும் குண்டு பாய்ந்து இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அபாய கட்டத்தை அவர் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராவ்பீம்சிங்கை


- tamilini - 10-08-2005

அடடா வர வர உலகம் றொம்ப கெட்டுப்போச்சு. :?


- RaMa - 10-08-2005

ம்ம்ம் எல்லமே சினிமா போல் மாறிவிடும் போல் இருக்கு