![]() |
|
வெற்றியை பெற்றுத்தரும் விஜயதசமி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வெற்றியை பெற்றுத்தரும் விஜயதசமி! (/showthread.php?tid=2969) |
- SUNDHAL - 10-09-2005 வேதங்களில் முக்கியமாக போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவுஇ ஞானம்இ தேஜஸ்இ வீரம்இ வெற்றி ஆகியவற்றை தருபவள். மதுரமான வாக்கைச் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும் "சுவாகா' என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதி வழிபாட்டால் இன்பம் ஏற்படும். சரஸ்வதி என்றால்... கலைமகளின் மறுபெயர் சரஸ்வதி. "சரஸ்' என்றால் "பொய்கை' என்பது பொருள். "வதி' என்றால் "வாழ்பவள்' எனப்படும். சரஸ்வதி என்றால் "மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள்' என்பதும் பொருள். - SUNDHAL - 10-09-2005 நவராத்திரி என்பது பொம்மைக் கொலு வைத்து அழகுபடுத்த என நினைக்க வேண்டாம். கருணை உருவாக வணங்கப்படும் அன்னை தவமிருந்த காலம் அது. நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளோடு முடியவில்லை. 10ம் நாளான விஜயதசமியுடன் தான் விழா நிறைவு பெறுகிறது. எனவேஇ அது "தசரா' எனப்படுகிறது. விஜயதசமி என்றால் "வெற்றி தரும் 10ம் நாள்' என தமிழில் கூறலாம். போருக்கு புறப்பட்ட ராமன் ஒன்பது நாட்கள் சக்தி பூஜை செய்துஇ 10ம் நாளான விஜயதசமியன்று போர் துவங்கியதாக கூறப்படுகிறது. நவராத்திரியில் சரஸ்வதிக்கு முக்கியத்துவம் தரப்படினும் தேவிக்கு வேறு வடிவங்கள் உண்டு என சாக்த நுõல்கள் கூறுகின்றன. தேவி பாகவதம் நவராத்திரி காரணம் பற்றி தெளிவாக விளக்குகிறது. எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும்இ தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர். மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது. சிவபெருமான் சூலமும்இ திருமாள் சக்கரமும் தேவேந்திரன் வஜ்ராயுதமும்இ யமதர்மன் தண்டாயுதமும்இ வருணன் போர் சங்கும்இ அக்னி தேவனின் சத்தாயுதமும்இ வாயு பகவான் காற்றினும் விரைவாக அம்பு வீசும் ஆயுதமும் அளித்தனர். ஆயுதம் தரித்த தேவிக்கு பிரம்மன் ஜபமாலையும்இ பாற்கடல் துõய ஆடைகளும்இ தெய்வசிற்பி அணிகலன்களும்இ சமுத்திர ராஜா பூமாலைகளும் இமயமலை சிம்மவாகனமும் தந்தனர். சர்வாலங்கரியாக அன்னை போருக்கு சித்தமானாள். அதையறிந்த மகிஷன் வெறிகொண்ட எருமையாய் தேவியை முட்டித் தள்ள முயன்றான். ஆனால்இ தேவியின் சக்தி முன்பு அவனது பலம் செல்லுபடியாகவில்லை. எருமை முகத்திலிருந்து பாதி வெளிவந்த நிலையில் மகிஷனை தேவி வதம் செய்துஇ "மகிஷாசுரமர்த்தினியாக' மாறினாள். மகிஷனை அழித்த தேவி விரதம் இருந்த காலம் நவராத்திரி. ஒன்பதாவது நாள் மகாநவமி. வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது. எனவேஇ அதை ஆயுத பூஜை என்கிறோம். அசுரனை வெற்றிக் கொண்ட நாள் விஜயதசமி. மகிஷாசுரன் போன்ற அசுர கணங்கள்இ இன்னும் உலகில் லஞ்சம்இ ஊழல் போன்ற வடிவங்களில் உள்ளன. அவற்றை அகற்றி அமைதியான வாழ்வு தர நவராத்திரி காலத்தில் தேவியை துதிப்போம்! வெற்றியை பெற்றுத்தரும் விஜயதசமி! - aathipan - 10-09-2005 வெற்றியை பெற்றுத்தரும் விஜயதசமி! நவராத்திரி என்பது பொம்மைக் கொலு வைத்து அழகுபடுத்த என நினைக்க வேண்டாம். கருணை உருவாக வணங்கப்படும் அன்னை தவமிருந்த காலம் அது. நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளோடு முடியவில்லை. 