Yarl Forum
"கிளினிக் கிச்சு! கிச்சு!' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: "கிளினிக் கிச்சு! கிச்சு!' (/showthread.php?tid=2960)



"கிளினிக் கிச்சு! கிச்சு!' - SUNDHAL - 10-09-2005

ஹலோ நேயர்களே! வெல்கம் டூ லொள்ளு டீவியின் "கிளினிக் கிச்சு! கிச்சு!'. நேயர்களின் உடல் நலம், மனநலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உயிரோட்டமுள்ள பதில்களை அளிக்கிறார் இந்தியாவின் நெம்பர் (நைன்ட்டி) ஒன் டாக்டர் மைக்கேல் மதன காமராஜ்! டாக்டரைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு -இவர் வெறும் டாக்டரல்ல. ஏ டூ இஸட் எல்லாவித மருத்துவமும் தெரிந்த ஆல்-இன்-ஆல் டாக்டர். ஹோமியோபதி டூ சீதபேதி, யுனானி டூ அம்பானி, சித்த மருத்துவம் டூ செத்த மருத்துவம், சைக்காலஜி டூ லேடீஸ்காலேஜி என இவருக்குத் தெரியாத மருந்து வகைகள் எதிலுமே கிடையாது. இவர் சென்ற மாதம்தான் பான்பராக் பல்கலைக் கழகத்தில் "டாக்டர்' பட்டம் "வாங்கி' வைத்தியரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி நோய்களை ஓட ஓட விரட்ட வைக்க டாக்டரே உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

டாக்டர் : ஹலோ!

நேயர் : நான்தான் சாமிக்கண்ணு பேசறனுங்கோ! எனக்கு மூணு நாளா வவுத்த வலிக்குதுங்கோ!

டாக்டர் : அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க அம்மா ஆகப் போறீங்க!

நேயர் : யோவ். நான் ஆம்பளை!

டாக்டர் : ஓ...ஸôரி! நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்! நீங்க அப்பா ஆகப்போறீங்க!

நேயர் : என்ன வெளையாடுறீங்களா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல! வவுத்த வலிக்கு மருந்து சொல்லுன்னா...

டாக்டர் : ...ம், வயித்த வலிக்கு நிறைய மருந்து இருக்கு. ஆமா, சாமிக்கண்ணு நீங்க என்ன ராசி!

நேயர் : கடகம். அதுக்கென்ன?

டாக்டர் : அதுக்கென்னவா! சமீபத்துல நடந்த குருபெயர்ச்சிப் பலன்கள்படி கடக ராசிக்காரங்களுக்கெல்லாம் கடுமையா வயிறு வலிக்கும்னு காக்காச் சித்தர் சொல்லியிருக்காரு. அதனால நீங்க கடக ராசில இருந்து சிம்ம ராசிக்கு ஷிப்ட் ஆயிட்டீங்கன்னா, வலி நின்னுடும்!

நேயர் : யோவ், நீ டாக்டரா இல்ல ஜோசியக்காரனா? ஏதோ வீட்டை மாத்துற மாதிரில்ல ராசியை மாத்தச் சொல்லுற! வேற ராசிக்கு ஷிப்ட் ஆகி உக்கார நான் குரு பகவானா! போயா போலி டாக்டர்! (லைன் கட் ஆகிறது. அடுத்த அழைப்பு வருகிறது.)

நேயர் : ஆ.....

டாக்டர் : நான் உங்களை வாயைத் தொறக்கவே சொல்லலியே?

நேயர் : வலிக்குது டாக்டர்!

டாக்டர் : நான் உங்களுக்கு இன்னும் என்னோட முதல் ஊசியைப் போடவே இல்லீயே!

நேயர் : அய்யோ, படுத்தாதீங்க டாக்டர்! ஒரு வாரமா என் வலது காலுல கை வலி இருக்குது டாக்டர்!

டாக்டர் : இன்னொரு முறை சொல்லுங்க!

நேயர் : (சத்தமாக) எனக்கு ஒரு வாரமா வலது காலுல கை வலி இருக்குது டாக்டர்!

டாக்டர் : யோவ்! எனக்கே நக்கலா! காலுல எப்படியா கை வலி வரும்?

நேயர் : சொன்னா நம்ப மாட்டீங்க! முதல்ல கையிலதான் கை வலி வந்துச்சு. அது நின்னதும் அதேமாதிரி வலி காலுல எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. இது கன்ஃபார்மா கை வலிதான்! மருந்து சொல்லுங்க டாக்டர்.

டாக்டர் : "ஜூம்மாஞ்சி'ன்னு ஒரு தைலம் இருக்கு. அதை வாங்கி உன் கையை காலா நினைச்சுக்கிட்டு, கையிலயே அந்த தைலத்தை அடுப்புல சுட வைச்சி, கொதிக்கக் கொதிக்க கோரிக் கோரி ஊத்துனேனா போதும். வலி திருட்டு ரயில் ஏறி எங்கேயாவது போயிடும்!

நேயர் : ரொம்ப நன்றிங்க!

(அடுத்த அழைப்பு)

நேயர் : என் பேரு ஸ்வேதா. இந்தப் பிரச்சினை பத்தி நான் உங்ககிட்டதான் முதன் முதல்ல சொல்லப் போறேன்.

டாக்டர் : தாராளமா தயங்காமச் சொல்லுங்க. எனக்கு காது அரிக்குது.

நேயர் : ஆனா நான் என்னோட பிரச்சினையைச் சொல்றதுல ஒரு சின்ன பிரச்சினை இருக்கு.

