Yarl Forum
அழுகையை நிறுத்தாததால் 5-வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அழுகையை நிறுத்தாததால் 5-வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய (/showthread.php?tid=2948)



அழுகையை நிறுத்தாததால் 5-வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய - SUNDHAL - 10-10-2005

ஜப்பானின் யோகாகமா பகுதியை சேர்ந்த பெண் ïகோ சுசியா. வயது31. இவ ரது பெண் குழந்தை அகேன். 1 வயதே நிரம்பி உள்ள இந்த குழந்தை அடிக்கடி அழுது முரண்டு பிடித்தது. தூங்க வைத்தாலும் சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருந்தது.

இதனால் சம்பவத்தன்று அந்த குழந்தை தூங்காமல் அடம்பிடித்து அழுது கொண்டே இருந்தது. இதனால் அந்த தாய் பொறுமை இழந்து விட்டார்.

கோபத்தில் அந்த குழந் தையை தான் குடியிருந்த வீட்டின் 5-வது மாடியில் இருந்து வீசி எறிந்து விட்டார்.

எறியப்பட்ட அந்த குழந்தை அங்குள்ள மரத்தின் மீது விழுந்தது. தரையில் விழாமல் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.

மரக்கிளையில் மோதி அடிபட்டத்தில் அதன் உடல், முகம் ரத்தக்காயங்கள் ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கதவர்கள் அந்த குழந்தையை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குழந்தையை வீசி எறிந்த அந்த தாயை போலீசார் கைது செய்தனர். ஜன்னலில் இருந்து தவறி விழுந்து விட்டது என்று கூறிய அந்த தாய், பிறகு "குழந்தை ஓயாமல் அழுததால் வீசி எறிந்தேன்'' என்று ஒப்புக் கொண்டார்.


- MUGATHTHAR - 10-10-2005

என்னதம்பி களத்திலை பெண்கள்தான் பாசம் அன்பு மிக்கவர்கள் எண்டு எழுதுறாங்கள் (சமைச்சா அன்பைப்போட்டுச் சமைக்கிளமாம்) அதுக்காண்டியே தேடிப்பிடிச்சு இப்பிடியான செய்திகளைப்போடுறீர்போல கிடக்கு வாழ்க உமது சேவை
அது சரி அந்த மனிசிக்கு என்ன தண்டனை குடுக்கிறது???


- SUNDHAL - 10-11-2005

என்ன குடுக்கலாம் என்டுறீங்க...............?


- Rasikai - 10-11-2005

அடப் கடவுளே இப்படியும் நடக்குதா? Cry Cry

:evil: :evil: :evil: :evil: :evil:


- கீதா - 10-11-2005

இப்படி ஒரு தாய் இருக்கிறாதானே :evil: குழந்தை பாவம் Cry Cry