10ம் நாளான விஜயதசமியுடன் தான் விழா நிறைவு பெறுகிறது. எனவே, அது "தசரா' எனப்படுகிறது. விஜயதசமி என்றால் "வெற்றி தரும் 10ம் நாள்' என தமிழில் கூறலாம். போருக்கு புறப்பட்ட ராமன் ஒன்பது நாட்கள் சக்தி பூஜை செய்து, 10ம் நாளான விஜயதசமியன்று போர் துவங்கியதாக கூறப்படுகிறது. நவராத்திரியில் சரஸ்வதிக்கு முக்கியத்துவம் தரப்படினும் தேவிக்கு வேறு வடிவங்கள் உண்டு என சாக்த நுõல்கள் கூறுகின்றன. தேவி பாகவதம் நவராத்திரி காரணம் பற்றி தெளிவாக விளக்குகிறது. எருமை உருவம் கொண்ட அசுரன் மகிஷன். அவனது தொல்லை தேவலோகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவனது மிருகத்தன்மை கண்டு மும்மூர்த்திகளும் அஞ்சினர். தேவலோக தலைமைப் பதவிக்கு குறி வைத்து அசுரகுல அரசன் மகிஷன் போரிட்டான். மிருகபல சேனையிடம் தேவர்படை தோல்வியுற்றது. தோல்வியடைந்த இந்திரனும், தேவாதி தேவர்களும் பிரம்மனிடம் முறையிட்டனர். அவர் திருமாலிடம் கூட்டிச் சென்றார். அனைவரும் சிவபெருமானை சந்தித்தனர். மகிஷனின் கொடுமைகளை மும்மூர்த்திகளிடம் விளக்கினர். தேவர்கள் கொடுமைகளை பற்றி கேட்ட சிவபெருமானுக்கு கோபம் பொங்கியது. சாந்த ஸ்வரூபியான மாலவனுக்கும் மகிஷனின் கொடுமைகள் கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்து கோபாவேசமாக காணப்பட்ட இரு மூர்த்திகளுடன் பிரம்மனும் சேர்ந்து நின்றார். அந்த கோபக் கனல்களும் சாதுக்களின் வயிற்றிலிருந்து புறப்பட்ட தீபமும் ஜோதிவடிவாய் இணைந்து ஒன்றுபட்டது. அனைத்துமாக தேவியாக உருவம் பெற்றது. சிவபெருமான் சூலமும், திருமாள் சக்கரமும் தேவேந்திரன் வஜ்ராயுதமும், யமதர்மன் தண்டாயுதமும், வருணன் போர் சங்கும், அக்னி தேவனின் சத்தாயுதமும், வாயு பகவான் காற்றினும் விரைவாக அம்பு வீசும் ஆயுதமும் அளித்தனர். ஆயுதம் தரித்த தேவிக்கு பிரம்மன் ஜபமாலையும், பாற்கடல் துõய ஆடைகளும், தெய்வசிற்பி அணிகலன்களும், சமுத்திர ராஜா பூமாலைகளும் இமயமலை சிம்மவாகனமும் தந்தனர். சர்வாலங்கரியாக அன்னை போருக்கு சித்தமானாள். அதையறிந்த மகிஷன் வெறிகொண்ட எருமையாய் தேவியை முட்டித் தள்ள முயன்றான். ஆனால், தேவியின் சக்தி முன்பு அவனது பலம் செல்லுபடியாகவில்லை. எருமை முகத்திலிருந்து பாதி வெளிவந்த நிலையில் மகிஷனை தேவி வதம் செய்து, "மகிஷாசுரமர்த்தினியாக' மாறினாள். மகிஷனை அழித்த தேவி விரதம் இருந்த காலம் நவராத்திரி. ஒன்பதாவது நாள் மகாநவமி. வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது. எனவே, அதை ஆயுத பூஜை என்கிறோம். அசுரனை வெற்றிக் கொண்ட நாள் விஜயதசமி. மகிஷாசுரன் போன்ற அசுர கணங்கள், இன்னும் உலகில் லஞ்சம், ஊழல் போன்ற வடிவங்களில் உள்ளன. அவற்றை அகற்றி அமைதியான வாழ்வு தர நவராத்திரி காலத்தில் தேவியை துதிப்போம்! நன்றி தினமலர் - kuruvikal - 10-09-2005 சரி... தொலைஞ்சுது... விஜய தசமி வெற்றி தருகுதோ இல்லையோ... இதைப் பார்த்தா களத்தில பார்ப்பர்ணிய கலை வந்திடும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-09-2005 இதுவே பசனாப்போச்சு களத்தில. Quote:சரி... தொலைஞ்சுது... விஜய தசமி வெற்றி தருகுதோ இல்லையோ... இதைப் பார்த்தா களத்தில பார்ப்பர்ணிய கலை வந்திடும்..!:wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 10-09-2005 tamilini Wrote:இதுவே பசனாப்போச்சு களத்தில.சரியாக சொன்னியள் அக்கா.Quote:சரி... தொலைஞ்சுது... விஜய தசமி வெற்றி தருகுதோ இல்லையோ... இதைப் பார்த்தா களத்தில பார்ப்பர்ணிய கலை வந்திடும்..!:wink: <!--emo& |