டாக்டர் : அது என்ன பிரச்சினை?

நேயர் : பிரச்சினையைச் சொல்லுறதால வர்ற பிரச்சினையைப் பத்திக் கவலைப்படாம பிரச்சினையைச் சொல்லவா, இல்ல பிரச்சினையைச் சொல்லுறதுல உள்ள பிரச்சினையை முதல்ல சொல்லவான்னு இப்ப மூணாவதா புதுசா ஒரு பிரச்சினை டாக்டர்.

டாக்டர் : ஓ...இப்படி ஒரு பிரச்சினையை வைச்சுக் குழம்பி, மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்த்துக்கறதுதான் உங்க அடிப்படை பிரச்சினைன்னு எனக்குத் தோணுது.

நேயர் : அதுவும் ஒரு பிரச்சினை! ஆனா இப்ப பிரச்சினை அதனால வந்த பிரச்சினை இல்ல. இது வேற! இப்ப என்னால பிரச்சினையைச் சொல்லமுடியாது. ஆனா பிரச்சினைக்கு நீங்க தீர்வு சொல்லியே ஆகணும். ப்ளீஸ் டாக்டர்!

டாக்டர் : காலங்காத்தால 11 மணிக்கு டெய்லி எந்திரிச்சி, கடுக்காய் லேகியத்தை கால் கிலோ சாப்பிட்டுட்டு, காராச்சேவு தின்னுக்கிட்டே காலாற கடற்கரைப் பக்கமா நடந்து போய் காக்கா விரட்டுனீங்கன்னா, எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைச்சிரும்! (லைனை கட் செய்கிறார். அடுத்த அழைப்பு வருகிறது.)


டாக்டர் : ஹலோ! யார் பேசறது?

நேயர் : தாட்டர்....நா சொக்ஹலிங்கம். எனஹூ பேசுரபோ அலிக்கலி ராக்கு உலவுது தாட்டர். எலாவுடு மறந்து சொல்ங்க.

டாக்டர் : அப்படியா...எப்ப இருந்து இப்படி இருக்கு?

நேயர் : நி பொர்ந்தத்லே ர்ந்தே இபடிதான் ஈர்க்கு?

டாக்டர் : இதுக்கு நாட்டு வைத்தியத்துல ஒரு வேர் இருக்கு.

நேயர் : அத நா வல்கணுமா? எங் வீட்ழ தொட்தியே கெடியாதெ!

டாக்டர் : அதை நீங்க வளர்க்க வேண்டாம். அந்த வேரோட பேரு "யளனகபக' வேர். அதை வேரோட புடுங்கி ஒரு மண்டலத்துக்கு கசாயம் காய்ச்சி குடிச்சீங்கன்னா, அப்புறம் உங்க நாக்குல சொற்களெல்லாம் சோக்கா டான்ஸ் ஆடும்.

நேயர் : நா ஏந் குடிகநும்? நா தா ஏக்கநவெ குட்ஷிற்க்கேனெ!

டாக்டர் : யோவ்! எங்க இருந்துயா பேசுற?

நேயர் : தாஸ்மாக்ல இர்ந்த்....

(டென்ஷனாகி லைனைக் கட் செய்கிறார். அடுத்த அழைப்பு..)


நேயர் : அய்யோ...டாக்டர் நீங்கதான் என் குலதெய்வம்..நீங்கதான் என் புள்ளய காப்பாத்தணும்.

டாக்டர் : பதட்டப்படாதீங்க...என்ன விஷயம்னு சொல்லுங்க!

நேயர் : போன மாசம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். எப்ப அவ பின்னால போக ஆரம்பிச்சானோ அதுல இருந்து திடீர்த் திடீர்னு எதிர்பார்க்காத நேரத்துல என்னென்னமோ பண்ணுறான்.

டாக்டர் : உங்க பையன் பேரு என்னம்மா?

நேயர் : சிதம்பர சிகாமணிதாசன்!

டாக்டர் : அவங்க தாத்தா பெயரா?

நேயர் : அதெல்லாம் தெரியாதுங்க! இப்ப ஒரு மூணு வருசமாத்தான் என் பையனா இருக்கான். நான்தான் பேரு வைச்சேன்.

டாக்டர் : ஓ..தத்து எடுத்திருக்கீங்களா! சரி சரி! பையனை நல்லா இழுத்து மூச்சு விடச் சொல்லுங்க...நல்லா நாக்கை வெளிய நீட்டச் சொல்லுங்க!

நேயர் : என்ன விளையாடுறீங்களா? போன்ல எப்படி இதெல்லாம் பண்ண முடியும்?

டாக்டர் : சரி பையனை போன்ல என்கிட்ட ரெண்டு வார்த்தையாவது பேசச் சொல்லுங்க!

எதிர்முனை : லொள்...லொள்...

டாக்டர் : ஹலோ பையனைப் பேசச் சொல்லுங்க!

நேயர் : இப்ப என் பையன்தாங்க பேசுனான். என்ன வியாதின்னு கண்டுபிடிச்சிட்டீங்களா டாக்டர்?

(லொள்ளு நேயர்களின் அலம்பல் தாங்காமல் டாக்டர் பேக்-அப் ஆகிறார்)Thanks Dinamani....


- SUNDHAL - 10-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 10-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 10-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 10-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-10-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 10-10-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 10-11-2005

lol: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 10-11-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுட்டுப் போட்ட சுண்டல் அண்ணாக்கு நன்றி.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->