![]() |
|
காலமெல்லாம் காபி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: காலமெல்லாம் காபி (/showthread.php?tid=2961) |
பிற செய்திகள் - SUNDHAL - 10-09-2005 நார்வே நாட்டுக்காரர்களை காபிக்கு அடிமை என்று சொல்லலாம். அவர்கள் தினமும் குறைந்த பட்சம் 7 வேளையாவது காபி குடித்து விடுவார்கள். அவர்களின் வீட்டிற்கு நீங்கள் விருந்தாளியாகப் போனால் உங்களுக்கு கோப்பை கோப்பையாக காபி வந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். நீங்கள் பதில் உபசரிப்பின்போது உங்கள் வீட்டில் காபி கொடுக்க மறந்து விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். கோபித்துக் கொண்டு அதை உடனடியாகச் சுட்டிக் காண்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் களுக்கு காபி மோகம் அதிகம். நார்வே நாட்டில் சராசரி யாக ஒரு நபர் வருடத்திற்கு 11 கிலோ காபித் தூளை காபி குடிப்பதற்காக பயன்படுத்துகிறார். இவர்களின் பக்கத்து நாட்டவர்களான பின்லாந்துக்காரர் களும் காபி விஷயத்தில் லேசுப்பட்ட வர்கள் அல்ல. இவர்களின் வருடாந்திர உபயோகம் ஒரு நபருக்கு 10 கிலோ. மூன்றாமிடத்தில் இருக்கும் டென்மார்க் நாட்டவர் கள் பயன்படுத்துவது 9.7 கிலோ. இதில் உலக மக்களின் சராசரி 3.26 கிலோ. Thanks:Thanthi............ - Birundan - 10-09-2005 குளிருக்கு காபி குடிச்சால் நல்லாதான் இருக்கும். காபி உஷ்னத்தை கூட்டும். கூடுதலாக நித்திரை விழிப்பவர்கள் காப்பி குடித்தால் நித்திரை வராது. [size=9]காபி என்பது ஆங்கிலம் என்றால் காபி என்ற இடங்களில் குழம்பி என போடவும் - SUNDHAL - 10-09-2005 சரிங்கோ அண்னா.. - Mathan - 10-09-2005 ம் வேலை நேரத்தில் கணணி பார்க்கும் போது தூக்கம் வந்தால் 2 விஷயம் செய்யலாம் ,,,, 1) காப்பி குடிக்கலாம் (கிடைத்தால் Red Bull கூட) - Espresso என்றால் கூட நேரம் தாக்குபிடிக்கும் 2) கொஞ்ச நேரம் யாழ் பார்க்கலாம், ஆனால் இந்த coffee மற்றும் Red Bull அதிகம் குடிக்க கூடாது என்று சொல்கிறார்கள், அதில் இருக்கும் caffeine உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது, யாழ் பார்ப்பதில் உள்ள அபாயம் ... கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு திரும்ப வேலையை ஆரம்பிக்க முடியாது என்பது தான் ..... - Birundan - 10-09-2005 Mathan Wrote:ம் வேலை நேரத்தில் கணணி பார்க்கும் போது தூக்கம் வந்தால் 2 விஷயம் செய்யலாம் ,,,,சரியா சொன்னீங்க மதன் ஆனா யாழ் பார்த்தா காபி தேவை இல்ல வேலையை ஆரம்பிப்பதுதான் கஷ்டம். யாழவிட்டு போனாத்தானே வேலையை ஆரம்பிக்கிறது. :wink: - Vaanampaadi - 10-09-2005 Quote:ஆனால் இந்த coffee மற்றும் Red Bull அதிகம் குடிக்க கூடாது என்று சொல்கிறார்கள், அதில் இருக்கும் caffeine உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது, யாழ் பார்ப்பதில் உள்ள அபாயம் ... கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு திரும்ப வேலையை ஆரம்பிக்க முடியாது என்பது தான் ..... சரி,....நான் வேணாங்கல...பியர் குடிங்க ........ யார் வேணாங்கிறது ..... உங்க உடம்பு எந்தவிதத்திலும் பாதிக்காது தானே.....என்னா நான் சொல்றது....சரிங்களா????? - தூயா - 10-09-2005 ஆகா நாங்க எல்லாம் நோர்வே போன பிழைக்க முடியாது போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->வான்ஸ் அண்ணா, உடம்புக்கு பாதிப்பு இல்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> பியர் குடிக்கிறவங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய டமி வருமே. அதுவும் பாதிப்பு தானே
- SUNDHAL - 10-10-2005 அதுக்கு தான் ஜிம் இருக்கில்ல டமி வரமா இருக்க...... பியர்ல இருக்கிறது 99% தன்னிப்பா.................. save water drink beer னு எங்கையோ படிச்ச யாபகம்ங்க அம்மணி.... - தூயா - 10-10-2005 பியர் குடிக்கிறவங்களுக்கு சொன்ன, நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு பேசுறிங்கள்?? சுண்டல்ஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- SUNDHAL - 10-10-2005 ஒரு சப்போர்ட் தானே............. - RaMa - 10-10-2005 ஐயோ காபியால் சொந்தமாய் அனுபவப்பட்டு நொந்து போய் இருக்கின்றேன். எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக சொல்கின்றேன்... எனது வேலைக்கு அருகாமையில் timhortio என்னும் காபி கடை இருக்கின்றது. வேலைக்கு போகும் போதும் வரும்போதும் பிரேக் எடுக்கும் போதும் ஒரே காபி தான். இப்போது டொக்ரர் காபி குடிக்கப்படாது என்று சொல்லியிருக்கிறார் |