Yarl Forum
மீனவர்கள் மீது கடற்படை கொடூரத் தாக்குதல - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீனவர்கள் மீது கடற்படை கொடூரத் தாக்குதல (/showthread.php?tid=2946)



மீனவர்கள் மீது கடற்படை கொடூரத் தாக்குதல - iruvizhi - 10-10-2005

வத்திராயன் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை கொடூரத் தாக்குதல்- ஒரு மீனவர் கதி என்ன?


யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதி மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையால் நடுக்கடலில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.


இன்று திங்கட்கிழமை காலை கரைக்குத் திரும்பிய மீனவர்களின் இயந்திரங்களும், படகுகளும் கடுமையாக சேதமடைந்திருந்தன.

இதனிடையே மருதங்கேணியைச் சேர்ந்த கடற்றொழிலுக்குச் சென்ற வேதாரணியம் சிறீ ஜெகன் என்ற மீனவர் வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர்கள் வத்திராயன் மீனவர் சங்கத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த மீனவரைத் தேடும் பணிகளில் மீனவர் சங்கத்தின் ஈடுபட்டுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=20727


- RaMa - 10-11-2005

நன்றி தகவலுக்கு